விவிலிய கோபுரம் (Bible Tower) என்பது இந்தியாவின் கேரளாவின் திருச்சூரில் அமைந்துள்ளது. இது சனவரி 7, 2007 அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது. இந்த கோபுரம் இந்தியா மற்றும் ஆசியாவிலேயே மிக உயரமான தேவாலய கோபுரம் ஆகும். கேரளா முழுவதிலும் உள்ள மிக உயரமான கட்டிடம் இதுவாகும். 79 மீட்டர் (260 அடி) உயரமுடைய கோபுரம் 42.5 மீட்டர் (140 அடி) உயரம் கொண்ட இரண்டு கோபுரங்களுக்குப் பின்னால் அமைக்கப்பட்டுள்ளது.[1]