வவிலாலா கோபாலகிருட்டிணய்யா

வவிலாலா கோபாலகிருட்டிணய்யா அல்லது ஆந்திரா காந்தி
பிறப்பு1906
சட்டெனப் பள்ளி, குண்டூர் மாவட்டம், சென்னை மாகாணம், பிரிட்டிசு இந்தியா
இறப்பு2003
கைதராபாத்
தேசியம்இந்தியன்
குடியுரிமைஇந்தியா
விருதுகள்கலாபிரபூர்ணா விருது, பத்ம பூசண் விருது

வவிலாலா கோபாலகிருட்டிணய்யா (Vavilala Gopalakrishnayya) [1] 1950 ஆம் ஆண்டு முதல் 1960 ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். மத ரீதியாக காந்திய தத்துவத்தைப் பின்பற்றினார். இவர் 1906 ஆம் ஆண்டு பிறந்து 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி இறந்தார்.

சுயசரிதை

[தொகு]

1906 ஆம் ஆண்டு ஆந்திரா மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள சட்டெனப் பள்ளியில் பிறந்த இவர், பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு, அவர் 1952 ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்றத்திற்கும், 1955 ஆம் ஆண்டு ஆந்திர மாநில சட்டமன்றத்திற்கும், 1962 மற்றும் 1967 ஆம் ஆண்டுகளில் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கும் சட்டெனப்பள்ளி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு முறையும், இவர் பிரிக்கப்படாத இந்திய பொதுவுடைமை கட்சியின் ஆதரவுடன் சுயேச்சையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கூட்டுறவு இயக்கம் மற்றும் நூலக இயக்கத்துடன் தொடர்புடையவர்.

இவரது நீண்ட அரசியல் வாழ்க்கையில், வவிலாலா 1950 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் ஆந்திர பிரதேசம் அமைப்பதற்கான விசாலந்திரா இயக்கம், குண்டூரில் நடந்த நந்திகொண்டா திட்ட போராட்டம் மற்றும் விவசாயிகள் போராட்டங்கள் உட்பட மாநிலத்தில் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய போராட்டங்களிலும் பங்கேற்றார். 1990 ஆம் ஆண்டுகளில் ஆந்திர மாநிலத்தில் நடந்த அரக்கு எதிர்ப்பு போராட்டம் மற்றும் பூரண மதுவிலக்கு இயக்கத்திலும் பங்கேற்றார். 1997 ஆம் ஆண்டு இந்திய நாட்டில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் மீதான தடை தளர்த்தப்படுவதற்கு முன்பு, மாநில அளவிலான முழுத் தடைக்கான அமலாக்கக் குழுவின் தலைவராக இருந்தார்.

ஆந்திர மாநில அலுவல் மொழி ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார். ஆந்திரப் பல்கலைக்கழகம் அவருக்கு கலாபிரபூர்ணா விருது வழங்கிக் கௌரவித்தது. மத்திய அரசு இவருக்கு பத்ம பூசன் பட்டத்தையும் வழங்கி கவுரவித்தது.

விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Freedom fighter Vavilala is dead".
  2. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.