வனேடியம்-காலியம்(Vanadium-gallium) (V3Ga) என்பது வனேடியமும், காலியமும் இரண்டையும் சேர்த்து உருவாக்கப்படும் ஒரு மீகடத்தி கலப்புலோகமாகும். பெரும்பாலும் இவ்வுலோகக் கலவை மீகடத்து மின்காந்தங்களில் உயர்புல புகுத்துச் சுருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
வனேடியம்-காலியம் வார்ப்பட்டை மீகடத்து காந்தங்களில் பயன்படுத்தப்படுகிறது (17.5 டெசுலாக்கள் அல்லது 175000 காச்சுகள்) மீகடத்தும் ஏ15 முக வனேடியம்-காலியத்தின் கட்டமைப்பு பொதுவாகப் பயன்பாட்டிலுள்ள Nb3Sn மற்றும் Nb3 Ti. கலப்புலோகங்களின் கட்டமைப்பை ஒத்துள்ளது [1].
Nb, Ta, Sn, Pt மற்றும் Pb போன்ற உயர் அணு எண் தனிமங்களுடன் இக்கலப்புலோகத்தை கலப்பதன் மூலமாக உயர் புலப் பண்புகளை மேம்படுத்த முடியும்.[2]