ரெண்டும் ரெண்டும் அஞ்சு

ரெண்டும் ரெண்டும் அஞ்சு
Rendum Rendum Anju
தலைப்பு அட்டை
இயக்கம்ஜெயபாரதி
தயாரிப்புஇராஜபாளையம்
ஜனகராஜ்
கதைஆர். கோதண்டராமன் (வசனம்)
திரைக்கதைஜெயபாரதி
இசைகங்கை அமரன்
நடிப்புசரத் பாபு
அம்பிகா
ஒளிப்பதிவுஆர். எம். இரமேஷ்
படத்தொகுப்புஎஸ். நடராஜன்
கலையகம்தனலட்சுமி மூவி மேக்கர்சு
வெளியீடு3 சூன் 1988 (1988-06-03)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ரெண்டும் ரெண்டும் அஞ்சு (Rendum Rendum Anju) என்பது 1988 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் உளவியல் பரபரப்பூட்டும் திரைப்படமாகும்.[1] இப்படத்தில் ஜெயபாரதி இணை எழுத்தாளராகவும் இயக்குநராகவும் பங்காற்றினார். இப்படத்தில் சரத்பாபு, அம்பிகா ஆகியோர் நடித்திருந்தனர். சந்திரசேகர், நாசர், வெண்ணிற ஆடை மூர்த்தி , செந்தில் லியோ பிரபு ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1988 சூன் 3 அன்று வெளியிடப்பட்டது.

நடிகர்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

ரெண்டும் ரெண்டும் அஞ்சு ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் வெர்டிகோ (1958) திரைப்படத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இத்திரைப்படத்திற்காக தான் முதலில் விஜயகாந்தை அணுகியதாக ஜெயபாரதி தெரிவித்தார், "ஆனால் அவரிடமிருந்து எனக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை", என்று தெரிவித்த அவர் சரத் பாபு, அம்பிகா, நாசர், வெண்ணிற ஆடை மூர்த்தி போன்ற நட்சத்திரக் கலைஞர்களைக் கொண்டு படத்தை உருவாக்கி 50 நாட்களுக்குள் படப்பிடிப்பை முடித்தார்.[2]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார். கவிஞர் வாலி பாடல் வரிகளை எழுதியிருந்தார். [3][4]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "கானக் கருங்குயிலே"  மலேசியா வாசுதேவன், மனோ, கே. எஸ். சித்ரா, எஸ். என். சுரேந்தர் 4:13
2. "பன்னீர் பூவின்"  கே. எஸ். சித்ரா 4:28
3. "எதுக்கும் ஒரு"  கே. எஸ். சித்ரா 3:59
4. "வளர்பிறை"  மனோ 4:21
மொத்த நீளம்:
17:01

வெளியீடும் வரவேற்பும்

[தொகு]

ரெண்டும் ரெண்டும் அஞ்சு 1988 சூன் 3 அன்று வெளியிடப்பட்டது. மேலும் குறைந்த அளவிலான வெளியீட்டைக் கொண்டிருந்தது.[5][6] கல்கி இதழின் இரட்டையர்கள் ஜெயமன்மதன் வித்தியாசமான கதையைச் சொல்ல விரும்பியதற்காக ஜெயபாரதியைப் பாராட்டினர். திரைப்படத்தின் இசையைப் பாராட்டி படத்தின் முதல் பாதி பொழுதுபோக்காக இருந்தது. ஆனால் இடைவேளைக்குப் பிறகு அது தடுமாறியது என்று கூறினர்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Baskaran, S. Theodore (1996). The Eye of the Serpent: An Introduction to Tamil Cinema. Chennai: East West Books. p. 182. OCLC 243920437.
  2. Mannath, Malini (26 திசம்பர் 2002). "Excerpts from an interview with director Jayabharati". Chennai Online. Archived from the original on 26 மார்ச்சு 2005. Retrieved 19 திசம்பர் 2023.
  3. "Rendum Rendum Anju (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 1 January 1988. Archived from the original on 17 நவம்பர் 2023. Retrieved 17 நவம்பர் 2023.
  4. "Rendum Rendum Anchu- Sakkarai Pandhal Tamil Film LP Vinyl Record by Ilayaraaja". Mossymart. Archived from the original on 17 நவம்பர் 2023. Retrieved 17 நவம்பர் 2023.
  5. "Rendum Rendum Anju (1988)". Screen 4 Screen. Archived from the original on 17 நவம்பர் 2023. Retrieved 17 நவம்பர் 2023.
  6. "The numbers game: Tamil cinema's numerical titles". 2 November 2017 இம் மூலத்தில் இருந்து 18 நவம்பர் 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231118052212/https://www.thehindu.com/entertainment/the-numbers-game-tamil-cinemas-numerical-titles/article19967003.ece. 
  7. ஜெயமன்மதன் (26 June 1988). "ரெண்டும் ரெண்டும் அஞ்சு". கல்கி. p. 64. Archived from the original on 25 ஆகத்து 2023. Retrieved 17 நவம்பர் 2023 – via Internet Archive.

வெளி இணைப்புகள்

[தொகு]