விண்வெளித் துறை

விண்வெளித் துறை
அண்டரிகா விபாக்
துறை மேலோட்டம்
ஆட்சி எல்லைஇந்திய அரசு
தலைமையகம்அண்டரிக்சு பவன், நியூ பெல் சாலை, பெங்களூரு, கருநாடகம், இந்தியா
ஆண்டு நிதி12,473.26 கோடி (US$1.6 பில்லியன்)(2019–20 est.)[1]
பொறுப்பான அமைச்சர்கள்
பொறுப்பான துணை அமைச்சர்கள்
துறை தலைமை
  • எஸ். சோம்நாத்[2]
மூல துறைஇந்தியப் பிரதமரின் அலுவலகம்
கீழ் துறை
வலைத்தளம்https://www.isro.gov.in

விண்வெளித் துறை (Department of Space) இந்திய விண்வெளித் திட்டத்தின் நிர்வாகத்திற்கு பொறுப்பான ஒரு இந்திய அரசுத் துறையாகும். இது விண்வெளி ஆய்வு மற்றும் விண்வெளி தொழில்நுட்பங்களுடன் தொடர்புடைய பல நிறுவனங்களை நிர்வகிக்கிறது.

இந்திய விண்வெளி திட்டமானது நாட்டினுடைய சமூக-பொருளாதார நன்மைக்காக விண்வெளி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை செய்வதற்கும், பயன்பாட்டிற்கும் உந்துதலாக நோக்கம் கொண்டதாகும். இது இரண்டு பிரதான செயற்கைக்கோள் அமைப்புகளை கொண்டது. ஒன்று இன்சாட் இது தகவல் தொடர்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் வானிலை சேவைகள் ஆகியவற்றிற்கும் இந்திய தொலைதூர உணர்திறன் செயற்கைக்கோள்கள் ஐ.ஆர்.எஸ் வளங்கள் கண்காணிப்பு மற்றும் மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கியது.

ஐ.ஆர்.எஸ் மற்றும் இன்சாட் வகுப்பு செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் வைக்க இரண்டு வாகனங்களை, பி. எஸ். எல். வி மற்றும் ஜி. எஸ். எல். வி ஆகியவற்றை இது உருவாக்கியுள்ளது.

முகவர்கள் மற்றும் நிறுவனங்கள்

[தொகு]

Department of Space (India) - organization chart

Map of Department of Space centres

  1. இஸ்ரோ, பெங்களூர்
  2. இந்திய விண்வெளி தொழில்நுட்ப கழகம், திருவனந்தபுரம்
  3. இசுரோ தொலையளவியல், கண்காணிப்பு, கட்டளை வலைப்பிணையம், பெஙகளூர்,
  4. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திருவனந்தபுரம்.
  5. சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா, ஆந்திரம்
  6. தேசிய தொலையுணர்வு மையம், ஹைதராபாத்
  7. வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையம், மேகாலயா
  8. தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகம், காடிங்கி, ஆந்திரம்
  9. இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம், அகமதாபாத்.
  10. விண்வெளிப் பயன்பாடுகள் மையம், அகமதாபாத்.
  11. திரவ உந்துவிசை அமைப்புகள் நிறுவனம் (LPSC), திருவனந்தபுரம்
  12. இஸ்ரோ செயற்கைக்கோள் நிலையம் (ISAC), பெங்களூர்.
  13. விண்வெளி வளர்ச்சி மற்றும் கல்வி கழகம் (DECU), அகமதாபாத்.
  14. முழுக்கட்டுப்பாடு வசதி மையம், ஹசன், கர்நாடகா
  15. மின்-ஒளியியல் அமைப்புகள்ஆய்வகம் (LEOS), பெங்களூர்.
  16. தொலைதூர உணர்தல் இந்திய நிறுவனம் (IIRS), டெஹ்ராடூன்.

வரலாறு

[தொகு]

1961 ஆம் ஆண்டில் விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் விண்வெளி ஆணையம் (DAE) ஆகியவற்றிற்கு பொறுப்பேற்ற டாக்டர் ஹோமி பாபாவின் தலைமையின் கீழ், இந்திய அரசாங்கம் பொறுப்பை ஒப்படைத்தது. 1962 ஆம் ஆண்டில், அணுசக்தித் துறை விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசியக் குழுவை உருவாக்கியது, டாக்டர் விக்ரம் சாராபாய் தலைவரான பிறகு அவர் ஒரு தேசிய விண்வெளித் திட்டத்தை ஏற்பாடு செய்தார். 1969 ஆம் ஆண்டில் இந்திய தேசிய அறிவியல் அகாடமி இன் கீழ் ஒரு ஆலோசனைக் குழுவாக மறுசீரமைக்கப்பட்டது மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு நிறுவப்பட்டது. இந்திய அரசு விண்வெளி கமிஷனை உருவாக்கியது மற்றும் 1972 ஆம் ஆண்டில் விண்வெளித் துறையை நிறுவியது. 1972 சூன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை விண்வெளித்துறையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தது.

கே. சிவன் தற்போதைய விண்வெளி ஆணையத்தின், தலைவர், விண்வெளித் துறை செயலாளர் ஆவார். திருமதி வண்டிதா ஷர்மா இதன் கூடுதல் செயலாளர் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Department of Space" (PDF). Ministry of Finance, இந்திய அரசு. பார்க்கப்பட்ட நாள் July 25, 2019.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. S. Somanath