வெற்றிவேல் | |
---|---|
இயக்கம் | வசந்தாமணி |
தயாரிப்பு | ஆர்.ரவீந்திரன் |
கதை | வசந்தாமணி |
இசை | டி.இமான் |
நடிப்பு | எம்.சசிக்குமார் மியா பிரபு நிகிலா விமல் |
ஒளிப்பதிவு | எஸ். ஆர். கதிர் |
படத்தொகுப்பு | ஏ. எல். ரமேஷ் |
கலையகம் | டிரைடென்ட் ஆர்ட்ஸ் |
விநியோகம் | லைக்கா ப்ரொட்க்சன்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 22, 2016 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | 10 கோடி |
வெற்றிவேல் (Vetrivel) வசந்தமணியின் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்தத் திரைப்படம் ஆகும். இப்படத்தில் எம்.சசிக்குமார், பிரபு,மியா, மற்றும் நிகிலா விமல் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். விஜி சந்திரசேகர், மற்றும் ஆனந்த் நாக் ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை எஸ். ஆர். கதிர் மேற்கொண்டார். இப்படம் 2016 ஆகஸ்டு 22 இல் வெளிவந்தது.[1][2][3] பொதுவாகவே இப்படம் விமர்சனர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
கிராமத்தில் வசித்துவரும் ராஜமாணிக்கம் (பிரபு) ஒரு பணக்கார விவசாயி. அவருக்கும் கொடூரமான எண்ணங்களைக் கொண்ட அவரது ஒன்றுவிட்ட தங்கை காயவனத்திற்கும் நீண்ட காலமாக நிலப்பிரச்சினை இன்று உள்ளது.வெற்றிவேல் என்ற இளைஞன்(எம்.சசிக்குமார்) தனது தாய் தந்தை(இளவரசு,ரேணுகா) மற்றும் தம்பி சரவணனுடன் (ஆனந்த் நாக்) அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறான். ராஜமாணிக்கத்தின் ஒரே செல்ல மகள் சுபா(வர்ஷா)வின் மீது சரவணன் காதல் கொள்கிறான். இதற்கிடையில் வெற்றிவேல் விவசாய ஆராய்ச்சியாளர் ஜனனி(மியா)யை விரும்புகிறான். வெற்றிவேல்,தனது தம்பி சரவணனுக்கும் சுபாவுக்குமிடையே திருமணம் செய்து வைக்க ராஜமாணிக்கத்தை அணுகுமாறு தனது தந்தையிடம் கூறுகிறான்.ராஜமாணிக்கம் இருவருக்கிடையேயான சாதி வே\றுபாட்டினை காரணம் காட்டி திருமணத்தை நடத்தி வைக்க மறுக்கிறார். கோயில் திருவிழாவில் சுபாவை கடத்துவதற்காக வெற்றிவேலும்,சரவணனும் எடுக்கும் முயற்சியில் எதிபாராவிதமாக லதா(நிகிலா விமல்)வை கடத்திவிடுகின்றனர். காயாவனத்தின் மகன் அருளுக்கும் லதாவிற்குமான திருமணம் சில தினங்களில் நடைபெறவுள்ளது. நடந்த தவறை உண்ர்ந்த வெற்றிவேல் உடனடியாக அவளை அவளது கிராமத்தில் விட்டுவிட்டு வர எண்ணுகிறான் அவள் வேறு ஒருவருடன் ஓடிவிட்டதாக கருதி லதாவின் தந்தை தற்கொலை செய்துகொள்கிறார். தன் தந்தையின் வாழ்க்கை முடிவுற்றதற்கு காயாவனம்தான் காரணமென லதா புரிந்து கொள்கிறாள்.
வெற்றிவேல் வேறு வழியில்லாமல் லதாவை திருமணம் செய்து கொள்ள நேரிடுகிறது. வெற்றிவேலுடைய பெற்றோர்களும் லதாவின் நிலைமையை புரிந்துகொள்கிறார்கள். ஜனனி ஏமாற்றமடைந்தாலும், வெற்றிவேலின் நிலைமையை புரிந்துகொண்டு, அவனது திருமணதை ஏற்றுக்கொள்கிறாள்.இதற்கிடையில் ராஜமாணிக்கம் தனது மகள் சுபாவை உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்துவைக்கத் திட்டமிடுகிறார், ஆனால் வெற்றிவேல் இதில் தலையிட்டு திருமண பேச்சுவார்த்தைகளை ரத்து செய்துவிடுகிறார். கடைசியாக காயாவனத்திற்கும் தனக்குமான உள்ள நீண்டகால பிரச்சனையினை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சுபாவை அருளுக்கு திருமணம் செய்து தர ராஜமாணிக்கம் தீர்மானிக்கிறார். காயாவனதின் வீட்டில் திருமண ஏற்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வந்தாலும் வெற்றிவேலுடைய தலையீட்டால் எங்கே திருமணம் தடைபடுமோ என அஞ்சுகின்றனர். தன்னை பழிவாங்கும் ஒரு முயற்சியாகவே சுபாவை காயாவனம் தனது மகனுக்குத் திருமணம் செய்யத் திட்டமிட்டிருப்பதாக ராஜமாணிக்கம் அறிந்து கொள்கிறார்.
ராஜமாணிக்கம் தனது தவறினை உணர்ந்து வெற்றிவேலை அணுகி சரவணனுக்கும் சுபாவிற்குமான திருமணத்தை நடத்திட ஒப்புக்கொள்கிறார். வெற்றிவேலை சந்தித்துவிட்டுத் திரும்பும் வழியில் ராஜமாணிக்கம் காயாவனத்தின் ஆட்களால் கடத்தப்படுகிறார். இதற்கிடையில் நேரில் வந்து அவளை காப்பாற்றிச் செல்ல வலியுறுத்துமாறு சுபாவிடம் அருள் தெரிவிக்கிறான். அங்கே வந்த சரவணன் அருள் தனது அடியாட்களுடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறான். இது காயாவனமும், அருளும் இணந்து சரவணனைக் கொல்லத் திட்டமிட்டது என்பது தெரியவருகிறது. இறுதியாக வெற்றிவேல் அங்கு வந்து அனைவரையும் அடித்துவிட்டு, சரவணனை காப்பாற்றுகிறான். இறுதியாக சுபா சரவணன் திருமணம் நடைபெறுகிறது..