30 மே 1990 அன்று, கோசாபா ரங்கபெலியாவிலிருந்து திரும்பும் போது மூன்று சுகாதார அதிகாரிகள், மேற்கு வங்காள அரசின் சுகாதாரத் துறையைச் சேர்ந்த இருவர் மற்றும் நாடுகளின் சிறுவர் நிதியத்தினைச் சேர்ந்த ஒருவர் பந்தலா சாலையில் ஒரு குழுவால் பாலியல் வன்கலவி செய்யப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை எதிர்க்கும் போது ஒரு அதிகாரி மற்றும் அவர்களது ஓட்டுநர் இறந்தனர்.
30 மே 1990 இல், கோசாபாவில் ஒரு தடுப்பூசி திட்டத்தை ஆய்வு செய்த பிறகு மூன்று சுகாதார அதிகாரிகள் குழு கொல்கத்தாவுக்குத் திரும்பிக்கொண்டிருந்தது.[1] [2] இந்த குழுவில் மேற்கு வங்க சுகாதாரத் துறையின் துணை மாவட்ட விரிவாக்க ஊடக அலுவலர் அனிதா திவான் இருந்தார். உமா கோஷ், சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி; மற்றும் புது தில்லியில் உள்ள உலக சுகாதார அமைப்பு அலுவலகத்தின் பிரதிநிதி ரேணு கோசு ஆகியோர் இருந்தனர். மாலை 6:30 மணியளவில் அவர்கள் கிழக்கு பெருநகர புறவழிச்சாலைக்கு அருகில் உள்ள பந்தலை அடைந்தபோது, 4-5 இளைஞர்கள் குழு உள்ளூர் சங்கத்தின் அருகே தங்கள் மகிழுந்துவை நிறுத்தினர். [3] [4] ஓட்டுநர் அபானி நையா தப்பிக்க முயன்றார், ஆனால் அவரது கட்டுப்பாட்டை இழந்து மகிழுந்து கவிழ்ந்தது. இதற்கிடையில், 10-12 இளைஞர்கள் கொண்ட மற்றொரு குழு அந்த இடத்திற்கு வந்தது, அதில் ஒருவர் ஒரு பெண்ணை மகிழுந்துவில் இருந்து வெளியே இழுத்தார், மற்றவர்கள் மற்ற இரண்டு பெண்களை வெளியே இழுத்தனர். மகிழுந்து ஓட்டுநர் இளைஞர்களை எதிர்க்க முயன்றார், ஆனால் அவரால் அவர்களை தடுக்க இயலவில்லை. தாக்குதல் நடத்தியவர்கள் ஓட்டுநரைக் கொன்றுவிட்டு மகிழுந்துவை தீ வைத்துக் கொளுத்தினர்.[5] பின்னர் அந்த பெண் அதிகாரிகள் அருகிலுள்ள நெல் வயலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கலவி செய்யப்பட்டனர். கற்பழிப்பாளர்களை எதிர்க்க முயன்ற போது அந்தக் குழுவினால் அந்தப் பெண்களில் ஒருவர் கொல்லப்பட்டார்.
அதிகாரிகளின் நிர்வாண உடல்களை கல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரியின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு இரவு 11:30 மணியளவில் காவல் துறையினர் கொண்டு வந்தனர். ஆரம்பத்தில் அவர்கள் இறந்துவிட்டதாக கருதப்பட்டது, ஆனால் பின்னர் அவர்களில் இருவர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இறந்த பெண்ணை பரிசோதித்த பெண் மருத்துவர் ஒருவர் அதிகாரியின் பெண்ணுறுப்புச் சிதைவினைப் பார்த்த போது அதில் ஒரு கைவிளக்கு இருந்ததினைக் கண்டபோது மயங்கி விழுந்தார்.
காயமடைந்த ஓட்டுநர் சிகிச்சைக்காக SSKM மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் உடலில், கூர்மையான மற்றும் கனமான ஆயுதங்களால் தாக்கியதில் 43 காயங்களை ஏற்பட்டிருந்தன.[6] அவரது ஆண்குறியை தாக்குதல் நடத்தியவர்கள் கடுமையாகத் தாக்கியிருந்தனர். 4 ஜூன் 1990 காலை 5:40 மணிக்கு, அவர் இறந்தார். அவரது உடலின் பிரேத பரிசோதனையை சுகாதார துறையின் மருத்துவ அதிகாரி மருத்துவர் பிசுவநாத் ககாலி மேற்கொண்டார். [7]
அப்போதைய மேற்கு வங்கத்தின் சுகாதார அமைச்சராக இருந்த பிரசாந்தா சுர், பாதிக்கப்பட்டவர்களை குழந்தை கடத்தல்காரர்கள் என்று தவறாக நினைத்திருக்கலாம் என்று வாதிடுவதன் மூலம் அந்தக் குழுவினை பாதுகாத்ததாகக் கருதப்பட்டது. ஆனால் சம்பவத்தின் உண்மையான காரணம் குறித்து சர்ச்சை தற்போதும் உள்ளது. இந்தியா முழுவதும் ஊடகங்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட இந்த சம்பவம் குறித்து அப்போதைய முதல்வர் ஜோதிபாசு ஒரு சாதாரண கருத்தை வெளியிட்டார். [8] [9] இருப்பினும், அரசாங்கம் விசாரணையை மேற்கொண்டது, இறுதியாக, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரும் ஆயுள் தண்டனை அனுபவித்தனர். [10]