விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்)

 கொள்கை தொழினுட்பம் அறிவிப்புகள் புதிய கருத்துக்கள் ஒத்தாசைப் பக்கம் 
குறுக்கு வழிகள்:
WP:VPI
WP:VPIL
WP:VPD
புதிய கருத்துக்கள் எனும் ஆலமரத்தடிக் கிளையின் கீழ் புதிய கருத்துக்கள், ஆலோசனைகள் பற்றி உரையாடலாம்.
தயவுசெய்து, புதிதாகத் தொகுக்கும்முன் பின்வருவனவற்றைக் கருத்திற் கொள்ளுங்கள்:
« பழைய உரையாடல்கள்



பெண் பங்களிப்பாளர்கள்

[தொகு]

சமீகக் காலமாகப் பெண் பங்களிப்பாளர்களின் பங்களிப்புகள் குறைவாக உள்ளதாகக் கணிக்கிறேன். குறிப்பாகக் கொள்கை முடிவுகள், உரையாடல் போன்ற இடங்களில் பங்கேற்புகள் குறைவு. பல்வேறு சமூகக் காரணிகளால் இந்த நிலை ஏற்பட்டாலும் விக்கி அளவில் ஆர்வமுள்ளவர்களை ஊக்கப்படுத்த என்ன செய்யலாம் என்று யோசிக்கிறோம். புதிய பயனர்களுக்குப் பயிற்சி அளிப்பது ஒருபுறம் என்றால் ஏற்கனவே பங்களிப்பவர்களை ஊக்கப்படுத்துவது மேலே பலனளிக்கும் என நினைக்கிறேன். புதிய பெண் பயனர்களோ ஏற்கனவே பங்களிக்கும் பெண் பயனர்களோ ஏதேனும் உதவி தேவையென்றாலோ அல்லது சிக்கல்களைச் சுட்டிகாட்டவிரும்பினாலோ அறியத்தரலாம். மடலில் தொடர்பு கொள்ள விரும்பினாலும் என்னையோ சிஐஎஸின் நிதேஷ் கில் அவர்களையோ தொடர்பு கொள்ளலாம். பொதுவான யோசனைகளையும் முன்வைக்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 08:12, 27 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் பயிலரங்கில், பயிற்சி பெற இருப்பவர்களில் 50% பெண் பேராசிரியர்கள் இருக்குமாறு ஒரு கோரிக்கையை கல்லூரி ஒருங்கிணைப்பாளரிடம் வைத்துள்ளோம். இது குறித்து பின்னர் இற்றை செய்கிறேன். ஏற்கனவே பங்களிக்கும் பெண் பயனர்களை மார்ச்சு மாத இணையவழிக் கூட்டத்தில் கலந்துகொண்டு தமது கருத்துகளை வைக்குமாறு கேட்டுக்கொள்ளலாம். ஒரிரு பெண் பயனர்கள் திறன்பேசி வழியாக கட்டுரை எழுதுவதாக கணிக்கிறேன். இவர்களுக்கு மடிக்கணினி பெற்றுத்தரும் வழி இருக்கிறதா என்பதனையும் கவனத்தில் கொள்ளலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:40, 27 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

மடிக்கணினியில் தொகுப்புகள் செய்வது எளிதாக இருக்கிறது. ஆனால், திறன்பேசியில் தொகுப்புகள் செய்வது சிரமமான காரியமாக உள்ளது. நிறைய பெண் பயனர்கள் தங்களிடம் மடிக்கணினி இல்லை என்பதைத் தெரிவித்துள்ளார்கள். இது மட்டும் காரணமல்ல. ஆர்வத்துடன் பங்களிக்கும் பெண் பயனர்களைக் கண்டறிந்து அவர்களின் உண்மையான தேவை மடிக்கணினியாக இருக்கும் நேர்வில் அவற்றை நன்கொடையாளர்களிடமிருந்தோ சிஐஎஸ் மூலம் ஏற்பாடு செய்து பயன்படுத்தப்பட்ட மடிக்கணினிகளை பெற்று வழங்குவதன் மூலமாகவோ சரி செய்ய முயற்சிக்கலாம். பெண் பங்களிப்பாளர்களை ஊக்குவிக்கும் விதமாக செய்தித்தாள்களில் அவர்களின் பங்களிப்பு குறித்த செய்திகள் வெளிவருவதற்கு முன்னுரிமை தரலாம். --மகாலிங்கம் இரெத்தினவேலு 16:34, 27 பெப்பிரவரி 2024 (UTC)-[பதிலளி]

