| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
2-ஐதராக்சிபுரோப்பேன்நைட்ரைல்
| |||
வேறு பெயர்கள்
அசிட்டால்டிகைடு சயனோ ஐதரின்
| |||
இனங்காட்டிகள் | |||
78-97-7 | |||
ChemSpider | 21106532 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 6572 | ||
| |||
UNII | SJ38QDA188 | ||
பண்புகள் | |||
C3H5NO | |||
வாய்ப்பாட்டு எடை | 71.08 g·mol−1 | ||
தோற்றம் | மஞ்சள் | ||
உருகுநிலை | −40 °C (−40 °F; 233 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
லாக்டோநைட்ரைல் (Lactonitrile) என்பது CH3CH(OH)CN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். தொழிற்துறையில் எத்தில் லாக்டேட் மற்றும் லாக்டிக் அமிலம் தயாரிக்கும்போது ஒர் இடைநிலை வேதிப்பொருளாக இது கிடைக்கிறது.[1][2][3] அசிட்டால்டிகைடின் சயனோ ஐதரின் சேர்மமான இது நிறமற்ற ஒரு நீர்மமாகும். இருப்பினும் சிதைந்த மாதிரிகள் மஞ்சள் நிறத்தில் தோன்றும்.
அசிட்டால்டிகைடுடன் ஐதரசன் சயனைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் லாக்டோநைட்ரைல் உருவாகும்.[1]
லாக்டிக் அமிலத்தினுடைய எசுத்தர்கள் தயாரிப்பில் லாக்டோநைட்ரைல் பயன்படுகிறது.[1]
சயனோ ஐதரின்கள் அதிக நச்சுத்தன்மை வாய்ந்த ஐதரசன் சயனைடிற்கான ஆதாரமாகும். அமெரிக்க அவசரகால திட்டமிடல் மற்றும் சமூகம் அறியும் உரிமைச் சட்டத்தின் (42 யு.எசு.சி. 11002) பிரிவு 302 இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி அமெரிக்காவில் லாக்டோநைட்ரைல் மிகவும் ஆபத்தான வேதிப்பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கணிசமான அளவில் உற்பத்தி செய்யவும் சேமித்து வைக்கவும் அல்லது பயன்படுத்தவும் அறிக்கை செய்து அனுமதி பெற வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளது.[4]