நிர்வாகி(கள்) | பிசிசிஐ |
---|---|
துடுப்பாட்ட வடிவம் | இருபது20 |
போட்டித் தொடர் வடிவம் | தொடர் சுழல்முறைப் போட்டி மற்றும் தீர்வாட்டங்கள் |
நடத்துனர்(கள்) | இந்தியா |
வாகையாளர் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ்[1] |
மொத்த பங்கேற்பாளர்கள் | 9[2] |
மொத்த போட்டிகள் | 76 |
தொடர் நாயகன் | சுனில் நரைன் (கேகேஆர்) |
அதிக ஓட்டங்கள் | கிறிஸ் கெயில் (ஆர்சிபி) (733) |
அதிக வீழ்த்தல்கள் | மோர்னி மோர்க்கல் (டிடி) (25) |
அலுவல்முறை வலைத்தளம் | www.iplt20.com |
2012 இந்தியன் பிரீமியர் லீக் (சுருக்கமாக ஐபிஎல் 5 அல்லது 2012 ஐபிஎல், டிஎல்எஃப் ஐபிஎல் 2012), இந்திய துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தால் நடத்தப்படும் ஐந்தாவதுஇந்தியன் பிரீமியர் லீக் நிகழ்வாகும்.[3] இந்தப் போட்டி ஏப்ரல் 4 முதல் மே 27, 2012 வரை நடந்தது.[4] இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முந்தைய வாகையாளர்களான சென்னை சூப்பர் கிங்ஸ்அணியை ஐந்து இலக்குகளில் வென்று வாகை சூடினர்.[5] இந்தப் பருவத்தில் கொச்சி இட்டசுக்கேர்சு கேரளா அணி நீக்கப்பட்டதை அடுத்து குழுவாட்டங்களில் ஒன்பது அணிகளே பங்கேற்றன.[6]
இந்தப் போட்டியின் முதல் நான்கு அணிகளும் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ்) 2012 சாம்பியன்சு லீக் டிவென்ட்டி20 போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்றன. நியாயமான விளையாடல் விருது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வழங்கப்பட்டது. இந்தப் பருவத்தின் விளையாட்டு வீரராக கொல்கத்தா நைட் ரைடர்சு அணியின் சுனில் நரைன் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிங்சு இலெவன் பஞ்சாபு மட்டையாளர் மன்தீப் சிங் போட்டியின் "உதய விண்மீனாக" அறிவிக்கப்பட்டார்.[7]