விக்கிரமன் | |
---|---|
பிறப்பு | சுப்பராயர் வேம்பு 19 மார்ச்சு 1928 சென்னை |
இறப்பு | 1 திசம்பர் 2015 சென்னை | (அகவை 87)
பணி | எழுத்தாளர், ஊடகவியலாளர் |
பெற்றோர் | சுப்பராயர், இலட்சுமி அம்மாள் |
விக்கிரமன் (Vikiraman, 19 மார்ச் 1928 - 1 திசம்பர் 19) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். சென்னையில் இவர் பிறந்தார். முதலில், வேம்பு என்ற தனது இயற்பெயரில் எழுதத் தொடங்கி, பின்னர், விக்கிரமன் என்ற புனைபெயரில் எழுதினார்.[1]அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார்.[2] 54 ஆண்டுகளாக அமுதசுரபி மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.[3] வரலாற்று நாவல்களையும் எழுதியிருக்கிறார்.
2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதியன்று காலமானார்.[4]