வஞ்சிக்குளம் | |
---|---|
அமைவிடம் | கேரளம், திருச்சூர் |
முதன்மை வெளியேற்றம் | Thrissur Kole Wetlands |
வடிநில நாடுகள் | இந்தியா |
வஞ்சிக்குளம் ( மலையாளம் :വഞ്ചികുളം) என்பது தென்னிந்திய மாநிலமான, கேரளத்தின், திரிசூர் நகரில் உள்ள ஒரு நன்னீர் ஏரி ஆகும். பழங்காலத்தில் திருச்சூரை கொச்சியுடன் இணைக்கும் நீர் வழிப் பாதையாக இந்தக் குளம் இருந்தது. [1] [2] [3] [4]
பழங்காலத்தில், திருச்சூர் மாவட்டம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டத்தின் கால்வாய்கள் மற்றும் உப்பங்கழிகளுடன் வஞ்சிகுளம் இணைக்கப்பட்டதாக இருந்தது. இது ஒரு பெரிய வர்த்தக மையமாகவும் இருந்தது. இதன் வழியாக கொச்சி, ஆலப்புழா போன்ற மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அருகிலுள்ள துறைமுகங்களுக்கும் பொருட்களும், பயணிகளும் கொண்டு செல்லப்பட்டனர். ஷோரனூர்-கொச்சின் துறைமுகப் பிரிவு தொடருந்து பாதை வந்த பிறகு, உப்பங்கழிகள் அதன் பெருமையை இழந்தன. வஞ்சிகுளப் பகுதிகளில் பழங்காலத்தில் வணிகக் கிடங்குகள் இருந்தன. [5]