வெள்ளீயம்(IV) நைட்ரேட்டு

வெள்ளீயம்(IV) நைட்ரேட்டு
Tin(IV) nitrate[1][2]
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • Stannic nitrate
இனங்காட்டிகள்
13826-70-5
ChemSpider 8104756
EC number 694-339-7
InChI
  • InChI=1S/4NO3.Sn/c4*2-1(3)4;/q4*-1;+4
    Key: YQMWDQQWGKVOSQ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23278539
  • [N+](=O)([O-])O[Sn](O[N+](=O)[O-])(O[N+](=O)[O-])O[N+](=O)[O-]
பண்புகள்
Sn(NO3)4
வாய்ப்பாட்டு எடை 366.73 கி/மோல்
தோற்றம் பட்டு போன்ற படிகங்கள்
அடர்த்தி 2.65 கி/செ.மீ3
உருகுநிலை 91 °C (196 °F; 364 K)
கொதிநிலை 98 °C (208 °F; 371 K) (சிதைவடையும்)
வினைபுரியும்
கரைதிறன் கார்பன் டெட்ராகுளோரைடு, குளோரோபாரம் ஆகியவற்றில் கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு Monoclinic
புறவெளித் தொகுதி P21/c
Lattice constant a = 7.80 Å, b = 13.85 Å, c = 10.23 Å
தீங்குகள்
GHS pictograms GHS03: Oxidizing The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H272, H314
P220, P280, P305+351+338, P310
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

வெள்ளீயம்(IV) நைட்ரேட்டு (Tin(IV) nitrate) என்பது Sn(NO3)4 என்ற என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிம வேதியியல் சேர்மமாகும். நைட்ரிக் அமிலமும் வெள்ளீயமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது. வெண்மை நிறத்தில் திண்மநிலையில் காணப்படும் இவ்வுப்பு எளிதில் ஆவியாகும். வெற்றிடத்தில் 40 பாகை செல்சியசு வெப்பநிலையில் பதங்கமாகும். மற்ற நைட்ரேட்டுகளைப் போலல்லாமல், வெள்ளீயம்(IV) நைட்ரேட்டு தண்ணீருடன் வினைபுரிந்து நைட்ரசன் டை ஆக்சைடை உருவாக்குகிறது.

கட்டமைப்பு

[தொகு]

வெள்ளீயம்(IV) நைட்ரேட்டு தைட்டானியம்(IV) நைட்ரேட்டின் கட்டமைப்பை மிகவும் ஒத்திருக்கிறது, Sn-O பிணைப்பு (2.161 Å) Ti-O பிணைப்பை (2.068 Å) விட சற்றே நீளமாக இருப்பது மட்டுமே இவ்விரண்டுக்குமான முக்கிய வேறுபாடாகும்.[3]

தயாரிப்பு

[தொகு]

முதன்முதலில் 1960 ஆம் ஆண்டுகளில் வெள்ளீயம்(IV) நைட்ரேட்டு தயாரிக்கப்பட்டது. வெள்ளீயம்(IV) குளோரைடு டைநைட்ரசன் பெண்டாக்சைடுடன் -78 °செல்சியசு வெப்பநிலையில் சேர்க்கப்பட்டது. இவ்வினையில் வெள்ளீய்யம்(IV) நைட்ரேட்டும் நைட்ரைல் குளோரைடும் உருவாகின.[4]

SnCl4 + 4 N2O5 → Sn(NO3)4 + 4 NO2Cl

வெள்ளீயம்(II) ஆக்சைடுடன் நைட்ரிக் அமிலத்தை சேர்த்து வினைபுரியச் செய்து இந்த சேர்மத்தை தயாரிக்கும் முயற்சியில் வெள்ளீயம்(II) நைட்ரேட்டு ஐதராக்சைடு உருவானது.[5]

வினைகள்

[தொகு]

வெள்ளீயம்(IV) நைட்ரேட்டு தண்ணீருக்கு உணர்திறன் கொண்டதாகும். இது நீராற்பகுப்பு வினைக்கு உட்பட்டு வெள்ளீயம்(IV) ஆக்சைடு மற்றும் நைட்ரசன் டை ஆக்சைடாக மாறுகிறது. முப்புளோரோ அசிட்டிக் அமில நீரிலியுடன் இது வினையில் ஈடுபட்டு (NO2+)2[Sn(OOCCF3)62−] சேர்மத்தைக் கொடுக்கிறது. இது ஒரு நைட்ரோனியம் உப்பாகும். முப்புளோரோ அசிட்டிக் அமிலத்துடன் வினைபுரிந்தும் இதையொத்த சேர்மத்தை கொடுக்கிறது. [6]

வெள்ளீயம்(IV) நைட்ரேட்டு அசிட்டிக் நீரிலி அல்லது அசிட்டிக் அமிலத்துடன் வினைபுரிந்து வெள்ளீயம்(IV) அசிட்டேட்டை உருவாக்குகிறது. நைட்ரிக் ஆக்சைடுடன் வினைபுரிந்தால் வெள்ளீயம்(IV) ஆக்சிநைட்ரேட்டு உருவாகும். உருவாக்குகிறது.

முப்பீனைலார்சீன், முப்பீனைல்பாசுபீனுடன் வெள்ளீயம்(IV) நைட்ரேட்டு வினைபுரிகையில் டைநைட்ரேட்டோவெளீயம்(IV)பிசு (டைபீனைல்பாசுபோனேட்டு) மற்றும் டைநைட்ரேட்டோவெளீயம்(IV) பிசு(டைபீனைலார்சனேட்டு) ஆகிய அணைவுச் சேர்மங்களை அளிக்கிறது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tin(IV) Nitrate". American Elements. பார்க்கப்பட்ட நாள் 16 February 2021.
  2. "Tin(IV) nitrate". Sigma-Aldrich. பார்க்கப்பட்ட நாள் 16 February 2021.
  3. C. D. Garner; D. Sutton; S. C. Wallwork (1967). "The crystal structures of anhydrous nitrates and their complexes. Part IV. Tin(IV) nitrate" (in en). Journal of the Chemical Society A: Inorganic, Physical, Theoretical: 1949–1954. doi:10.1039/J19670001949. 
  4. C. C. Addison; W. B. Simpson (1965). "Tin(IV) nitrate: the relation between structure and reactivity of metal nitrates" (in en). Journal of the Chemical Society: 598–602. doi:10.1039/JR9650000598. 
  5. J. D. Donaldson; W. Moser (1961). "Basic tin(II) nitrate" (in en). Journal of the Chemical Society (Resumed) 381: 1996–2000. doi:10.1039/JR9610001996. 
  6. 6.0 6.1 Harrison, Philip G.; Khalil, Mutassim I.; Logan, Norman (January 1978). "A contribution to the chemistry of tin(IV) nitrate". Inorganica Chimica Acta 30: 165–170. doi:10.1016/S0020-1693(00)89031-3.