வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்

வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
துறை மேலோட்டம்
வகைGovernment agency
மூல அமைப்புசாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம்
வலைத்தளம்parivahan.gov.in

வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (Regional Transport Office, RTO) இந்தியாவின் மோட்டார் வாகனச் சட்டம், 1988இன் பிரிவு 213 (1)இன் கீழ் அமைக்கப்பட்ட மாநில அரசுகளால் நிருவகிக்கப்படும் அலுவலகம் ஆகும். இந்தச் சட்டத்தின் பல்வேறு விதிகளை செயற்படுத்துவது இதன் பொறுப்பாகும்.இது மாநில அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்குகின்றது. இந்தியாவில் பதிவு இலக்கத்தகடுகளையும்[1] ஓட்டுனர் உரிமங்களையும்[2] வழங்குகிறது.

இந்த அலுவலகத்தின் முதன்மை நோக்கங்களாக தமிழக அரசு அறிவித்துள்ளவை[3]:-

  • குடிமக்களுக்கு அனைத்து சேவைகளையும் திறனுடன் வழங்குதல்;
  • வண்டிகள் மீதான அனைத்து வரிகளையும் கட்டணங்களையும் எவ்விதக் கசிவுமின்றி வசூலித்து அரசின் வருமானத்தைப் பெருக்குதல்;
  • சாலைப் பாதுகாப்பை கூட்டுதல் மற்றும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குதல்;
  • வண்டிகளாலான மாசுபடிதலைக் குறைத்தல்.

தமிழ் நாட்டின் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்

[தொகு]
எண் வட்டாரம்
த.நா. 01 மத்திய சென்னை (அயனாவரம்)
த.நா. 02 வட மேற்கு சென்னை (அண்ணா நகர்)
த.நா. 03 வட கிழக்கு சென்னை (தண்டையார்பேட்டை)
த.நா. 04 கிழக்கு சென்னை (வள்ளலார் நகர்)
த.நா. 05 வட சென்னை (கொளத்தூர்)
த.நா. 06 தென் கிழக்கு சென்னை (மந்தவெளி)
த.நா. 07 தென் சென்னை (திருவான்மியூர்)
த.நா. 09 மேற்கு சென்னை (கே கே நகர்)
த.நா. 10 தென்மேற்கு சென்னை (விருகம்பாக்கம்)
த.நா. 11 சென்னை புறநகர் - தெற்கு (தாம்பரம்)
த.நா. 12 சென்னை புறநகர் - வடக்கு (செங்குன்றம்)
த.நா. 13 சென்னை புறநகர் - வடமேற்கு (அம்பத்தூர்)
த.நா. 14 சென்னை புறநகர் - தென்கிழக்கு (சோழிங்கநல்லூர்)
த.நா. 15 உளுந்தூர்பேட்டை/ கள்ளக்குறிச்சி
த.நா. 16 திண்டிவனம்/ செஞ்சி
த.நா. 18 சென்னை புறநகர் - வடக்கு (செங்குன்றம்)
த.நா. 19 செங்கல்பட்டு/ மதுராந்தகம்
த.நா. 20 திருவள்ளூர்
த.நா. 21 காஞ்சிபுரம்/ ஸ்ரீபெரும்புதூர்
த.நா. 22 சென்னை புறநகர் - தென் மத்திய (மீனம்பாக்கம்)
த.நா. 23 வேலூர்/ குடியாத்தம்
த.நா. 24 கிருஷ்ணகிரி
த.நா. 25 திருவண்ணாமலை - தலைமை அலுவலகம்

(திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, செங்கம், கீழ்பெண்ணாத்தூர்)

