1971 மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சி 1971 JVP insurrection |
|||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
பனிப்போர் பகுதி | |||||||||
![]() தெனியாய காவல் நிலையம் மீது தாக்குதல் |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
![]() இராணுவத் தலையீடு: | ![]() ஆதரவு: ![]() |
||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
![]() ![]() ![]() ![]() ![]() | ![]() ![]() ![]() ![]() ![]() |
||||||||
படைப் பிரிவுகள் | |||||||||
*![]() | *சோசலிச மாணவர் ஒன்றியம் | ||||||||
பலம் | |||||||||
7,000 தரைப்படை 1,900 வான்படை 2,000 கடற்படை சோவியத் வான்படை: 60 | ![]() 80,000 பின்பற்றுவோர் (மதிப்பீடு) |
||||||||
இழப்புகள் | |||||||||
காவல்துறை: 37 இறப்புகள்; 195 காயம்
படைத்துறை: 26 இறப்புகள்; 310 காயம்; 1 வானூர்தி | ![]() <12,000 கொல்லப்பட்டனர் (அரச மதிப்பீடு)[2] 5,700 சரண்[3] ![]() ![]() |
||||||||
12,000 இறப்புகள் (அரசுத் தகவல்) 15,000 - 20,000+ இறப்புகள் (நடுநிலை மதிப்பீடுகள்)[5] 50,000 இற்கும் அதிகமான இறப்புகள் (ஆர்வலர் மதிப்பீடுகள்)[2] இரண்டாம் கட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் இறப்பு.[6] |
1971 மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சி (1971 Janatha Vimukthi Peramuna insurrection) அல்லது 1971 கிளர்ச்சி (1971 Revolt) என்பது அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் கீழிருந்த இலங்கையின் ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக கம்யூனிச மக்கள் விடுதலை முன்னணி (மவிமு) நடத்திய தோல்வியுற்ற ஆயுதக் கிளர்ச்சி ஆகும். இந்தக் கிளர்ச்சி 1971 ஏப்ரல் 5 தொடங்கி 1971 சூன் வரை நீடித்தது. படையினரையும் ஆயுதங்களையும் அனுப்பிய நட்பு நாடுகளின் வலுவான ஆதரவுடன் இலங்கைப் படைத்துறையால் பிராந்தியங்கள் மீண்டும் கைப்பற்றப்படும் வரை, கிளர்ச்சியாளர்கள் பல வாரங்கள் தென், சப்ரகமுவா மாகாணங்களின் நகரங்களையும் கிராமப்புறங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.[7] அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான இந்த முதல் முயற்சி ஆயுதப் பலத்தால் விரைவாக நசுக்கப்பட்டாலும், 1987 ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணி தீவின் தெற்கு, மத்திய, மேற்கு மாகாணங்களில் குறைந்த தீவிரம் கொண்ட கிளர்ச்சியைத் தொடங்கியது, ஆனால் அது பல மாதங்களுக்கு நீடித்தது.
கிளர்ச்சி முறையாக 1971 இல் தொடங்கியது, ஆனால் முதல் தாக்குதல்கள் 1970 இல் நடந்தன. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, சோசலிச ஆதரவு ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கு எதிராகத் தீவு முழுவதும் போர்க்குணமிக்க எதிர்ப்பைத் தொடங்குவதற்கு முன்பு, மக்கள் விடுதலை முன்னணி வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்த்துப் போராடியது. சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கத்தின் சோசலிசப் பின்னணி பல நாடுகளின் கவனத்தை ஈர்த்தது, அவை அதை ஆதரிக்க முன்வந்தன. சோவியத் ஒன்றியம் 60 வான்படை வீரர்களை அனுப்பியது;[8] இந்தியா வட கொரியக் கப்பல்களையும் துறைமுகங்களைத் தாக்கிய ஒரு சீன சரக்குக் கப்பலையும் நிறுத்தி, கோட்டைகளைப் பாதுகாத்தது, சீனா இராசதந்திர உதவிகளை வழங்கிய போதிலும், அது கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது; சீனத் தூதரக அதிகாரிகள் வட கொரியாவைத் தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது. வடகொரியா கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் வழங்கியது.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link)