| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
1,3-டைபுளோரோ-2-புரோப்பனால்
| |||
இனங்காட்டிகள் | |||
453-13-4 | |||
ChemSpider | 61300 | ||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
பப்கெம் | 67985 | ||
| |||
பண்புகள் | |||
C3H6F2O | |||
வாய்ப்பாட்டு எடை | 96.08 g·mol−1 | ||
அடர்த்தி | 1.24 கி/செ.மீ3 (25 °செல்சியசு வெப்பநிலையில்) [1] | ||
கொதிநிலை | 54 முதல் 55 °C (129 முதல் 131 °F; 327 முதல் 328 K) | ||
தீங்குகள் | |||
தீப்பற்றும் வெப்பநிலை | 42 °C (108 °F; 315 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
1,3-இருபுளோரோ-2-புரோப்பனால் (1,3-Difluoro-2-propanol) என்பது C3H6F2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமவேதியியல் சேர்மமாகும். 1,3-டைபுளோரோ-2-புரோப்பனால் என்றும் அழைக்கப்படும் இச்சேர்மம் ஒரு வளர்சிதைமாற்ற நச்சுப்பொருளாகும். சிட்ரிக் அமில சுழற்சியை இது சீர்குலைக்கிறது. சோடியம் புளோரோ அசிட்டேட்டைப் பயன்படுத்துவது போல இதையும் எலியினக் கொல்லியாகப் பயன்படுத்துகிறார்கள். முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட எலியினக் கொல்லி தயாரிப்பான கிளிப்டரில் 1,3-இருபுளோரோ-2-புரோப்பனால் ஒரு முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டது. அங்கு இதனுடன் 1-குளோரோ-3-புளோரோ-2-புரோபனாலும் சேர்த்து கிளிப்டர் கொல்லி தயாரிக்கப்பட்டது.[2][3][4]