கல்வி, பயிற்சி அமைச்சகம் | |
---|---|
அமைச்சர் | பூங் சுவான் நா (Phùng Xuân Nhạ) |
தேசிய கல்வி நிதி (2012) | |
Budget | தொகு உள்நாட்டுப் பொருளில் 6.3% [1] |
பொதுவான தகவல்கள் | |
முக்கியமான மொழிகள் | வியட்நாம் மொழி |
அமைப்பு வகை | அரசு (பொது), தனியார் |
கல்வியறிவு (2015 est.) | |
மொத்தம் | 94.5%[1] |
ஆண் | 96.3%[1] |
பெண் | 92.8%[1] |
Primary | 7.54 மில்லியன்[2] |
Secondary | 2.4 மில்லியன்[2] |
Post Secondary | 2,363,942[3] |
Attainment(2014) | |
Secondary diploma | 94%[4] |
Post-secondary diploma | 441,800[3] |
வியட்நாமில் கல்வி (Education in Vietnam) அரசின் பொறுப்பில் உள்ளது. இது பொதுத் துறையிலும் தனியார்த் துறையிலும் கல்வி, பயிற்சி அமைச்சகக் கட்டுபாட்டில் இயங்குகிறது. கல்வி ஐந்து மட்டங்களில் பிரிக்கப் பட்டுள்ளது. அவையாவன: பள்ளிமுன் கல்வி, தொடக்கப் பள்ளிக் கல்வி, இடைநிலைப் பள்ளிக் கல்வி,உயர்நிலைப் பள்ளிக் கல்வி, உயர்கல்வி என்பனவாகும். முறைசார் அடிப்படைக் கல்வியில் பன்னிரண்டு ஆண்டுகள் படிக்கவேண்டும். அடிப்படைக் கல்வியில் ஐந்தாண்டு தொடக்கக் கல்வியும் நான்காண்டு இடைநிலைக் கல்வியும் மூன்றாண்டு உயர்நிலைக் கல்வியும் அமையும். பெரும்பாலான அடிப்படைக் கல்வி மாணவர்கள் அரைநாள் அடிப்படையில் சேர்கின்றனர். கல்வியின் முதன்மை இலக்காக மக்களின் பொது அறிவை வளர்த்தல், தரமிக்க மாந்தவளப் பயிற்சிதரல், திறமையை வளர்த்துப் பேணுதல் ஆகியவை அமையும்."[5]