1932 ஒலிம்பிக் போட்டியில் வெர்னீயக்சு | |
தனிநபர் தகவல் | |
---|---|
தேசியம் | இந்தியர் |
பிறப்பு | கொல்கத்தா, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 18 அக்டோபர் 1910
இறப்பு | 25 மே 1997 டவுன்வில்லே, குயின்சுலாந்து, ஆத்திரேலியா | (அகவை 86)
விளையாட்டு | |
விளையாட்டு | ஓட்டப்பந்தய வீரர் |
நிகழ்வு(கள்) | 100 மீட்டர் |
சாதனைகளும் விருதுகளும் | |
தனிப்பட்ட சாதனை(கள்) | 100 yd – 9.7 (1934) 200 m – 22.5 (1932) |
ரொனால்டு ஆல்ஃபிரட்டு வெர்னீயக்சு (Ronald Alfred Vernieux) இந்தியாவைச் சேர்ந்த ஓர் ஓட்டப்பந்தய வீரராவார். 1910 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி இவர் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடை கால ஒலிம்பிக் போட்டிகளில் ரொனால்டு 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சார்பாகப் போட்டியிட்டார். 1934 ஆம் ஆண்டு இலண்டன் நகரில் நடைபெற்ற இரண்டாமாண்டு பிரித்தானியப் பேரரசர் விளையாட்டுப் போட்டிகளில் 4×110 யார்டு தொடரோட்டப் போட்டியில் பங்கேற்றார். இறுதிப் போட்டியில் ஆறாம் இடத்தைப் பிடித்தார். (கியான் பல்லா, சகாங்கிர் கான் மற்றும் நிரஞ்சன் சிங் ஆகியோர் இவரது அணியில் இடம்பெற்றிருந்தனர். 100 மற்றும் 220 யார்டு போட்டிகளில் இவர் பந்தயத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். [1] 1997 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி ரொனால்டு காலமானார்.