ஸ்ரீ வித்யாரண்யர் மகாசுவாமி | |
---|---|
பதவி | ஜெகத்குரு சிருங்கேரி சாரதா பீடம் |
சுய தரவுகள் | |
தேசியம் | விஜயநகரப் பேரரசு |
பதவிகள் | |
பதவிக்காலம் | 1331–1386 |
முன் இருந்தவர் | ஸ்ரீபாரதி கிருஷ்ண தீர்த்தர் |
பின் வந்தவர் | ஸ்ரீசந்திரசேகர பாரதி I |
வித்தியாரண்யர் (Vidyāraṇya or Mādhava Vidyāranya), மன்னர்களை உருவாக்கும் ஆற்றலுடையவர் என்று அறியப்பட்டவர். 1336ஆம் ஆண்டில் ஹரிஹரர் மற்றும் புக்கராயன் எனும் இரு மன்னர்களை உருவாக்கி விஜயநகரப் பேரரசை நிறுவியவர். சிருங்கேரி சாரதா மடத்தின் 12வது பீடாதிபதியாக பொ.ஊ. 1380 முதல் 1386ஆம் ஆண்டு முடிய இருந்தவர்.[1] இவர் மாயணாச்சாரி – ஸ்ரீமதிதேவி தம்பதியருக்கு பம்பாசேத்திரம் எனும் (தற்கால ஹம்பியில்) 1268ஆம் ஆண்டில் பிறந்தவர்.[2]
அத்வைத வேதாந்தியாக இருந்தபோதும், வித்தியாரண்யர், ஹம்பியில் மத்துவருக்கு கோயில் எழுப்பியவர்.
வித்யாரண்யர் அத்வைத வேதாந்தத்தை விளக்கும் 15 அத்தியாயங்கள் கொண்ட பஞ்ச தசீ எனும் விளக்க நூலை எழுதியவர். மேலும் அனைத்து வேத தத்துவ தரிசனங்களை தொகுத்து சர்வதர்சனசங்கிரகம் எனும் நூலை வெளியிட்டார்.
{{cite book}}
: |edition=
has extra text (help)