வியட்நாமிய உடை (Vietnamese clothing) வியட்நாமில் அணியப்படும் மரபான உடையைச் சுட்டும்.
நிகுயேன் பேரரசில் சீனப் பாணி உடை வியட்நாம் மக்கள் மீது திணிக்கப்பட்டது.[1][2][3][4][5][6] வைட் குமோங் மக்கள் காற்சட்டைகளை ஏற்றனர்.[7] வைட் குமோங் பெண்கள் தங்களது பாவாடைகளுக்கு மாற்றாக காற்சட்டைகள் அணிய வற்புறுத்தப்பட்டனர்.[8] சீனாவின் மிங் மரபு சார்ந்த ஃஏன் பேரரசு மேற்கச்சையும் (கஞ்சுகத்தையும்) காற்சட்டையையும் வியட்நாமியர் அணிந்தனர். 1920 இல், சீனப் பாணி உடையோடு, இறுகப் பொருத்திய குறுகிய உடைகள் அறிமுகப்படுத்தியபோது ஆவொ தாய் ( Ao Dai) உடை உருவாகியது.[9]> வியட்நாமியர் அணியும் சாரோங் வகை உடைகளுக்கு மாற்றாக அணிய, சீனப் பாணிக் காற்சட்டைகளும் மேற்கஞ்சுகங்களும் 1774 இல் வூ வூவோங் பேரரசரால் ஆணையிட்டு கொள்முதல் செய்யப்பட்டன.[10] சீனவகை காற்சட்டைகளையும் மேற்கஞ்சுகங்களையும் கட்டாயமாக அணியவேண்டுமென விடநாமிய நிகுயேன் அரசு ஆணையிட்டது. 1920 வரை வடக்கு வியட்நாமில் சில பகுதிகளில் தனியாக பிரிந்திருந்த சிற்றூர்க்குடில்களில் மகளிர் பாவாடை அணிந்துவந்துள்ளனர்.[11] நிகுயேன் தோங் அரசர் சீன மிங், தாங், ஃஏன் பேரரசு பாணி உடைகளை படை வீரர்களும் அரசு அலுவலரும் அணியவேண்டுமெனக் கட்டளையிட்டார்.[12]
இருபதாம் நூற்றாண்டில் வியட்நாமியர் பன்னாட்டளவில் பரவலாக அணியபட்ட உடைகளை அணியலாயினர். ஆவோ தாய் உடை சாய்கோன் வீழ்ச்சிக்குப் பின்னர் தடைசெய்யப்பட்டது. என்றாலும் ஆவோ தாய் உடை அணியும் வழக்கம் மீண்டும் புத்துயிர்ப்பு பெற்றுள்ளது.[14] இது இப்போது வெள்ளை நிறத்தில் உயர்நிலைப்பள்ளி மாணவியரால் அணியப்படுகிறது. பெண்வரவேற்பாளரு குழுமப் பெண்செயலர்களும் கூட ஆவோ தாய் உடையை அணிகின்றனர்.[சான்று தேவை] தென்வியட்நாமிலும் வடக்கு வியட்நாமிலும் அணியும் உடைப் பாணிகள் வேறுபட்டுள்ளன.[15] அண்மையில் ஆவோ தாய் உடையை மகளிரும், புத்தியற் கூட்டுடைகள் அல்லது ஆவோ காம்/ ஆவோ தே உடைகளை ஆடவரும் அணிகின்றனர்.