த.நா. 27 சேலம் (பயன்பாட்டில் இல்லை)
த.நா. 28 நாமக்கல் (வடக்கு)/ ராசிபுரம்
த.நா. 29 தர்மபுரி, பாலக்கோடு, அரூர்
த.நா. 30 சேலம் (மேற்கு)/ ஓமலூர்
த.நா. 31 கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி
த.நா. 32 விழுப்புரம்
த.நா. 33 ஈரோடு (கிழக்கு)
த.நா. 34 திருச்செங்கோடு
த.நா. 36 கோபிசெட்டிபாளையம்/ சத்தியமங்கலம்/ பவானி
த.நா. 37 கோயமுத்தூர் (தெற்கு)/ சூலூர்
த.நா. 38 கோயமுத்தூர் (வடக்கு)
த.நா. 39 திருப்பூர் (வடக்கு)/ அவினாசி
த.நா. 40 மேட்டுப்பாளையம்/ அன்னூர்
த.நா. 41 பொள்ளாச்சி
த.நா. 42 திருப்பூர் (தெற்கு)/ காங்கேயம்
த.நா. 43 நீலகிரி
த.நா. 45 திருச்சிராப்பள்ளி (மேற்கு)/ மணப்பாறை
த.நா. 46 பெரம்பலூர்
த.நா. 47 கரூர் , அரவக்குறிச்சி, குளித்தலை
த.நா. 48 ஸ்ரீரங்கம், முசிறி, துறையூர், லால்குடி
த.நா. 49 தஞ்சாவூர், பட்டுகோட்டை
த.நா. 50 திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைபூண்டி
த.நா. 51 நாகபட்டினம்
த.நா. 52 சங்ககிரி, மேட்டூர்
த.நா. 54 சேலம் (கிழக்கு)
த.நா. 55 புதுகோட்டை,ஆலங்குடி,இலுப்பூர், அறந்தாங்கி
த.நா. 56 பெருந்துறை (ஈரோடு) திண்டல்
த.நா. 57 திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், வத்தலக்குண்டு, பழனி
த.நா. 58 மதுரை (தெற்கு)/ திருமங்கலம்
த.நா. 59 மதுரை (வடக்கு)/ வாடிப்பட்டி/ மேலூர்
த.நா. 60 தேனி / உத்தமபாளையம்
த.நா. 61 அரியலூர்
த.நா. 63 காரைக்குடி /சிவகங்கை
த.நா. 64 மதுரை (மத்திய)
த.நா. 65 ராமநாதபுரம்/ பரமக்குடி
த.நா. 66 கோயமுத்தூர் (மத்திய)
த.நா. 67 விருதுநகர்/ அருப்புகோட்டை
த.நா. 68 கும்பகோணம்/ தஞ்சாவூர்
த.நா. 69 தூத்துக்குடி/ திருச்செந்தூர்/ கோவில்பட்டி
த.நா. 70 ஓசூர்
த.நா. 72 திருநெல்வேலி/ வள்ளியூர்
த.நா. 73 ராணிபேட்டை/ அரக்கோணம்
த.நா. 74 நாகர்கோயில்
த.நா. 75 மார்த்தாண்டம்
த.நா. 76 தென்காசி/ அம்பாசமுத்திரம்
த.நா. 77 ஆத்தூர்/ வாழப்பாடி
த.நா. 78 தாராபுரம்/ உடுமலைப்பேட்டை
த.நா. 79 சங்கரன்கோவில்
த.நா. 81 திருச்சிராப்பள்ளி (கிழக்கு)/ திருவெறும்பூர்
த.நா. 82 மயிலாடுதுறை/ சீர்காழி
த.நா. 83 வாணியம்பாடி/ திருப்பத்தூர்/ ஆம்பூர்
த.நா. 84 ஸ்ரீவில்லிபுத்தூர்/ சிவகாசி
த.நா. 85 சென்னை புறநகர் - தென் மேற்கு (குன்றத்தூர்)
த.நா. 86 ஈரோடு (மேற்கு)
த.நா. 87 சிதம்பரம் (பயன்பாட்டிற்கு வரவேண்டியது)
த.நா. 88 நாமக்கல் (தெற்கு)/ பரமத்தி வேலூர்
த.நா. 90 சேலம் தெற்கு
த.நா. 97 ஆரணி - தலைமை அலுவலகம்

(ஆரணி, செய்யாறு, போளூர், வந்தவாசி, சேத்துப்பட்டு, கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூர், வெம்பாக்கம்)

த.நா. 99 கோயமுத்தூர் (மேற்கு)
'N'/'AN' வரிசை போக்குவரத்து கழக வண்டிகள்
'G'/'AG'/'BG'/'CG' வரிசை அரசுத் துறை வண்டிகள்

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "Registering Vehicle". இந்திய அரசு. பார்க்கப்பட்ட நாள் 2009-03-17.
  2. "Obtaining Driving Licence". இந்திய அரசு. பார்க்கப்பட்ட நாள் 2009-03-17.
  3. "About Us". தமிழக அரசு. பார்க்கப்பட்ட நாள் 11 சனவரி 2014.