1977 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1977

← 1974 ஆகஸ்ட் 6, 1977 1982 →
 
வேட்பாளர் நீலம் சஞ்சீவ ரெட்டி
கட்சி ஜனதா கட்சி
சொந்த மாநிலம் ஆந்திரப் பிரதேசம்

தேர்வு வாக்குகள்
போட்டியின்றி தேர்வு


முந்தைய குடியரசுத் தலைவர்

பக்ருதின் அலி அகமது
காங்கிரசு

குடியரசுத் தலைவர் -தெரிவு

நீலம் சஞ்சீவ ரெட்டி
ஜனதா கட்சி


இந்தியக் குடியரசின் ஏழாவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1977 ல் நடைபெற்றது. ஜனதா கட்சியின் நீலம் சஞ்சீவ ரெட்டி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு குடியரசுத் தலைவரானார்

பின்புலம்

[தொகு]

ஆகஸ்ட் 6, 1977ல் இந்தியாவின் ஏழாவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. 1974ல் குடியரசுத் தலைவரான பக்ருதின் அலி அகமது பதவியில் இருக்கும் போதே பெப்ரவரி 11, 1974ல் மரணமடைந்தார். புதிய தேர்தல் நடத்துவதற்கு முன்னர் 1977 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருந்ததால் துணைக்குடியரசுத் தலைவர் பசப்பா தனப்பா ஜாட்டி தற்காலிக குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு கட்சி படுதோல்வி அடைந்து ஜனதா கட்சி கூட்டணி வெற்றி பெற்றது. ஜனதா கட்சி அரசு இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் சட்டம் (திருத்தம்), 1977 இனை இயற்றி, உச்ச நீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் ஏற்படும் பிணக்குகளைத் தீர்க்க அதிகாரம் வழங்கியது. பின் ஆகஸ்ட் 6ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. 1969 குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்த சஞ்சீவ ரெட்டி ஜனதா கட்சி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தோல்வியால் நிலை குலைந்திருந்த இந்திரா காந்தியின் காங்கிரசு எந்த வேட்பாளரையும் நிறுத்த வில்லை. வேறு பலர் மனுதாக்கல் செய்திருந்தாலும் அவர்களது மனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன. இதனால் சஞ்சீவ ரெட்டி போட்டியின்றி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]