பரப்புரைகளை ஆவணப்படுத்துதல்

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா குறித்த அறிமுக நிகழ்வுகள் அல்லது பயிற்சிப் பட்டறைகள் பெரும்பாலும் திட்டப் பக்கங்களின் வாயிலாக நடத்தப்படுகின்றன. சில நேரங்களில் ஒருவரோ அல்லது இருவரோ சென்று அறிமுகத்தைத் தருகிறோம். இவ்வாறான சிறு நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்படுவதில்லை. அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்யும் பொருட்டு, இந்தப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது: விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா அறிமுக நிகழ்வுகள் (2021 முதல்). மாற்றுக் கருத்துக்கள், பரிந்துரைகள் இருப்பின் உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:06, 9 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் --சிவகோசரன் (பேச்சு) 14:14, 10 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

மற்றும் (and)

[தொகு]

மற்றும்’ என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது. ஏன்? (முகநூல் காணொளியில் தகவல் உள்ளது.) இணைச்சொல் இலக்கண விதியையும் அறிதல் வேண்டும். தானியங்கி தமிழாக்கம் செய்பவர்கள் இந்த 'மற்றும்' என்பதன் பயனை அறிய மறந்து, திருத்தாத மொழிபெயர்ப்பை வெளியிடுகின்றனர். ~AntanO4task (பேச்சு) 16:06, 9 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

பயனுள்ள தகவல், நன்றி.
ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 17:03, 21 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல்

[தொகு]

2017 ஆம் ஆண்டில் பள்ளி ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட சுமார் 10,000 கட்டுரைகள், தொடர்ச்சியாக சரிபார்க்கப்பட்டு வந்தன. இன்றைய நாளில் சுமார் 360 கட்டுரைகள் மட்டும் மீதமுள்ளன. இவற்றை இவ்வாண்டின் சூலை மாதத்தில் சரிபார்த்து முடிக்க இருக்கிறோம்.

2009 ஆம் ஆண்டில் கூகுள் தமிழாக்கக் கருவி மூலமாக உருவாக்கப்பட்ட சுமார் 1,200 கட்டுரைகள், வெவ்வேறு காலகட்டங்களில் செம்மைப்படுத்தப்பட்டு வந்தன. இன்றைய நாளில் சுமார் 886 கட்டுரைகள் மீதமுள்ளன. இந்தக் கட்டுரைகளை செம்மைப்படுத்தி முடித்துவிட்டால், '15 ஆண்டு காலமாக தேங்கிக்கிடத்தல்' எனும் நிலை முடிவுக்கு வரும். பல முக்கியக் கட்டுரைகள் இவ்வகையில் அடங்கியிருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

2022, 2023 ஆகிய ஆண்டுகளில் விக்கி மாரத்தானில் முக்கியத்துவம், சிறப்பு மாதம், சிறப்புக் காலாண்டு என அறிவித்து இயக்கியபோதும்...147 கட்டுரைகளை மட்டுமே செம்மைப்படுத்த இயன்றது. 886 கட்டுரைகளை அடுத்த ஆண்டிற்குள்ளாக செம்மைப்படுத்தி முடிப்பதற்கு பயனர்களின் பரிந்துரைகளை வரவேற்கிறேன். உங்களின் கருத்துக்கள் / பரிந்துரைகளை விக்கிப்பீடியா பேச்சு:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல்/2024 எனும் பக்கத்தில் தெரிவிக்கலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:20, 12 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியா தொடர்பான தொடர்-தொகுப்பு நிகழ்வு

[தொகு]

நடப்பு ஆண்டில் தொடர்-தொகுப்பு நிகழ்வு ஒன்றினை நடத்துவதற்கான திட்டப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்மொழிவை விக்கிப்பீடியா பேச்சு:தொடர்-தொகுப்பு 2024 எனும் உரையாடல் பக்கத்தில் இட்டுள்ளேன். பயனர்கள் தமது கருத்துக்கள் / பரிந்துரைகளை அதே உரையாடல் பக்கத்தில் இடலாம். அவற்றின் அடிப்படையில் தொடர்ந்து உரையாடி, திட்டப்பணி வரைவை இறுதி செய்ய ஏதுவாக இருக்கும்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:14, 16 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

