விஜயகுமாரி Vijayakumari | |
---|---|
விஜயகுமாரி 2013-ல் | |
தேசியம் | இந்தியர் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1964 – முதல் |
பெற்றோர் |
|
வாழ்க்கைத் துணை | ஓ. மாதவன் |
பிள்ளைகள் | 3; முகேஷ் |
விஜயகுமாரி என்பவர் இந்திய நாடக, தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை ஆவார். இவர் கேரள மக்கள் கலைக் கழகம் மற்றும் காளிதாசு கலகேந்திராவில் மேடை நாடக நடிகையாக இருந்தார்.[1] சிறந்த மேடை நடிகைக்கான கேரள மாநில விருதை வென்றவர்.[2] 1976-ல் கேரள சங்கீத நாடக அகாதமி விருதையும் 2005 இல் கேரள சங்கீத நாடக அகாதமி நிதியுதவியினையும் பெற்றார்.[3][4] தற்போது காளிதாசு கலகேந்திராவின் செயலாளராக உள்ளார்.[5]
விஜயகுமாரி பரமு பணிக்கர் மற்றும் பார்கவியம்மா ஆகியோருக்கு மகளாகக் கொல்லத்தில் பிறந்தார். இவரது தந்தை படகு தலைவராகவும், தாயார் கொல்லத்தில் உள்ள முந்திரி தொழிற்சாலையில் முந்திரிக் கொட்டை உடைக்கும் தொழிலாளியாகவும் இருந்தார். விஜயகுமாரி மிகவும் இளமையாக இருந்தபோது இவருடைய தந்தை இறந்துவிட்டார். இவருக்கு ஒரு தங்கை இருக்கிறாள்.[6] இவர் தனது ஆரம்பக் கல்வியைக் கொல்லத்தில் உள்ள பாசறைப் பள்ளியில் பயின்றார்.
விஜயகுமாரி ஓ. மாதவன் என்பவரை மணந்தார்.[7] இவர்களுக்கு முகேஷ், சந்தியா ராஜேந்திரன், (இருவரும் நடிகர்கள்) மற்றும் ஜெயசிறீ சியாம்லால் என் மூன்று குழந்தைகள் உள்ளனர்.[8] சந்தியாவின் கணவர் இ. ஏ. ராஜேந்திரனும் திரைப்பட நடிகர் ஆவார்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)