1997 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவில் நிகழ்ந்த காட்டுத்தீ நிகழ்வுகள் என்பது 1997 ஆம் ஆண்டு தொடங்கி 1998 ஆம் ஆண்டு வரை நீடித்த காட்டுத்தீ நிகழ்வுகளைக் குறிக்கும். கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் உள்ள வரலாற்றுப் பதிவுகளின் படி பெரிய காட்டுத்தீ நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும்.
1997 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ அண்டை நாடுகளை பாதிக்கத் தொடங்கியது, மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு தடிமனான புகை மற்றும் மூடுபனி பரவியது. பின்னர் மலேசிய பிரதமர் மகாதீர் பின் மொஹமட் ஒரு தீர்வைத் தேடினார்,[1] மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைவரின் திட்டத்தின் அடிப்படையில் மலேசிய தீயணைப்பு வீரர்கள் குழுவை இந்தோனேசியாவுக்கு ஆபரேஷன் ஹேஸ் என்ற அடையாளப் பெயரில் அனுப்பினார். இது மலேசிய பொருளாதாரத்தின் மீது ஹேஸின் விளைவைத் தணிப்பதன் பொருட்டு செய்யப்பட்ட நடவடிக்கையாகும். மலேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஹேஸ் சேதத்தின் மதிப்பு 0.30 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.[2]
டிசம்பர் தொடக்கத்தில் பருவ மழை ஒரு குறுகிய கால அவகாசத்தைத் தந்தது. ஆனால் வறண்ட சூழ்நிலைகள் திரும்பியவுடன் தீ நிகழ்வுகள் மீண்டும் தொடங்கின. 1997 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும், 1998 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் புருனே, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை ஆகியவை காட்டுத் தீயின் புகையை உணர்ந்தன. 1997-98 காட்டுத் தீயின் விளைவா, இறுதியாக 8 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் எரிந்ததுடன், எண்ணற்ற மில்லியன் மக்கள் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டனர்.
1997 ஆம் ஆண்டு இந்தோனேசிய காட்டுத் தீ நிலப்பயன்பாட்டு மாற்றத்தால் ஏற்பட்டது, இது அந்த ஆண்டின் எல் நினோவுடன் தொடர்புடைய வறட்சியின் போது வெப்பமண்டல காடுகளை தீக்குள்ளாக்கியது . இந்தோனேசிய காடுகள் வரலாற்று ரீதியாக நீண்ட வறண்ட காலங்களில் கூட, விரைவான விவசாயத்திற்காக நிலங்களைத் தீப்பற்றச் செய்து அழித்த போதும்கூட தீப்பற்றுதல் நிகழாத தன்மை உடையனவாக இருந்தன. தொழில்துறைத் தேவைகளுக்காக அதிக அளவிலான மரம் வெட்டுதல், தோட்ட மண்ணை வளப்படுத்தி வேகமாக வளரும் எண்ணெய்ப் பனை விதைப்பிற்காக மாற்றுதல் மற்றும் சதுப்பு நிலங்களை மேம்படுத்தி அவற்றை நெல் விளைச்சலுக்கான நிலங்களாக மாற்றுவதற்கான ஒரு பெரிய அரசாங்கத் திட்டம் ஆகியவை தீ விபத்துக்கு வழிவகுத்த நில பயன்பாட்டு மாற்றங்கள் ஆகும்.[3] இந்தக் காட்டுத்தீயில் மொத்தம் 240 பேர் உயிரிழந்தனர்.[4]
சேதங்களின் மொத்த பொருளாதார மதிப்பு தோராயமாக 4.47 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது, அவற்றில் மிகப் பெரிய பங்கு இந்தோனேசியாவால் ஏற்கப்பட்டது.[5] இந்த மதிப்பீடானது, மனித உயிர்களை இழப்பது, நீண்டகால சுகாதார பாதிப்புகள் மற்றும் சில பல்லுயிர் இழப்புகள் போன்ற பணவியல் அடிப்படையில் அளவிட அல்லது மதிப்பிடுவதற்கு இயலாத பல சேதங்களை விலக்கியதன் அடிப்படையில் பெறப்பட்டதாகும்.
1997 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ 0.81 முதல் 2.57 ஜிகாடன் கார்பன் வரை வளிமண்டலத்தில் வெளியிடப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதின் காரணமாக ஆண்டொன்றுக்கு வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தில் 13-40% வரை உள்ளது.[6][7]
ஹேஸ் மீண்டும் வருவதைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ஆசியான்) 1998 ஆம் ஆண்டில் பிராந்திய ஹேஸ் செயல் திட்டத்தில் (RHAP) முன்கூட்டிய எச்சரிக்கை முறையின் (மேம்பட்ட நிர்வாகக் கொள்கைகள் மற்றும் அமலாக்கங்கள், எடுத்துக்காட்டாக தீ ஆபத்து மதிப்பீட்டு முறைமை (FDRS) வழியாக நடவடிக்கைகள்) அவசியத்திற்கு ஒப்புதல் அளித்தது.[8]