பயனர்கள் தமது ஆதரவு அல்லது எதிர்ப்பினை இந்த 'ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்)' பகுதியில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:18, 17 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

 ஆதரவு -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 05:33, 18 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
 ஆதரவு --சத்திரத்தான் (பேச்சு) 05:43, 18 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
 ஆதரவு--கி.மூர்த்தி (பேச்சு) 16:17, 18 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
 ஆதரவு--சிவகோசரன் (பேச்சு) 15:14, 19 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
 ஆதரவு --சா. அருணாசலம் (பேச்சு) 15:23, 19 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
 ஆதரவு --மகாலிங்கம் இரெத்தினவேலு 15:30, 19 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
 ஆதரவு--Balu1967 (பேச்சு) 15:53, 19 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
 ஆதரவு--ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 16:58, 21 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

நிகழ்வை நடத்துவதற்கான நாட்கள் குறித்து பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. பயனர்கள் தமது பரிந்துரைகளை இந்தப் பகுதியில் இடுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:36, 1 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

முதற்கட்ட திட்டமிடலுக்கான கூட்டம் நாளை (ஏப்ரல் 6) நடைபெறுகிறது. வாய்ப்புள்ளோர் கலந்துகொண்டு, திட்டமிடலுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:57, 5 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

நிகழ்வை நடத்துவதற்குத் தேவைப்படும் நிதிக்கான கோரிக்கை விண்ணப்பத்தை விக்கிமீடியா அறக்கட்டளையிடம் தாக்கல் செய்திருந்தோம். இந்த விண்ணப்பம் இப்போது மேல்-விக்கியில் பதிப்பிடப்பட்டுள்ளது. மேல்-விக்கிப் பக்கத்தின் இறுதியில் இருக்கும் Endorsements and Feedback எனும் பகுதியில் உள்ள Endorse விசைப்பட்டையைச் சொடுக்கி, உங்களின் ஆதரவு (அல்லது) எதிர்ப்பைத் தெரிவிக்கலாம். விசைப்பட்டையைச் சொடுக்கும்போது, உதவிக் குறிப்புகள் கிடைக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:57, 4 சூன் 2024 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியா தொடர்பான அறிமுகப் பட்டறைகள்

[தொகு]

கலைக்களஞ்சியத்தின் கருத்துருவைப் புரிந்துகொண்டு, தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பவர்கள் இன்றைக்கு 20 முதல் 25 பேர் வரை இருப்பர். நீண்ட காலத்திற்கான வளர்ச்சிக்கு இந்த எண்ணிக்கை போதாது என்பதாக பரப்புரைகளில் ஈடுபட்டுவரும் தொடர்பங்களிப்பாளர்கள் கருதுகிறார்கள். அத்தோடு, இளம் வயதினரை அதிகளவில் பங்களிக்கச் செய்வதன் முக்கியத்துவமும் உணரப்பட்டுள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் கருத்திற்கு கொண்டு, விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறைகள் 2024 எனும் திட்டத்தை இங்கு முன்வைக்கின்றேன். திட்டத்திற்கான முன்மொழிவு விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறைகள் 2024 எனும் பக்கத்தில் இடப்பட்டுள்ளது. பயனர்கள் தமது கருத்துக்கள் / பரிந்துரைகளை அதே உரையாடல் பக்கத்தில் இடலாம்.

குறிப்பு: கல்வி நிலையத்தைப் பரிந்துரைப்பது, கல்வி நிலையத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு நிகழ்வை நடத்துவது ஆகியவற்றை எப்பயனரும் செய்யலாம் என்பது இத்திட்டத்தின் முக்கியக் கூறாகும்.

பயனர்கள் தமது ஆதரவு அல்லது எதிர்ப்பினை இந்த 'ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்)' பகுதியில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:05, 20 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

 ஆதரவு ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 15:54, 21 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
 ஆதரவு--சா. அருணாசலம் (பேச்சு) 03:48, 22 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
 ஆதரவு -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 05:57, 30 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

ஒரு நாள் தொடர்-தொகுப்பு நிகழ்வு: தமிழக ஆசிரியர்கள் எழுதிய கட்டுரைகளை செம்மைப்படுத்தும் பணி

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு வணக்கம்.

