லைகோடான் கேரியானடசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | கொலுபிரிடே
|
துணைக்குடும்பம்: | கொலும்பிரினே
|
பேரினம்: | லைகோடான்
|
இனம்: | லை. கேரியானடசு
|
இருசொற் பெயரீடு | |
லைகோடான் கேரியானடசு குக்ல், 1820 |
லைகோடான் கேரியானடசு (Lycodon carinatus) என்பது கொலுபிரிடே குடும்பத்தைச் சேர்ந்த பாம்பு சிற்றினம் ஆகும். இது இலங்கைத் தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இந்தப் பாம்பு பொதுவாக இலங்கை ஓநாய் பாம்பு என்றும், சிங்களத்தில் தாரா காரவாலா (දාර කරවලා) அல்லது தாரா ராடனகயா (දාර රදනකයා) என்றும் அழைக்கப்படுகிறது.
இலங்கை வரையன் பாம்பின் முதுகுப்புறம் கருமையான நிறத்தில், 19 தனித்துவமான வெள்ளை வளையங்களுடன் காணபப்டும். முதிர்ச்சியடைந்த பாம்புகளில் இதன் எண்ணிக்கை குறைந்தோ அல்லது முற்றிலும் இல்லாமல் காணப்படலாம். கருப்பு பட்டைகள் இடுப்புப் பகுதி வரை நீட்டிக்கப்படுகின்றன. செதில்கள் அடித்தளக் கட்டையுடன், மந்த நிறத்தில் காணப்படும். நடுப்பகுதி செதில்கள் 17 முதல் 19 வரையிலும், வயிற்றுப் பகுதியில் 180 முதல் 202 வரையும், வாலடியில் 42 முதல் 64 வரை காணப்படும்.
இலங்கை வரையன் பாம்பு இரவாடுதல் வகையின. நிலப்பரப்பில் பகலில் காடுகளில் இடிபாடுகளுக்கு அடியில் ஒளிந்து காணப்படும். இதன் உணவாகத் தவளைகள், அரணைகள், தரைப்பல்லி, சிறிய நச்சு அல்லாத பாம்புகள் உள்ளன.
லை. கேரியானடசு முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடிய பாம்பு ஆகும். இது ஒரு நேரத்தில் 4 முதல் 7 முட்டைகளை இடும்.
லை. கேரியானடசு சிற்றினமானது 2013ஆம் ஆண்டில் லைகோடான் பேரினத்திற்கு செர்காசுபிலியிலிருந்து மாற்றப்பட்டது.