2001 கிஷ்துவார் படுகொலை | |
---|---|
ஜம்மு காஷ்மீரில் கிஷ்துவாரின் அமைவிடம் | |
இடம் | கிஷ்துவார், கிஷ்துவார் மாவட்டம், ஜம்மு காஷ்மீர், இந்தியா |
நாள் | 3 ஆகஸ்டு 2001 |
இறப்பு(கள்) | 17 |
காயமடைந்தோர் | 5 |
2001 கிஷ்துவார் படுகொலை (2001 Kishtwar massacre) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்துவார் மாவட்டத்தின் தலைமையிடமான கிஷ்துவார் நகரத்தை ஒட்டி ஒரு கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்த இந்து விவசாயிகள் மீது 10 பாகிஸ்தானிய இசுலாமிய பயங்கரவாத லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பினர் 3 ஆகஸ்டு 2001 அன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.[1][2] இப்படுகொலைகள் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அரசை விமர்சனம் செய்தனர். குறைகூறினர்.[3]
மூன்று நாட்கள் கழித்து பாதுகாப்புப் படைகளால் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதி முஜிபுர் இரக்மான் சுட்டுக்கொல்லப்பட்டார்.[4] இப்படுகொலைக்கு எதிராக ஜம்மு, உதம்பூர் மற்றும் கதுவா ஆகிய இடங்களில் இந்துக்கள் பாகிஸ்தான் தேசியக் கொடி மற்றும் அதிபர் முஷரப் கான் உருவப் பொம்மையை எரித்தனர்.[5]