இறுதிக் கட்டத்தில் இருக்கும் இந்தப் பணியை விரைந்து நிறைவு செய்வதற்கு, முன்மொழிவு ஒன்றை தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2024 எனும் உரையாடல் பக்கத்தில் இட்டுள்ளேன்.

பயனர்கள் தமது கருத்துக்கள் / பரிந்துரைகளை அதே உரையாடல் பக்கத்தில் இடலாம். அவற்றின் அடிப்படையில் தொடர்ந்து உரையாடி, திட்டப்பணி வரைவை இறுதி செய்ய ஏதுவாக இருக்கும்.

பயனர்கள் தமது ஆதரவு அல்லது எதிர்ப்பினை இந்த 'ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்)' பகுதியில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:45, 18 மே 2024 (UTC)[பதிலளி]

 ஆதரவு-- சா. அருணாசலம் (உரையாடல்) 09:18, 19 மே 2024 (UTC)[பதிலளி]
 ஆதரவு -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 09:24, 19 மே 2024 (UTC)[பதிலளி]
 ஆதரவு--கு. அருளரசன் (பேச்சு) 06:23, 21 மே 2024 (UTC)[பதிலளி]
 ஆதரவு--கி.மூர்த்தி (பேச்சு) 07:29, 21 மே 2024 (UTC)[பதிலளி]
 ஆதரவு--மகாலிங்கம் இரெத்தினவேலு 09:27, 21 மே 2024 (UTC)[பதிலளி]
 ஆதரவு--பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 09:29, 21 மே 2024 (UTC)[பதிலளி]

நிகழ்வு நடைபெறுவது உறுதியாகி உள்ளது. தமிழ்நாட்டில் வாழும் பயனர்கள், கலந்துகொள்வதற்கான தமது விருப்பத்தை இங்கு பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:06, 9 சூன் 2024 (UTC)[பதிலளி]

முடிவுகளை எடுத்தல்

[தொகு]

தன்னார்வப் பணிகளின் வாயிலாக இயங்கக்கூடிய கலைக்களஞ்சியத்தின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் இன்னொரு விசயம் குறித்து இங்கு தெரிவிக்கிறேன்.

தொகுத்தலில் நமக்கு ஏற்படும் ஐயங்களை உரையாடல் பக்கத்தில் பொதுவாக கேட்கும்போது மற்ற பயனர்களின் பரிந்துரைகள், ஆலோசனைகள் கிடைப்பதில்லை. ஏதேனும் ஒரு குறிப்பிட்டப் பயனரை அழைத்துக் கேட்கலாம்; பதில் கிடைக்கும். இருந்தாலும் அவர்களை தொந்தரவு செய்வது போன்று தோன்றுகிறது.

பயனர்கள் பல்வேறு நோக்கத்தில் இயங்கும் அறிவுத்தளத்தில் இது இயல்பானதொரு விசயமே. எனினும் எனது கருத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

அதிக எண்ணிக்கையில் பயனர்கள் பங்களிக்கத் தொடங்கும்போது, இந்நிலையில் முன்னேற்றத்தைக் காண இயலும் என நம்புகிறேன்! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:17, 7 சூலை 2024 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்-- சா. அருணாசலம் (உரையாடல்) 01:02, 8 சூலை 2024 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் பயனர்கள் தங்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு அவர்களுக்கு விருப்பமான முறையில் நிகழ்படமாகவோ படிமமாகவோ ஒலிக்கோப்புகளாகவோ கற்றுக்கொடுத்தால் பிற பயனர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும். ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 12:26, 15 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]

விக்கித்தரவு 12 ஆம் பிறந்தநாள்

[தொகு]

வணக்கம், விக்கித்தரவின் 12 ஆம் பிறந்தநாள் செப்டம்பர்- நவம்பர் 2024 இல் நடக்க உள்ளது. இந்த நிகழ்வின்போது, விக்கித்தரவு பிறந்த நாளினை விக்கிப்பயனர்கள் ஒன்று கூடிக் கொண்டாடலாம், விக்கித்தரவில் தாங்கள் அறிந்துகொண்டதை மற்றவர்களுக்குக் கூறலாம், புதிய பயனர்களுக்கு விக்கித்தரவு குறித்து அறிமுகம் செய்யலாம், பயிற்சிப் பட்டறை, தொடர் தொகுப்பு ஆகியவற்றை மேற்கொள்ளலாம். விக்கித்தரவு குறித்தான பயிற்சி ஏதேனும் தேவை எனில் இணைய வழியில் அல்லது நேரில் (தமிழ்நாட்டில்) பயிற்சி வகுப்பு நடத்தலாம். விருப்பம் இருந்தால் அறியத் தாருங்கள். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 17:09, 17 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]

