லெங்கோங் (P055) மலேசிய மக்களவைத் தொகுதி பேராக் | |
---|---|
Lenggong (P055) Federal Constituency in Perak | |
மாவட்டம் | உலு பேராக் மாவட்டம் பேராக் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 36,950 (2023)[1] |
வாக்காளர் தொகுதி | லெங்கோங் தொகுதி[2] |
முக்கிய நகரங்கள் | கிரிக், லெங்கோங், குரோ, பெத்தோங் |
பரப்பளவு | 4,521 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
கட்சி | பாரிசான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | சம்சுல் அனுவார் நசுரா (Shamsul Anuar Nasarah) |
மக்கள் தொகை | 37,428 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2004 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
லெங்கோங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Lenggong; ஆங்கிலம்: Lenggong Federal Constituency; சீனம்: 玲珑国会议席) என்பது மலேசியா, பேராக், உலு பேராக் மாவட்டத்தில் (Hulu Perak District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P055) ஆகும்.[6]
லெங்கோங் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
2004-ஆம் ஆண்டில் இருந்து லெங்கோங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
லெங்கோங் நகரம், மலேசியா, பேராக் மாநிலத்தில் ஒரு சிறிய கிராமப் புறப் பட்டணம். ஈப்போ மாநகரத்தில் இருந்து 100 கி.மீ. வடக்கே உள்ளது. கோலாகங்சார் பட்டணத்தில் இருந்து கிரிக் பட்டணத்திற்குப் போகும் வழியில் இந்தப் பட்டணம் அமைந்து இருக்கிறது. தீபகற்ப மலேசியாவில் அகழ்வாராய்ச்சிக்கு மிகவும் புகழ் பெற்ற இடம்.
இந்த நகரத்தைச் சுற்றிலும் பல நூறு சுண்ணாம்பு குன்றுகளும், மலைகளும் உள்ளன. ரப்பர், செம்பனைத் தோட்டங்களும் உள்ளன. இங்குள்ள காடுகள் 90 இலட்சம் ஆண்டுகள் பழமையானவை. இங்கே சீனர்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.
லெங்கோங் நகரை ஒரு திறந்த வெளி கண்காட்சியகம் என்று அழைப்பதும் உண்டு. பழங்காலத்தில் பயன் படுத்தப் பட்ட மண் பாண்டங்கள், ஆயுதங்கள், கல் ஆயுதங்கள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப் பட்டு உள்ளன.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மனிதர்கள் இங்கே வாழ்ந்து இருக்கிறார்கள். அந்த மனிதர்களின் எலும்பு கூடுகளில் சில கிடைத்து உள்ளன. ஓர் எலும்புக் கூட்டிற்குப் பேராக் மனிதன் எலும்புக் கூடு என்று பெயர் வைக்கப் பட்டு உள்ளது. அது 11,000 ஆண்டுகள் பழமையானது.
லெங்கோங் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (2004 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
2004-ஆம் ஆண்டில் கிரிக்; செண்டரோ மக்களவைத் தொகுதிகளில் இருந்து லெங்கோங் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
11-ஆவது மக்களவை | P055 | 2004–2008 | கம்சியா இயோப் (Khamsiyah Yeop) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
12-ஆவது மக்களவை | 2008–2013 | சம்சுல் அனுவார் நசரா (Shamsul Anuar Nasarah) | ||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
36,950 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
28,189 | 76.30% | ▼ - 3.42% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
27,679 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
67 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
443 | ||
பெரும்பான்மை (Majority) |
879 | 3.18% | ▼ - 21.70 |
வெற்றி பெற்ற கட்சி | பாரிசான் நேசனல் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம் [7] |
வேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
சம்சுல் அனுவார் நசுரா (Shamsul Anuar Nasarah) |
பாரிசான் | 27,679 | 12,588 | 45.48% | - 8.49 % ▼ | |
முகமது ரிபாட் ரசுமான் (Muhammad Rifaat Razman) |
பெரிக்காத்தான் | - | 11,709 | 42.30% | + 42.30% | |
ஜுரே லத்தீப் ரோசுலி (Jurey Latiff Mohd Rosli) |
பாக்காத்தான் | - | 3,382 | 12.22% | - 4.72% ▼ |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)