ரொறொன்ரோ மாவட்ட பாடசாலை வாரியம் | |
---|---|
அமைவிடம் | |
5050 யோங்கே சாலை, ரொறன்ரோ, ஒன்றாரியோ, M2N 5N8 கனடா | |
மாவட்டத் தகவல் | |
நிறுவப்பட்டது | சனவரி 1, 1998 (7 வாரியங்களின் ஒருங்கிணைப்பு மூலமாக) |
மேற்பார்வையாளர்கள் | 20 (பகுதிகள்) 2 (மாற்று மற்றும் முதியோர் திட்டங்கள்) |
பள்ளிகள் | 451 துவக்கநிலைப் பள்ளிகள் 105 உயர்நிலைப் பள்ளிகள் 5 முதியோர் கல்வி நிலையங்கள்[1] |
நிதிநிலை அறிக்கை | ~CA$3 பில்லியன் (2016-2017)[2] |
மாவட்ட குறியீடு | B66052 |
மாணவர்களும் ஆசிரியர்களும் | |
மாணவர்கள் | 188,304 துவக்கநிலை மாணவர்கள் 87,273 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 14,000 முதியவர் கல்வி மாணவர்கள்[3] |
பிறத் தகவல்கள் | |
வாரியத் தலைவர் | இராபின் பில்கே |
கல்வி இயக்குநர் | யோன் மல்லாய் (பொறுப்பில்) |
தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர்கள் | 22 |
மாணவ அறங்காவலர்கள் | 2 |
வலைத்தளம் | www |
ரொறோன்ரோ மாவட்டப் பள்ளிச்சாலை வாரியம் (Toronto District School Board, TDSB; தமிழக வழக்கு: டோரொன்டோ மாவட்டப் பள்ளிக்கல்வி வாரியம், 1999க்கு முன்பாக ஆங்கில-மொழி பொது மாவட்டப் பள்ளி வாரியம் எண். 12[4]) கனடாவின் ஒன்றாரியோ மாநிலத்தில் ரொறன்ரோவிலுள்ள ஆங்கில மொழி சமயச் சார்பற்ற பொதுநிலைப் பள்ளிச்சாலை வாரியமாகும். இந்த வாரியத்தைத் தவிர இதே பகுதியில் சிறுபான்மையினருக்காக பொதுநிலை-சமயச் சார்பற்ற பிரான்சிய மொழி (கான்சில் இசுகூலேர் வயமாண்டே), பொதுநிலை-சமயச் சார்பு ஆங்கில மொழி (ரொறொன்ரோ கத்தோலிக்க மாவட்டப் பள்ளிச்சாலை வாரியம்), மற்றும் பொதுநிலை-சமயச் சார்பு பிரான்சிய மொழி (கான்சில் இசுகூலேர் தெ டிஸ்ட்ரிக்ட் கத்தோலிக்கு சென்டர்-சுத்) பள்ளிகளும் அவற்றின் வாரியங்களும் அரசுநிதி பெற்று நடத்தப்படுகின்றன. இதன் தலைமையிடம் நோர்த் யோர்க்கில் உள்ளது.[5] இந்த வாரியம் கனடாவின் மிகப் பெரிய பள்ளிச்சாலை வாரியமாகவும் வட அமெரிக்காவில் நான்காவது பெரிய பள்ளிச்சாலை வாரியமாகவும் விளங்குகின்றது.