லெசி சிங் Leshi Singh | |
---|---|
![]() | |
அமைச்சர், உணவு & நுகர்வோர் பாதுகாப்புத் துறை பீகார் அரசு | |
சட்டமன்ற உறுப்பினர் பீகார் | |
தொகுதி | தாமதா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 சனவரி 1974 மால்திகா, பூர்ணியா மாவட்டம், பீகார் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | ஐக்கிய ஜனதா தளம் (2015–present) |
வாழிடம் | சராசி கிராமம், சராசி, தானா சர்சி, பூர்ணியா, பீகார் |
கல்வி | பன்னிரண்டாம் வகுப்பு[1] |
பணி | சட்டமன்ற உறுப்பினர் பீகார் |
தொழில் | சமூக சேவகர் |
லெசி சிங் (Leshi Singh) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினைச் சேர்ந்தவர்.
லெசி சிங் நிதிஷ் குமார் அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார்.[2] முன்னதாக, பீகார் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக லெசி இருந்துள்ளார். 2000, 2005 (பிப்.), 2010, 2015, 2020 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தல்களில், லெஷி சிங் பீகாரின் தம்தாஹா தொகுதியில் வெற்றி பெற்று சட்டப் பேரவை உறுப்பினரானார். இவர் தம்தாஹா (பூர்ணியா) தொகுதியில் 5வது முறையாகச் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
தற்போது, இவர் பீகார் அரசில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சராக உள்ளார்.[3][4] ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக லெசி கருதப்படுகிறார்.
லெசி சமதா கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவரும் கும்பல் தலைவனுமான மதுசூதன் சிங் என்கிற புதன் சிங் இவரின் கணவராவார். புதன் சிங் 2000 ஆம் ஆண்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[5]
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)