👍 விருப்பம். உலகளவில் எடுக்கப்படும் முன்னெடுப்புகளில் நாமும் இணைந்துகொள்வது நற்பலன்களைத் தரும். விக்கிப்பீடியா திட்டத்தோடு நெருங்கிய தொடர்புள்ள விக்கித்தரவிலும் திட்டங்களை இயக்குவது, தொலைநோக்குப் பார்வையில் அவசியமானது ஆகும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:39, 18 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் - இது இனி வரும் காலத்தின் தேவை என்பதை நீச்சல்காரன் அடிக்கடி சொல்வார். இன்னும் நுணுக்கமாக விக்கித்தரவில் பணியாற்றுவது குறித்து நாம் பயிற்சி பெறுவதும் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதும் அவசியம். --மகாலிங்கம் இரெத்தினவேலு 13:46, 18 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் பொதுவாக தொகுப்புகளை மேற்கொள்பவர்கள், விக்கித் தரவில் உருப்படிகளை இணைப்பதை தவிர அதிகம் பங்களிப்பதில்லை. எனவே தரவுத் தொடர்பாக நிகழ்வினை ஒருங்கிணைத்தால் பயிற்சிக்கு கூடுதல் நேரம் செலவிடலாம். --சத்திரத்தான் (பேச்சு) 14:23, 18 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]

சிறப்பு மாதம்:கட்டுரைகளில் மேற்கோள்கள் சேர்த்தல்

[தொகு]

மேற்கோள்கள் இல்லாத கட்டுரைகளில் மேற்கோள்கள் சேர்க்கும் பணி செப்டம்பர் 2024 மாதம் முழுக்க நடைபெறும். திட்டப் பக்கம்: விக்கிப்பீடியா:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும்/2024.

ஆர்வமுடையோர் தமது பங்களிப்பினைத் தரலாம். ஐயங்கள் இருப்பின் திட்டப் பக்கத்தின் உரையாடல் பக்கத்தை பயன்படுத்தலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:02, 2 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]

சான்றுகள் இல்லாத கட்டுரைகளில் உரிய வார்ப்புருவினை இடுதல்

[தொகு]

தானியக்கமாக மேற்கோள் சேர்த்தல் உள்ளிட்ட முன்னெடுப்புகளை எடுத்து, ஒரு சமூகமாக பணியாற்றி வருகிறோம்.

சான்று இல்லாத கட்டுரைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகின்றது. எனினும், 'சான்றில்லை' எனும் வார்ப்புரு இடப்படாத கட்டுரைகள் ஏராளமானவை உள்ளன. ஆகவே இக்கட்டுரைகளின் தலைப்பானது "சான்று எதுவும் தரப்படாத பக்கங்கள்" எனும் பகுப்பின் கீழ் அடங்கவில்லை.

தானியக்கமாக உரிய துப்புரவு வார்ப்புருக்களை இடுவது குறித்து கலந்துரையாடுவோம். இப்போதைக்கு, நமக்குத் தெரியவரும் கட்டுரைகளில் உரிய வார்ப்புருவினை இட்டு, தரவுத் திரட்டலுக்கு உதவுங்கள். எடுத்துக்காட்டு: ஜோன்ஸ் (திரைப்படம்) மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:58, 5 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

மேற்கோளாக ஒரு இணையத்தளப் பக்கம் இணைக்கப்பட்ட காலத்தில், எவ்வித கட்டணமும் செலுத்தாமல் பொதுமக்கள் காணத்தக்கதாக அத்தளம் இருந்திருக்கும். அதன் பின்னர் சந்தாதாரர்கள் மட்டும் முழுமையாகக் காணும் வகையில் அத்தளம் மாற்றப்பட்டிருக்கும். இத்தகையக் கட்டுரைகளை இனங்கண்டு வகைப்படுத்த வேண்டும். தீர்வு காண்பதற்கு இச்செயல் முக்கியமானது ஆகும். இதற்காக பகுப்பு:முழுமையாகப் பார்க்க இயலாத மேற்கோளைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் எனும் பகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் திரைப்படங்கள் (தி இந்து ஆங்கில நாளிதழ்), துடுப்பாட்டம் (CricketArchive) தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்த இந்த முன்னெடுப்பு உதவும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:27, 6 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

