இந்தியாவில் மே 26, 2014 முதல் நரேந்திர மோதி தலைமையிலான அரசு செயல்படத் தொடங்கியது. இந்த அரசின் வெளியுறவுக் கொள்கை குறித்த செயற்பாடுகள் இக்கட்டுரையில் பதிவுசெய்யப்படுகின்றன.
பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள சார்க் நாடுகளுக்கு அழைப்பு
[தொகு]
அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள சார்க் நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது[1].
பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள்
[தொகு]
- பிரதமர் நரேந்திர மோதி தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக பூடான் சென்றார்[2].
- நரேந்திர மோதி முதலாண்டில் 18 நாடுகளுக்கு பயணித்தார்.
பாக்கித்தானுடனான உறவு
[தொகு]
- மே 27 - தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் அதிகாரப் பகிர்ந்தளிப்பினை விரைந்து செயற்படுத்துமாறு இலங்கை சனாதிபதி மகிந்த ராசபக்சவை இந்தியப் பிரதமர் கேட்டுக் கொண்டார்[3].
- சூன் 11 - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான போராட்டமொன்று கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திற்கு வெளியே நடந்தது[4].
- இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செப்டம்பர் 14 - 16 நாட்களில் மூன்று நாள் அரசமுறைப் பயணமாக புதுதில்லி வந்தார் [5].
வங்காளதேசத்துடனான உறவு
[தொகு]
- சூன் 25 - சூன் 27: வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ், 3 நாள் பயணம் மேற்கொண்டார்.
அமெரிக்காவுடனான உறவு
[தொகு]
- 2014ஆம் ஆண்டின் சூன் 15, சூன் 16 தேதிகளில் பிரதமர் நரேந்திர மோதி பூடானில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்[6][7].
- வரவு செலவு திட்ட அறிக்கை அமர்வு சூலை மாதத்தில் நடக்க இருப்பதன் காரணமாக பிரதமரின் ஜப்பான் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.[8][9].