லாலா
Lala লালা | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
மாவட்டம் | ஐலாகண்டி |
அரசு | |
• வகை | தேர்தல் |
• நிர்வாகம் | லாலா நகர மையம் |
ஏற்றம் | 21 m (69 ft) |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | அசாமி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-AS |
வாகனப் பதிவு | AS 24 |
லாலா (Lala ) என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இருக்கும் ஐலாகண்டி மாவட்டத்திலுள்ள ஒரு நகரமையப் பகுதி அல்லது வர்த்தகப் பகுதியாகும்.
24.55° வ 92.6° கி என்ற அடையாள ஆள்கூறுகளில் கடல் மட்டத்திலிருந்து 21 மீட்டர்கள் அல்லது 69 அடி உயரத்தில் இந்நகரப்பகுதி அமைந்துள்ளது.
2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [1] லாலா நகரத்தின் மக்கள்தொகை 10345 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 5213 நபர்கள் ஆண்கள் மற்றும் 5132 நபர்கள் பெண்களாவர். இதன்படி ஆண்கள் எண்ணிக்கை 50% நபர்கள் மற்றும் பெண்கள் 50% நபர்கள் ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு சதவீதம் 81% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது அதிகமாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 84% நபர்கள் ஆண்கள் மற்றும் 78% நபர்கள் பெண்களாவர். லாலா நகரப்பகுதியில் 11% நபர்கள் 6 வயதுக்கு குறைவானவர்களாக உள்ளனர்.