ஒன்றரை லட்சக் கட்டுரையையும் அலசி சான்றே இல்லாத கட்டுரைகளைத் தானியங்கியால் அடையாளம் காணமுடியும்(வார்ப்புரு இடல்). அவற்றிற்கு ஆங்கிலத்தில் மேற்கோளிலிருந்தால் இறக்குமதியும் செய்யமுடியும். விக்கிச் சமூக ஒப்புதல் இருந்தால் தானியங்கியை இயக்குகிறேன்.
போதுமான மாற்று மேற்கோள்கள் இருந்தால் இவற்றை நீக்கவோ மாற்றவோ செய்யலாம் ஆனால் பொதுவாக முழுமையாகச் செயலிழந்த உரலிகளைக்கூட மாற்று உரலி இல்லாவிட்டால் அவற்றை நீக்க வேண்டாமென நினைக்கிறேன். எதிர்காலத்தில் அவற்றின் காப்பக முகவரியைத் தேட உதவும். ஒரு மேற்கோள் சந்தாதாரர்களுக்கென மாற்றப்பட்டதால் அவற்றை மாற்ற வேண்டியதில்லை. அந்த அணுக்கமுள்ளவர்களால் சரிபார்த்துக் கொள்ளமுடியும். அவ்வாறு இறுக்கமாக மேற்கோள் கொள்கையிலிருந்தால் அச்சுப் புத்தங்களை மேற்கோளாகக் கொடுத்து வந்திருக்க முடியாது. -நீச்சல்காரன் (பேச்சு) 08:12, 6 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]
  • சான்றே இல்லாத கட்டுரைகளைத் தானியங்கியால் அடையாளம் காணுதல், வார்ப்புரு இடுதல். * ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து, மேற்கோளிலிருந்தால், இறக்குமதி செய்தல்.
இப்பணிகளைச் செய்வதற்கு ஆதரவினை அளிக்கிறேன். தானியக்கமாக அல்லாது, இப்பணிகளைச் செய்வது மிகுந்த சிரமமாக இருக்கும். இதற்காக பயனர்கள் செலவிடும் நேரத்தை புதியக் கட்டுரைகளை எழுதவும், கட்டுரைகளை மேம்படுத்தவும் பயன்படுத்தலாம்.--நந்தகுமார் (பேச்சு) 08:34, 6 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]
  • @Neechalkaran: தானியங்கியால் அடையாளம் கண்டு மேற்கோள்களையும் இடமுடியுமானால் அது நல்ல ஒரு திட்டம். மேற்கோள்கள் இல்லாத தமிழ்க் கட்டுரைகள் (ஆங்கில விக்கியில் இல்லாதவை) ஏராளமாக இருக்கும். அவற்றிற்கு வார்ப்புரு சேர்த்தால் பயனுள்ளதாக இருக்கும். எனது தொடக்ககாலக் கட்டுரைகள் பலவற்றை மேற்கோள்கள் இல்லாமல் எழுதியிருக்கிறேன்:(.--Kanags \உரையாடுக 11:20, 6 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]
@Kanags உங்கள் உரையின் இரண்டாவது சொற்றொடரை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. உரையினை திருத்தி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:25, 6 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]
திருத்தியிருக்கிறேன். மேலும் ஒரு குறிப்பு: நீச்சல்காரனின் தானியங்கியில் ஒரு சில திருத்தங்கள் தேவையாக இருக்கலாம். பார்க்க: ஸ்டாலின் (2006 திரைப்படம்), ஏற்கனவே Reflist வார்ப்புரு சேர்க்கப்பட்டிருக்க, மீண்டும் இன்னும் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிறது.--Kanags \உரையாடுக 11:35, 6 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]
@Kanags:, குறித்துக் கொண்டேன். நன்றி. அடுத்த இயக்கத்தில் இவை சரியாகக் கையாளப்படும். -நீச்சல்காரன் (பேச்சு) 16:35, 6 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

