வீட்ல விசேஷம் | |
---|---|
திரையரங்க வெளியீட்டு விளம்பரத்தட்டி | |
இயக்கம் | ஆர். ஜே. பாலாஜி என்.ஜே. சரவணன் |
தயாரிப்பு | போனே கப்பூர், ராஹுள் |
திரைக்கதை | ஆர். ஜே. பாலாஜி மற்றும் நண்பர்கள் |
இசை | கிரிஷ் கோபாலகிருஷ்ணன் |
நடிப்பு | ஆர். ஜே. பாலாஜி சத்யராஜ் ஊர்வசி அபர்ணா பாலமுரளி கே. பி. ஏ. சி. இலலிதா |
ஒளிப்பதிவு | கார்த்திக் முத்துக்குமார் |
படத்தொகுப்பு | செல்வா ஆர்.கே. |
கலையகம் | ஜீ ஸ்டூடியோஸ் பேவியூ பிக்ச்சர்ஸ் ரோமியோ பிக்ச்சர்ஸ் |
விநியோகம் | ஜீ ஸ்டூடியோஸ் ரோமியோ பிக்ச்சர்ஸ் |
வெளியீடு | 17 சூன் 2022 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வீட்ல விசேஷம் (Veetla Vishesham) என்பது ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் இயக்கிய 2022 இந்திய தமிழ் மொழி நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும்.[1][2] இது பதாய் ஹோ என்னும் 2018 இந்தித் திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும்.[3] இத்திரைப்படம் ஜீ ஸ்டூடியோஸ், பேவியூ ப்ராஜெக்ட்ஸ் எல்.எல்.பி மற்றும் ரோமியோ பிக்ச்சர்ஸுடன் இணைந்து போனே கப்பூரால் தயாரிக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டு சூன் மாதம் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகி[4] விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறை மதிப்பாய்வுகளைப் பெற்றுள்ளது. நடிகர்களின் நடிப்பு, கதை மற்றும் முதன்மை முன்னணிகளின் நேரத்துக்கேற்ற நகைச்சுவைக்காகப் பாராட்டப்பட்டு வணிக வெற்றி அடைந்தது.
இசை உரிமைகளை ஜீ மியூசிக் கம்பனி பெற்றுள்ளது. திரைப்படத்தின் இசை கிரிஷ் கோபாலகிருஷ்ணனால் இசையமைக்கப்பட்டது மற்றும் பாடல் வரிகள் பா. விஜயால் எழுதப்பட்டது.
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "தந்தைப் பாடல்" | ஆர்.ஜே. பாலாஜி, கிரிஷ் கோபாலக்கிருஷ்ணன் | 3:31 | |
2. | "பாப்பா பாட்டு (வா வெண்ணிலவே)" | சித் ஸ்ரீராம் | 4:28 | |
3. | "கல்யாணப் பாட்டு" | சிந்துரி விஷால், விஜய் யேசுதாஸ் | 2:58 | |
4. | "குடும்பப் பாட்டு (நூறு கோவில் தேவையில்லை)" | ஜெய்ராம் பாலசுப்பிரமணியம், பாம்பே ஜெயஸ்ரீ, ராம்நாத் |