பூர்வி பதினைந்தாவது மேளகர்த்தா இராகமும், "அக்னி" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின் மூன்றாவது இராகமுமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும்.
இந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த ரிசபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம் (ப), சுத்த தைவதம் (த1) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
ஆரோகணம்: | ச ரி1 க3 ப த1 ச் |
அவரோகணம்: | ச் த1 ப க3 ரி1 ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ" இராகம் என்பர்.
வகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
---|---|---|---|
கிருதி | கிருஹபலமேமி | தியாகராஜ சுவாமிகள் | ஆதி |
கிருதி | என் தாயே | எம். எம். தண்டபாணி தேசிகர் | ஆதி |
கிருதி | கோபாலக | சுவாதித் திருநாள் ராம வர்மா | மிச்ரசாபு |
கிருதி | சரவணபவ | முத்துசுவாமி தீட்சிதர் | ரூபகம் |