துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 7 செப்டம்பர் 1963 |
பணியாட்கள் | மறைக்கப்பட்ட செய்தி |
ஆண்டு நிதி | மறைக்கப்பட்ட செய்தி |
அமைப்பு தலைமை |
|
மூல நிறுவனம் | நடுவண் தலைமைச் செயலகம் |
மூல அமைப்பு | பாதுகாப்பு தலைமை இயக்குனரகம் |
வான்பரப்பு ஆய்வு மையம் [Aviation Research Centre (ARC) என்பது இந்தியாவின் பட நுண்ணறிவுப் புலனாய்வு அமைப்பாகும். இது பாதுகாப்பு தலைமை இயக்குனரகத்தின் ஒரு பகுதியாகச் செயல்படுகிறது. இது ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பால் (R&AW) நடத்தப்படுகிறது.[1] இந்த அமைப்பு துவக்கததில் வெளியுறவு அமைச்சகத்தின் கீழ், நவம்பர் 1962 சீன-இந்தியப் போர் போரை அடுத்து, புலனாய்வுப் பணியகத்தின் விரிவாக்கமாக 7 செப்டம்பர் 1963 அன்று செயல்படத் தொடங்கியது. இது பின்னர் இந்தியப் பிரதமரின் செயலகத்திற்கு மாற்றப்பட்டது. பிப்ரவரி 1965ல் சிறப்பு எல்லைப்புறப் படை மற்றும் சஷாஸ்த்ர சீமா பல் ஆகியவைகளுடன் வான்பரப்பு ஆய்வு மையம் இணைந்து, அமைச்சரவை செயலகத்தில் செயல்படும் பாதுகாப்பு தலைமை இயக்குனரகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.
வான்வழி கண்காணிப்புக்கான MiG-25RB புகைப்படக் கருவிகள், வான்வழி சமிக்ஞை SIGINT செயல்பாடுகள், புகைப்பட உளவு விமானங்கள் (PHOTINT)[2][3] எல்லைகளை கண்காணித்தல், பட நுண்ணறிவு (IMINT)[10] ஆகியவை வான்பரப்பு ஆராய்ச்சி மையத்தின் (ARC) முக்கிய செயல்பாடுகளாகும்.
இதன் வான்பரப்பு ஆய்வு மையத்தின் விமானங்களில் அதிநவீன மின்னணு கண்காணிப்பு கருவிகள் மற்றும் மிக உயரத்தில் இருந்து இலக்குகளை படம் எடுக்கும் திறன் கொண்ட கண்காணிக்கும் புகைப்படக் கருவுகள் பொருத்தப்பட்டுள்ளது. சிறப்பு எல்லைப்புறப் படை வீரர்களை, புது தில்லிக்கு வடக்கே 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சர்சாவா என்ற படைத்தளத்திற்கு கொண்டு செல்லும் பொறுப்பை, இந்திய வான்படையுடன் இணைந்து இந்த அமைப்பு ஏற்றுள்ளது.
1999 கார்கில் போரின் போது, வான்பரப்பு ஆய்வு மையம், பாகிஸ்தானிய ஊடுவருவல்களை கண்காணிக்கவும், தடுத்து நிறுத்தவும், தாக்குதல்கள் மேற்கொள்ளவும் இந்திய இராணுவத்திற்கு உதவியது.[4] [5]