2008 காபுல் இந்திய தூதரகம் மீது தாக்குதல் | |
---|---|
காபுல் நிலப்படம் | |
இடம் | இந்தியத் தூதரகம், காபுல், ஆப்கானிஸ்தான் |
நாள் | ஜூலை 7, 2008 8:30 AM |
தாக்குதல் வகை | தானுந்து தற்கொலைத் தாக்குதல் |
இறப்பு(கள்) | 58 |
காயமடைந்தோர் | 150+ |
2008 காபூல் இந்திய தூதரகம் மீது தாக்குதல் என்பது ஜூலை 7, 2008 காலை 8:30 மணிக்கு ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலின் நடு பகுதியில் அமைந்த இந்தியத் தூதரகத்தின் அருகில் ஒருவர் தானுந்து ஒன்றில் இருந்து நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலைக் குறிக்கும்[1]. இந்த குண்டுவெடிப்பில் 58 பேர் உயிரிழந்து மேலும் 150 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 4 இந்தியர்களும் அடங்குவர். இந்த தாக்குதல் 2001இல் டாலிபான் அரசின் அகற்றலுக்கு பிறகு நடந்த தாக்குதல்களில் மிகவும் உக்கிரமானது எனக் கூறப்படுகிறது.