2006 நேபாள சனநாயக இயக்கம் (2006 Democracy Movement, நேபாளி: लोकतन्त्र आन्दोलन) நேபாளத்தில் நாடாளுமன்ற மக்களாட்சியை நிறுவவும், நேபாள மன்னரின் சனநாயகமற்ற நேரடி முடியாட்சியை ஒழிக்கவும், நேபாள அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து போராடிய இரண்டாவது மக்கள் இயக்கம் ஆகும். [1]இவ்வியக்கத்தினால் நாட்டை நேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு என அழைக்கப்பட்டது. நேபாளத்தில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டது. நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக ராம் பரன் யாதவ் பொறுப்பேறார்.
24 ஏப்ரல் 2006ல் தற்காலிக இடைநீக்கம் செய்திருந்த பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் செயல்பட நேபாள மன்னர் அனுதித்தார்.[2][3] நேபாளத்தின் தேசிய ஒற்றுமை மற்றும் வளமைக்கு நேபாளி காங்கிரஸ் - நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) உள்ளிட்ட ஏழு கட்சிகளின் கூட்டணி அரசு அமைப்பதற்கு நேபாள மன்னர் ஞானேந்திரா அனுமதி வழங்கினார். கிரிஜா பிரசாத் கொய்ராலா புதிய கூட்டணி அரசின் பிரதம அமைச்சரானார். இக்கூட்டணி அரசு, நேபாளத்தின் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை இயற்றுவதற்கு வசதியாக, அரசியல் அமைப்பு நிர்ணய மன்றத் தேர்தலை அறிவித்தது. [4]
மன்னர் ஆட்சியை ஒழித்த பிறகு, புதிய அரசியல் அமைப்பு நிர்ணய மன்றத் தேர்தலை நடத்த வலியுறுத்தி, பாபுராம் பட்டாராய் தலைமையிலான மாவோயிஸ்டு கிளர்ச்சியாளர்கள், கிரிஜா பிரசாத் கொய்ராலா தலைமையிலான கூட்டணி அரசை எதிர்த்து ஆயுதமேந்திப் போராடினார்கள். [5]
28 ஏப்ரல் 2006ல் நேபாளப் பிரதம அமைச்சர் கிரிஜா பிரசாத் கொய்ராலா அறிவித்த மூன்று மாத போர் நிறுத்த ஒப்பந்தத்தை, மாவோயிஸ்டுகள் ஏற்றனர்[6][7]
1 மே 2006ல், அரசியல் அமைப்பு நிர்ணய மன்றத்தின் தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்திட மாவோயிஸ்டுகள் தலைவர் பாபுராம் பட்டாராய், நேபாள கூட்டணி அரசை வலியுறுத்தினார். [8] 12 மே 2006ல் நேபாள மன்னர் ஞானேந்திராவுக்கு ஆதரவான கூட்டணி அரசின் நான்கு அமைச்சர்கள் மீது, மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதால், கூட்டணி அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டனர். [9]
18 மே 2006ல் நேபாள நாடாளுமன்றம், பெரும்பான்மையான வாக்குகள் பெற்று, நேபாள மன்னரின் அனைத்து அதிகாரங்களை பறித்து சட்டம் இயற்றிய போது,[10]
நாடாளுமன்றத்தின் புதிய சட்டம், 1990 நேபாள மக்கள் இயக்கத்தால் உருவான 1990ம் ஆண்டின் நேபாள அரசியலமைப்பு சட்டம் நீக்கப்பட்டது. "[10]
மே, 18ம் நாளை ஜனநாயக நாளாக அறிவிக்கப்பட்டது.[11]
29 மே 2008 அன்று நேபாள நாடாளுமன்றம் புதிய அரசியலமைப்பு சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியதால், நேபாளத்தில் முடியாட்சி முறை அகற்றப்பட்டு, நேபாளத்தை குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. [12]