@Neechalkaran: சான்று இல்லாத கட்டுரைகளை தானியங்கியால் அடையாளம் கண்டு, வார்ப்புரு இட முயற்சி செய்வதற்கு நன்றி! சந்தாதார்களுக்கென மாற்றப்பட்ட தளங்களின் உரலிகள் குறித்த உங்களின் கருத்தே எனது கருத்தும். இந்த உரலிகள் இடப்பட்டுள்ள கட்டுரைகளை அடையாளங் காண வேண்டும் என்பதுவே எனது கோரிக்கை. இதன் மூலமாக ஆயிரக்கணக்கான கட்டுரைகளில் காப்பக முகவரியை எதிர்காலத்தில் இட இயலும். (மனித ஆற்றலின் வாயிலாக அல்லது தானியங்கி வாயிலாக) எடுத்துக்காட்டு: மேனகா (1935 திரைப்படம்)

@Nan: தானியக்கமாக வார்ப்புரு சேர்த்தல் நன்று எனும் உங்களின் கருத்தை ஏற்கிறேன். இந்தச் செயலுக்கு தாமதம் ஏற்படும்போது, கண்களுக்குத் தெரியும் கட்டுரைகளில் உரிய வார்ப்புருவினை இடுமாறு பொதுவான வேண்டுகோள் வைத்தேன்.

தானியங்கி மூலமாக வார்ப்புரு இடுவதற்கு  ஆதரவு - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:33, 9 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

இந்தத் தானியங்கித் திட்டத்திற்கு ஆதரவளிக்கிறேன்.  ஆதரவு --சிவகோசரன் (பேச்சு) 14:22, 12 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

பார்க்க: ஆ.வி.-இலிருந்து மேற்கோள்கள் இறக்குமதியில் தவறு.--Kanags \உரையாடுக 09:39, 13 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

Ping பயன்பாடு வேலை செய்கிறதா என்பதில் ஐயம் இருப்பதால், இந்த உரையாடல் பகுதியில் தெரிவிக்கிறேன்:-
சுமார் 18,000 கட்டுரைகள் அலசப்பட்டு, தானியங்கி வாயிலாக உரிய செயல்கள் செய்யப்பட்டுள்ளன. இவற்றை இயன்றளவு சரிபார்த்து, கருத்துக்களை தெரிவிக்குமாறு பயனர்களை கேட்டுக்கொள்கிறேன். விரிவான உரையாடலுக்கு, காண்க: இற்றை - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:35, 16 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள்

[தொகு]

'புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள்' என்ற கட்டுரையில் உள்ள நாடுகளைக் கவனியுங்கள். புராதன இந்தியா என்ற நூலை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன (சொந்த ஆய்வு). எ.கா: நேபாளதேசம், காசுமீரதேசம் என்பவை ஏற்கெனவே உள்ள பகுதிகளைக் குறிக்கிறது. ஆகவே இங்குள்ளவற்றை வழிமாற்ற அல்லது நீக்க வேண்டியுள்ளன. கருத்துக்களைத் தெரிவியுங்கள். AntanO (பேச்சு) 16:59, 27 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

பெயரிடல் மரபு

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில், சௌகான் என்ற பெயரை சவுகான் என்றும், சௌரவ் என்ற பெயரை சவுரவ் என்றும், சௌத்ரி என்ற பெயரை சவுத்ரி என்றும் பல கட்டுரைகளில் எழுதப்பட்டுள்ளது. சௌ என்ற எழுத்து முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. இப்படி எழுதுவது தவறானது. தமிழ் விக்கிப்பீடியாவில் பயன்படுத்தியுள்ளது போலவே சௌத்ரி என்பதை சவுத்ரி என்று தமிழ்ச் செய்தி ஊடகங்களிலும் பயன்படுத்தி வருகின்றனர். நாம் தமிழ் விக்கிப்பீடியாவில் இவை அனைத்தையும் சரியான பெயருக்கு வழிமாற்று இன்றி நகர்த்த வேண்டும்.-- சா. அருணாசலம் (உரையாடல்) 16:54, 30 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் --சிவகோசரன் (பேச்சு) 13:55, 31 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

முறிந்த வழிமாற்றிகள்

[தொகு]

@Kanags:, @Selvasivagurunathan m:159 தலைப்புகள், முறிந்த வழிமாற்றிகளாக உள்ளன. இவை ஒரே சமயத்தில் எப்படி ஏற்பட்டன என்று தெரியவில்லை. இவை அனைத்தும் நீக்கப்படவேண்டுமா என்றும் தெரியவில்லை. தெரிவியுங்கள்.--நந்தகுமார் (பேச்சு) 17:35, 30 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

