லகாட் டத்து (P188) மலேசிய மக்களவைத் தொகுதி சபா | |
---|---|
Lahad Datu (P188) Federal Constituency in Sabah | |
லகாட் டத்து மக்களவைத் தொகுதி (P188 Lahad Datu) | |
மாவட்டம் | லகாட் டத்து மாவட்டம் கூனாக் மாவட்டம் கினபாத்தாங்கான் மாவட்டம் |
வட்டாரம் | தாவாவ் பிரிவு சண்டக்கான் பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 100,256 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | லகாட் டத்து மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | லகாட் டத்து; கூனாக்; தாவாவ் |
பரப்பளவு | 8,594 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2019 |
கட்சி | சபா பாரம்பரிய கட்சி |
மக்களவை உறுப்பினர் | யூசோப் அப்டால் (Yusof Apdal) |
மக்கள் தொகை | 299,550 (2020) |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
லகாட் டத்து மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Lahad Datu; ஆங்கிலம்: Lahad Datu Federal Constituency; சீனம்: 拿笃国会议席) என்பது மலேசியா, சபா, தாவாவ் பிரிவு; சண்டக்கான் பிரிவு ஆகிய 2 மாநிலப் பிரிவுகளில்; லகாட் டத்து மாவட்டம், கூனாக் மாவட்டம், கினபாத்தாங்கான் மாவட்டம் ஆகிய 3 மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P188) ஆகும்.[4]
லகாட் டத்து மக்களவைத் தொகுதி 2019-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2022-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
2022-ஆம் ஆண்டில் இருந்து கினபாத்தாங்கான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[5]
லகாட் டத்து மாவட்டம் என்பது சபா மாநிலம், தாவாவ் பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் லகாட் டத்து நகரம்.
சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலு மாநகரத்தில் இருந்து சுமார் 430 கி.மீ. (270 மைல்) தொலைவில் இந்த மாவட்டம் அமைந்துள்ளது. 2020-ஆம் ஆண்டு மலேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி லகாட் டத்து மாவட்டத்தில் 299,550 மக்கள் வசிக்கின்றனர்.
'டத்து' என்பது பிலிப்பீன்சு தீவுக்கூட்டம் (Philippine Archipelago) முழுவதிலும் உள்ள ஏராளமான பழங்குடியின மக்களின் ஆட்சியாளர்களைக் குறிக்கும் ஒரு விருது. பழங்குடியின மக்களின் ஆட்சியாளர்கள் என்பது அந்த இனங்களின் தலைவர்கள், அல்லது இறையாண்மை கொண்ட மன்னர்கள் என பலவிதமாகக் குறிப்பிடுகிறது.
லகாட் டத்து பகுதியை பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் (North Borneo Chartered Company) கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, லகாட் டத்து மாவட்டம் நிறுவப்பட்டது. அதன்பிறகு தென்னை கொப்பரை உற்பத்தி; மற்றும் புகையிலை உற்பத்தியில் லகாட் டத்து பகுதி சிறந்து விளங்கியது.
லகாட் டத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2019 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
லகாட் டத்து தொகுதி 2019-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
14-ஆவது மக்களவை | P188 | 2019-2021 | முகமடின் கெத்தாப்பி (Mohammadin Ketapi) |
வாரிசான் |
2021 | சுயேச்சை | |||
2021–2022 | சபா மக்கள் கூட்டணி (GRS) (பெர்சத்து) | |||
2022 | மலேசிய தேசிய கட்சி | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | யூசோப் அப்டால் (Yusof Apdal) |
வாரிசான் |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
யூசோப் அப்டால் (Yusof Apdal) | சபா பாரம்பரிய கட்சி (Heritage) | 27,116 | 46.64 | 46.64 | |
மாய்சத்தூல் அல்காம் அல்வி (Maizatul Alkam Alawi) | பாரிசான் நேசனல் (BN) | 22,740 | 39.11 | 39.11 | |
ஒசுகார் சியா இயூ கோக் (Oscar Sia Yu Hock) | பாக்காத்தான் (PH) | 8,289 | 14.26 | 14.26 | |
மொத்தம் | 58,145 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 58,145 | 98.27 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 1,022 | 1.73 | |||
மொத்த வாக்குகள் | 59,167 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 1,00,256 | 59.02 | 58.00 | ||
Majority | 4,376 | 7.53 | |||
சபா பாரம்பரிய கட்சி கைப்பற்றியது (தொகுதியின் முதல் தேர்தல்) | |||||
மூலம்: [7] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)