ஹர்மோகன் தவான் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1989-1991 | |
முன்னையவர் | ஆரிப் முகமது கான் |
பின்னவர் | மாதவ்ராவ் சிந்தியா |
தொகுதி | சண்டிகர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பத்தேசங், பஞ்சாப், இந்தியா | 14 சூலை 1940
இறப்பு | 27 சனவரி 2024 மொகாலி, பஞ்சாப், இந்தியா | (அகவை 83)
தேசியம் | இந்தியர் |
துணைவர் | சத்திந்தர் தவான் |
பிள்ளைகள் | 2 மகன்கள், 1 மகள் |
வாழிடம் | அம்பாலா பாசறைப் பகுதி |
மூலம்: [1] |
ஹர்மோகன் தவான் (Harmohan Dhawan; 14 சூலை 1940 – 27 சனவரி 2024) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர், இந்தியாவின் சண்டிகரிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். இவர் 14 ஜூலை 1940 அன்று கைம்பல்பூர் மாவட்டத்தின் பதேசங்கில் பிறந்தார் (இப்போது பாக்கித்தான்). 1947 இல் இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, இவரது குடும்பம் இந்தியாவின் அம்பாலா பாசறைப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. இவருக்கு 1983ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவரால் சிறந்த இளம் தொழில்முனைவோர் விருது வழங்கப்பட்டது.
1960 ஆம் ஆண்டில், சண்டிகரின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் சேர்ந்த இவர் 1963இல் இளம் அறிவியல் பட்டத்தையும், 1965இல் முதுகலை அறிவியல் பட்டத்தையும் பெற்றார். 1965 முதல் 1970 வரை ஆராய்ச்சி அறிஞராக இருந்தார். "வடமேற்கு இமயமலையின் பொருளாதார தாவரங்களின் உயிரணு உயிரியல்" பற்றி ஆராய்ச்சி செய்தார். 1970ஆம் ஆண்டில் தவான் ஒரு சிறிய அளவிலான அலகு ஒன்றைத் தொடங்கி [1], சண்டிகரின் தொழில்துறை சங்கத்தின்] தலைவரானார்.[2] 1979ஆம் ஆண்டில், இவர் "மெஹ்ஃபில்" என்றழைக்கப்படும் சிறந்த உணவகத்தைத் தொடங்கியதன் மூலம் விருந்தோம்பல் துறையில் நுழைந்தார்.
1977ஆம் ஆண்டில் இவர் அரசியலில் சேர்ந்தார். மறைந்த பிரதமர் சந்திரசேகர் இவரது அரசியல் குரு ஆவார். தவான் 1981இல் ஜனதா கட்சியின் தலைவரானார். சமூகத்தின் பேரில் கொண்டிருந்த ஆர்வம் காரணமாக[3] தாழ்த்தப்பட்டவர்களின் நலனுக்காக போராடினார். மேலும், அவர்களுக்காக 10 முறைக்கு மேல் சிறைக்கு சென்றார்.
1989 ஆம் ஆண்டில் அவர் சண்டிகர் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, சந்திரசேகர் அரசில் விமானப் போக்குவரத்து அமைச்சரானார்.[4]
பின்னர், பாரதிய ஜனதாவில் சேர்ந்து அதன் மூத்த தலைவராக இருந்தார்.[5][6] அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி அரசின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட தவான் இப்போது ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளார்.