2017 போபால் - உஜ்ஜைனி பயணிகள் தொடர்வண்டி குண்டு வெடிப்பு 2017 ஆம் ஆண்டு மார்சு மாதம் ஏழாம் தியதி போபால் - உஜ்ஜைனி பயணிகள் தொடர்வண்டி மீது நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலாகும். தொடர்வண்டி போபாலிலிருந்து உஜ்ஜைனிக்குச் சென்று கொண்டிருக்கும் போது காலை 9:30 க்கும் 10:00 மணிக்குமிடையே தாக்குதல் நடைபெற்றது. இத்தாக்குதலில் எட்டு பயணிகள் காயமடைந்தனர். இத்தாக்குதல் குழாய் குண்டு மூலம் நடத்தப்பட்டது[1][2][3][4][5] . இத்தாக்குதலை நடத்தியவர்கள் தாக்குதலுக்குப் பின்னர் சிரியா அல்லது ஈராக் நாட்டிற்குத் தப்பிச் செல்ல முயன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்[6]. இது இசுலாமிய அரசு தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலாகும். மேலும் அத்தீவிரவாத அமைபினர் இந்தியாவின் மீது நடத்தும் முதல் தாக்குதலும் ஆகும்[7] .