2014 பிர்பூம் குழு பாலியல் வல்லுறவு (2014 Birbhum gang rape case) என்பது 21 ஜனவரி 2014 அன்று மேற்கு வங்கத்தின் பிர்பூம் மாவட்டத்தில் நடந்த ஒரு குழு பாலியல் வல்லுறவு ஆகும். சுபோல்பூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயது பழங்குடியினப் பெண் ஒரு குழுவினரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். அந்த கிராமத்தின் கங்காரு நீதிமன்றம் சலீசி சபாவின் உத்தரவில், அந்தச் சிறுமி வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒரு பையனுடன் உறவு வைத்திருந்ததாக கூறப்பட்டது.
19 செப்டம்பர் 2014 அன்று, குற்றம் சாட்டப்பட்ட 13 பேரையும் குற்றவாளிகளாகக் கண்டறிந்து, ஐபிசி பிரிவு (376 (டி) பிரிவின் கீழ் குறைந்தபட்ச தண்டனையான 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையினை, மாவட்ட நீதிமன்றம் வழங்கியது. [1]
இந்த பாலியல் வல்லுறவானது ஜனவரி 21, 2014இல் லாபூர் காவல் எல்லைக்கு உட்பட்ட சுபோல்பூர் பகுதியில் நடந்தது. இது ஆதிவாசிகள் அதிகம் வசிக்கக் கூடிய பிர்பூம் மாவட்டத்தில் உள்ளது. முன்னதாக அந்த இருவரும் சலிசி சபை எனும் உள்ளூர் கங்காரு நீதிமன்றத்தினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு நாள் முழுவதும் மரத்தில் கட்டிவைத்து தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர்களுக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த சிறுமியால் அபராதத் தொகையினைக் கட்ட இயலாத போது அவர் கூட்டு பாலியல் வல்லுறவிற்கு உத்தரவிடப்பட்டார். [2] [3]
சலிசி சபா, ஒரு கங்காரு நீதிமன்றம் இது கிராம ஊராட்சியினால் நிர்வகிக்கப்படுகிறது, இது ஒரு கிராம அளவிலான சுய-அரசு நிறுவனம் ஆகும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து தலைவர் தலைமையில் இது செயல்படுகிறது. [4] சாலிசி சபையின் தலைவர் சுனில் சோரனும் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டார். [3]
இந்த சம்பவம் சர்வதேச அளவில் கவனத்தினைப் பெற்ற பிறகு, [5] [6] குறிப்பாக மத்தியகிராம் பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கு தலைப்புச் செய்தியாக அமைந்த மூன்று நாட்களுக்குப் பிறகு பரவலான கவனத்தினைப் பெற்றது. மத்தியம்கிராமில் அக்டோபர் 2013 இல் கொல்கத்தாவில் நகரும் வாகனத்தில் ஒரு உடற்பயிற்சி மையத்தின் 16 வயது பெண் ஊழியர் இரண்டு முறை பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். அதன்பிறகு அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர், பின்னர் அவர்கள் புதிய குடியிருப்பில் தீ வைத்து எரிக்கப்பட்டனர். [3] [7]
அதற்குப் பின்னர், பிர்பூம் காவல் கண்காணிப்பாளர் சி. சுதாகர் இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மாநில ஆளுநர், எம்.கே. நாராயணன் இது போன்ற கிராம அளாவிலான நீதிமன்றங்களை அனைத்து மாநிலங்களிலும் தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.[8]
மேற்கு வங்க அரசு கங்காரு நீதிமன்றங்களை தடை செய்தது, குறிப்பாக பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நடைபெற்ற நீதிமன்றங்களை தடை செய்தனர். அதற்கு எதிராக பழங்குடித் தலைவர்கள் சிலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் இது போன்ற நீதிமன்றங்கள் தங்கள் பாரம்பரியத்தின் ஒரு பகுதி என்றும் இத்தகைய முடிவுகள் தங்களது சமூகத்திற்கு தீர்ப்பை வழங்குவதில் தலையிடும் என்றும் அவர்கள் கருத்து கூறினர். 24 ஜனவரி 2014 அன்று , இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிர்பூம் மாவட்ட நீதிபதியிடம் உத்தரவிட்டது. பின்னர் மேற்கு வங்க அரசிற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது . [9] [10]