விஜயகலா மகேஸ்வரன் Vijayakala Maheswaran | |
---|---|
சிறுவர் விவகாரங்களுக்கான இராசாங்க அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 9 செப்டம்பர் 2015 | |
பெண்கள் விவகாரப் பிரதி அமைச்சர் | |
பதவியில் 12 சனவரி 2015 – 17 ஆகத்து 2015 | |
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 23 நவம்பர் 1972 களபூமி, காரைநகர், யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
துணைவர் | தியாகராஜா மகேஸ்வரன் |
வாழிடம் | 32, 36ம் ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு 6, இலங்கை |
வேலை | தொழிற்சங்கவாதி |
சமயம் | இந்து |
விஜயகலா மகேசுவரன் (Vijayakala Maheswaran, பிறப்பு:23 நவம்பர் 1972) என்பவர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
விஜயகலா 1972 நவம்பர் 23 அன்று[1] யாழ்ப்பாண மாவட்டம், காரைநகரில் மார்க்கண்டு என்பவருக்குப் பிறந்தவர்.[2] காரைநகர் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றார்.[2][3]
விஜயகலா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேசுவரனைத் திருமணம் புரிந்தார். மகேசுவரன் 2008 சனவரி 1இல் அரச துணை இராணுவக் குழுவினரால் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.[4][5] இவர்களுக்கு இரண்டு பெண்கள், ஒரு ஆண் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.[2]
விஜயகலா தனது கணவரின் படுகொலைக்குப் பிறகு அரசியலில் இறங்கினார். 2010 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதற் தடவையாக நாடாளுமன்றம் சென்றார்.[6] 2015 சனாதிபதித் தேர்தலை அடுத்து இவர் பெண்கள் விவகாரப் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[7][8] 2015 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுத்தப்பட்டு 13,071 விருப்பு வாக்குகள் பெற்று தெரிவானார்.[9][10] 2015 செப்டம்பர் 9 இல் இவர் சிறுவர் விவகாரங்களுக்கான இராசாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[11][12][13]
2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாரளுமன்றத்தில் தமிழர்களின் சுதந்திரத்தைக்காக்க மீண்டும் விடுதலைப்புலிகள் வரவாண்டும் என்று பேசியதால் எழுந்த சர்ச்சையின் காரணமாக தனது பதவியை விட்டு விலகினார்.[14]