வெண்வயிற்று சாரைப்பாம்பு

வெண்வயிற்று சாரைப்பாம்பு
சிங்கப்பூரில், வெண்வயிற்று சாரைப்பாம்பு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கோலுபிரிடே
பேரினம்:
தையாசு
இனம்:
தை. பசுகா
இருசொற் பெயரீடு
தையாசு பசுகா
(குந்தர், 1858)
வேறு பெயர்கள்
  • கோரிபோடான் பசுகசு குந்தர், 1858
  • சோசைசு பசுகசு குந்தர், 1864
  • சாப்ரைசு பசுகசு பெளலெஞ்சர், 1885
  • சோசைசு (சாப்ரைசு) பசுகசு போஜெர், 1887
  • சோசைசூ பசுகசு பெளலெஞ்சர், 1893
  • தையாசு பசுகசு Wall 1923
  • சோசைசூ பசுகசு கிராண்டிசன், 1978
  • சோசைசூ பசுகசு மாந்தே, 1983
  • தையாசு பசுகசு டேவிட் & வோஜெல், 1996
  • தையாசு பசுகசு காக்சு மற்றும் பலர், 1998
  • தையாசு பசுகசு மால்குமசு மற்றும் பலர், 2002
  • தையாசு பசுகா டேவிட் & தாசு, 2004

வெண்வயிற்று சாரைப்பாம்பு (white-bellied rat snake) அல்லது பழுப்பு எலி பாம்பு என்று அழைக்கப்படும் தையாசு பசுகா (Ptyas fusca) என்பது கொளுப்பிரிட் பாம்பு குடும்பத்தில் உள்ள ஒரு சிற்றினமாகும்.[2][3] இது இந்தோனேசியா, புரூணை, மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூரில் உள்ளிட்ட நாடுகளில் காணப்படுகிறது.[4]

வெண்வயிறு சாரைப்பாம்பு காடுகளின் வாழ்விடங்களை விரும்புகிறது. இவை தவளை, பல்லி, மீன்களை வேட்டையாடுவதாக அறியப்படுகிறது. இது அமைதியாக இருப்பதாகவும், தொந்தரவு செய்யும் போது கழுத்தை நிமித்தி காண்பதாக அறியப்படுகிறது. இச்செயல் ஓர் அச்சுறுத்தும் செயலாகும்.

முதிர்வடைந்த பாம்பின் மேற்பரப்பு பழுப்பு நிறத்திலிருந்து செங்கல்-சிவப்பு நிறத்திலிருக்கும். வயிற்றுப்புறச் செதில்கள் வெள்ளை முதல் வெளிர் மஞ்சள் நிறத்திலிருக்கும். பின்புற உடல் மற்றும் வால் இருபுறமும் அடர்த்தியான கருநிறக் கோடுகள் இப்பாம்பின் சிறப்பியல்பு அம்சமாகும். இளம் பாம்புகள் பெரும்பாலும் பச்சை நிறத்திலிருக்கும். இதன் கருமணி வட்டமாகவும் பெரியதாகவும் உள்ளது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Grismer, L.; Chan-Ard, T. (2012). "Ptyas fusca". IUCN Red List of Threatened Species 2012: e.T192135A2045215. doi:10.2305/IUCN.UK.2012-1.RLTS.T192135A2045215.en. https://www.iucnredlist.org/species/192135/2045215. பார்த்த நாள்: 3 July 2023. 
  2. "Ptyas fusca". uBIO. பார்க்கப்பட்ட நாள் 20 April 2014.
  3. "Ptyas fusca". பார்க்கப்பட்ட நாள் 20 April 2014.
  4. "Ptyas fusca". The Reptile Database. பார்க்கப்பட்ட நாள் 17 January 2014.
  5. "White-bellied Rat Snake - Ptyas fusca".

வெளி இணைப்புகள்

[தொகு]