2014 இந்தியா-பாகிஸ்தான் எல்லை மோதல்கள் | |||||||
---|---|---|---|---|---|---|---|
இந்தியா-பாகிஸ்தான் மோதல்கள் காஷ்மீர் மோதல் பகுதி |
|||||||
கட்டுப்பாட்டுக் கோட்டின் வரைப்படம், 2014 |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
இந்தியா
| பாக்கித்தான்
|
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஜெனரல் தல்பீர் சிங் சுகாக் (இராணுவ தளபதி) லெப்டினன்ட் ஜெனரல் D. S. ஹூடா (வட கமாண்ட்) ராஜ்நாத் சிங் (இந்தியாவின் உள்துறை அமைச்சர்) | ஜெனரல். ராகீல் ஷெரீப் (இராணுவ தளபதி) சர்டாஜ் அஜீஸ் (தேசிய பாதுகாப்பு ஆலோசகர்) |
||||||
படைப் பிரிவுகள் | |||||||
வட கமாண்ட் | எக்சு கார்ப்ஸ் | ||||||
இழப்புகள் | |||||||
4 சிப்பாய்கள் பலி[1][2][3] *1 சிப்பாய் நவம்பரில் பலி[4][5] பொதுமக்கள் 13 பேர் பலி | 4 சிப்பாய்கள் பலி[11][12]
பொதுமக்கள் 20 பேர் பலி |
2014 இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டு மோதல்கள் என்பது இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் பாகிஸ்தான் இராணுவத்திற்கு இடையே எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை (LoC) ஒட்டிய காஷ்மீர் பகுதி மற்றும் பஞ்சாப் பகுதியில் தொடரும் ஆயுத மோதல் மற்றும் துப்பாக்கி சூட்டை குறிக்கும். 2014 ஆம் ஆண்டு ஜூலை முதல் வாரம் முதல் இந்த மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இரு நாடுகளையும் சேர்ந்த இராணுவ அதிகாரிகளும் ஊடகங்களும் இச்சம்பவங்கள் குறித்து வெவ்வேறு பதிப்புகளை வெளியிட்டுள்ளனர். மேலும் எதிர் தரப்பினரே மோதல்களை தூண்டியதாக குற்றம் சாட்டினர். இந்த மோதல்களுக்கு இந்திய இராணுவம் மற்றும் பாகிஸ்தான் இராணுவம் கடும் கண்டனம் தெரிவித்தன.
2014 அக்டோபர் 9ஆம் தேதி, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூனின் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் காஷ்மீரில் அமைதி மற்றும் நிலைத்தன்மை ஏற்பட ஒரு நீண்ட கால தீர்வு காணும் வகையில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார்.[18][19]