தெற்காசிய வரலாற்றுக் காலக்கோடு |
---|
ஹரிகேள இராச்சியம் (Harikela) இந்தியத் துணைக்கண்டத்தின் பண்டைய கிழக்கு வங்காளத்தின் ஒரு இராச்சியம் ஆகும். பல வரலாற்று நூல்கள் மற்றும் வெள்ளி நாணயங்கள் மூலம் இந்த இராச்சியத்தைக் குறித்து அறிய முடிகிறது.
சந்திர குலத்தவர்கள், வர்மன் அரசமரபினரை வென்று கி பி பத்தாம் நூற்றாண்டில் கிழக்கு வங்காளத்தில் ஹரிகேள இராச்சியத்தை நிறுவினர். கி பி 13-ஆம் நூற்றாண்டில் சென் பேரரசால் சந்திர குல ஹரிகேள இராச்சியம் வெற்றி கொள்ளப்பட்டது.
இறுதியாக தில்லி சுல்தான்கள் ஆட்சிக் காலத்தில், வங்காள மாகாண ஆளுநரின் கீழ் ஹரிகேள இராச்சியம் இருந்தது.[1]
ஹரிகேள இராச்சியத்தின் தலைநகரம் முதலில் சிட்டகாங் அருகில் இருந்தது. பின்னர் முன்ஷிகஞ்சிற்கு மாற்றப்பட்டது. [2] தற்கால வங்காளதேசத்தின் கடற்கரை பகுதியில் இருந்த ஹரிகேள இராச்சியத்தை அரபு வணிகர்கள் ஹர்கண்ட் என அழைத்தனர். ஹரிகேள இராச்சியத்தில் சில்ஹெட் பகுதியும் இருந்தது.[3]பின்னர் சுந்தரவனக்காடுகள் இருந்த பகுதிகளும் ஹரிகேள இராச்சியத்தில் இருந்தது. சுந்தரவனக் காடுகள் இருந்தது.[4]
{{cite book}}
: Cite has empty unknown parameter: |coauthors=
(help){{cite book}}
: Cite has empty unknown parameter: |coauthors=
(help)