விக்கிப்பீடியா ரிவியூ (ஆங்கிலத்தில்: Wikipedia Review) ஒரு இணைய மன்றமும், வலைப்பதிவும் இணைக்கப்பட்டு விக்கிமீடியா நிறுவனத்தின் திட்டங்களைப் பற்றி கருத்துகளையும் குறிப்பாக விக்கிப்பீடியா குறித்த சர்ச்சைகளை பகிரக்கூடிய ஒரு இணையதளம் ஆகும்.[4][5]இன்பர்மேசன்வீக்கின் கூற்றுப்படி, விக்கிப்பீடியா ரிவியூவானது விக்கிப்பீடியா தளத்தினை கவனிக்கும் பல்வேறு இணையதளங்களில் இதுவும் ஒன்றெனவும், விக்கிப்பீடியாவில் உள்ள நிறைகுறைகளை அலசி ஆராயும் தளமாக விளங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[6] விக்கிப்பீடியா பங்களிப்பாளர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்க இணைய மன்றம் வழிசெய்கின்றது. அம்மன்றத்தில் சில புதிய பயனர்கள், பழைய பயனர்கள், தொகுப்புகளே செய்யாத பயனர்கள் என பலதரப்பட்ட மக்கள் உள்ளனர்.[7]
நவம்பர் 2005-இல், ப்ரோபோர்டு என்ற நிறுவனத்தின் உதவியுடன் ஐகர் அலெக்சான்டர் என்பவரால் துவங்கப்பட்டது இத்தளம்.[8] 19 பிப்ரவரி 2006-ம் நாள் தனது சொந்த உரலியுடன் வெளியானது.[2][9] ஒரே பயனர் பல கணக்குகளை வைக்க வேண்டாம் என்றறிவுறுத்தும் இத்தளம் பயனர்களின் மின்னஞ்சலை பதிவு செய்தபின் இடுகையிட வழிவகை செய்கிறது.[10]
பராக் நிறுவனத்தின் விக்கி-தொகுத்தல் குறித்த விவாதங்களுக்கு விக்கிப்பீடியா ரிவியூ,[11][12] உதவிசெய்பவதாகவும், அக்கருவியை அலசுவதற்காகவும் [13]
↑"Second post on wikipediareview.com". Wikipedia Review. Was The Wikipedia Review created by Igor Alexander? Yes. Is The Wikipedia Review run by Igor Alexander? No.