@Nan வணக்கம். இந்தத் தலைப்புகளின் பட்டியலை எங்கு காண்பது என்பதனை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆராய்ந்து அறிவதற்கு உதவியாக இருக்கும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:51, 30 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]
@Selvasivagurunathan m: வணக்கம். [[1]] இங்கு பாருங்கள்.--நந்தகுமார் (பேச்சு) 19:06, 30 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]
@Nan பேச்சு:இந்திய இசுலாமிய எழுத்தாளர்கள் எனும் உரையாடலைக் கவனியுங்கள். அக்கட்டுரை நீக்கப்பட்டதால், இது நிகழ்ந்துள்ளது எனக் கருதுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:15, 30 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]
@Selvasivagurunathan m: இவை (முறிந்த வழிமாற்றிகள்) அனைத்தையும் நீக்கிவிடலாமா?. தெரிவியுங்கள்.--நந்தகுமார் (பேச்சு) 19:31, 30 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]
@Nan குறிப்பிடத்தக்கமை இல்லை என்பதாக 'பட்டியல் கட்டுரை' நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த 159 பக்கங்களை நீக்குதலே உகந்தது எனக் கருதுகிறேன். எனினும், @Kanags: அவர்களும் இதனை உறுதி செய்தார் எனில், நாம் செயல்படுத்திவிடலாம்! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:38, 30 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 19:49, 30 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]
அவற்றை நீக்கலாம்.--Kanags \உரையாடுக 21:13, 30 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று நந்தகுமார் (பேச்சு) 23:21, 30 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]
@Nan நேரம் செலவிட்டு செயலாற்றியமைக்கு நன்றிகள்! @சா அருணாசலம்: தங்களின் கவனத்திற்கு. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:45, 31 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் -- சா. அருணாசலம் (உரையாடல்) 05:55, 31 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி

[தொகு]

நவம்பர் 2024 மாதாந்திரக் கூட்டத்தில், கல்லூரி மாணவர்களுக்கு உள்ளகப் பயிற்சி (internship) வழங்கும் வாய்ப்புகள் குறித்தான உரையாடல் நடந்தது. விக்கித் திட்டங்கள் குறித்து மாணவர்கள் அறிவதற்கும், புதுப் பயனர்களை கொண்டுவருவதற்கும் இவ்வாறான பயிற்சித் திட்டங்கள் உதவும் என கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட நிகழ்வுகள் மீதும் உரையாடல் நடைபெற்றது. உள்ளகப் பயிற்சியை வழங்குவதற்கான கொள்கைகள், வழிமுறைகள், வழிகாட்டல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டப் பக்கத்தை உருவாக்கிட பரிந்துரைக்கப்பட்டது. இதைக் கருத்திற்கொண்டு விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி எனும் பக்கம் தற்போது துவக்கப்பட்டுள்ளது. திட்டம் குறித்து நல்ல புரிதல் உடையவர்கள், முந்தைய நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்தியவர்கள் இந்தப் பக்கத்தை வளர்த்தெடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். தேவைப்படும் உரையாடல்களை திட்ட உரையாடல் பக்கத்தில் செய்துகொள்வோம். நன்றி! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:05, 1 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]

பகுப்பு:கூகுள்

[தொகு]

இந்தப் பகுப்பில் அடங்கியுள்ள பல கட்டுரைகளின் தலைப்புகள் 'கூகிள்' என பிழையாக உள்ளன. இவற்றை 'கூகுள்' என நகர்த்தலாமா? (தேவைப்படும் இடங்களில் வழிமாற்றுடன் நகர்த்துதல்) - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:00, 21 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]

மாற்றலாம், ஆனால் வழிமாற்றுடன் மாற்றுங்கள். அல்லது இணைப்புகள் சரி செய்யப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 22:04, 21 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]
நன்றி; அவ்வாறே செய்கிறேன். கூகிள் குரோம் பக்கத்தை வழிமாற்றுடனே நகர்த்தியிருக்கிறேன் - ஏனெனில் 80 பக்கங்களில் இந்தப் பக்கம் உள்ளிணைப்பாக இருக்கும் காரணத்தினால். குறைவான பக்கங்களில் உள்ளிணைப்பாக இருப்பின் இணைப்பை சரிசெய்ய முற்படுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:18, 21 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]