இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
தமிழ்நாட்டில் 2020 கொரோனாவைரசுத் தொற்று | |||||||
---|---|---|---|---|---|---|---|
![]() மாவட்ட வாரியாக, ஒரு மில்லியன் (பத்து லட்சம்) குடியிருப்பாளர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளை குறிக்கும் வரைபடம்
| |||||||
| |||||||
| |||||||
நோய் | கோவிட்-19 | ||||||
தீநுண்மி திரிபு | கடுமையான சுவாச நோய்க்குறி கொரோனாவைரசு 2 (SARS-CoV-2) | ||||||
அமைவிடம் | தமிழ்நாடு, இந்தியா | ||||||
முதல் தொற்று | ஊகான், ஊபேய், சீனா | ||||||
நோயாளி சுழியம் | சென்னை | ||||||
வந்தடைந்த நாள் | 7 மார்ச் 2020 (5 ஆண்டுகள், 1 மாதம், 1 கிழமை and 3 நாட்கள்) | ||||||
உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் | 8,02,342 (16 திசம்பர், 2020) | ||||||
சிகிச்சை பெறுவோர் | 9,880 (16 திசம்பர், 2020) | ||||||
குணமடைந்த நோயாளிகள் | 7,80,531 (16 திசம்பர், 2020) | ||||||
இறப்புகள் | 11,931 (16 திசம்பர், 2020) | ||||||
இறப்பு விகிதம் | Expression error: Unexpected / operator.% | ||||||
பிராந்தியங்கள் | 37 மாவட்டங்கள் | ||||||
அதிகாரப்பூர்வ இணையதளம் | |||||||
stopcorona COVID-19 Public dashboard |
தமிழகத்தில் கொரோனாவைரஸ் தொற்று, 7 மார்ச் அன்று முதலில் உறுதிப்படுத்தப்பட்டது. 30 செப்டம்பர், 2020 நிலவரப்படி, மொத்தமாக 5,97,602 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 5,41,819 பேர் உடல்நலம் தேறி வீடு திரும்பியுள்ளதாகவும், 9,520 பேர் இறந்துள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை தெரிவித்தது.[1] தொற்று பரவுவதை தடுக்க மத்திய அரசு, 24 மார்ச் அன்று நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.[2] இந்தியாவில், அதிக எண்ணிக்கையிலான உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளில், தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களும் (37 மாவட்டம்) தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரமான சென்னை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, பாதிக்கும் மேற்பட்ட தொற்றுகள், மாநிலத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமான சென்னையிலிருந்து வந்தவை. இம்மாநிலத்தில் இறப்பு விகிதம் நாட்டில் மிகக் குறைவு. 30 செப்டம்பர், 2020 நிலவரப்படி, தமிழ்நாடு அரசு 73,54,050 மாதிரி சோதனைகளை நடத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கோவிட்-19 தொற்றுநோயின் முக்கிய நிகழ்வுகள் (ஏப்ரல் 30 வரை ) | |
---|---|
07 மார்ச் | முதல் உறுதிப்படுத்தப்பட்ட தொற்று பதிவு செய்யப்பட்டது |
15 மார்ச் | வணிக நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடல் |
20 மார்ச் | மாநில எல்லைகள் மூடல் |
22 மார்ச் | சுய ஊரடங்கு உத்தரவு - நாடு முழுவதும் |
24 மார்ச் | 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது |
25 மார்ச் |
முதல் இறப்பு அறிவிக்கப்பட்டது ஏப்ரல் 14 வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது |
31 மார்ச் |
100 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் பதிவு செய்யப்பட்டது தில்லி தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் கலந்து கொண்டவரின், முதல் தொற்று அடையாளம் காணப்பட்டது |
11 ஏப்ரல் | 10 இறப்புகள் அறிவிக்கப்பட்டது |
12 ஏப்ரல் | உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை 1000-யைக் கடந்தது |
14 ஏப்ரல் | நாடு தழுவிய ஊரடங்கு, மே 3 வரை நீட்டிக்கப்பட்டது |
15 ஏப்ரல் | 100 பேர் உடல்நலம் தேறியவர்கள் என அறிவிக்கப்பட்டது |
21 ஏப்ரல் | 500 பேர் உடல்நலம் தேறியவர்கள் என அறிவிக்கப்பட்டது |
26 ஏப்ரல் | 1000 பேர் உடல்நலம் தேறியவர்கள் என அறிவிக்கப்பட்டது |
28 ஏப்ரல் | 25 இறப்புகள் மற்றும் 2000 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் என்று அறிவிக்கப்பட்டது |
7 மார்ச் அன்று, தமிழ்நாட்டில் ஓமானிலிருந்து வந்த ஒருவர், கொரோனாவைரசுத் தொற்றால் பாதிக்கப்பட்டதாக உறுதி செய்தனர்.[3] பின்னர் மார்ச் 10 அன்று எதிர்மறையை பரிசோதித்தார்.[4]
18 மார்ச் அன்று, தமிழகத்தின் இரண்டாவதாக தில்லியில் இருந்து சென்னை நோக்கி ரயிலில் பயணித்த நபருக்கு உறுதி செய்யப்பட்டது.[5]
19 மார்ச் அன்று, அயர்லாந்தில் இருந்து திரும்பிய 21 வயது மாணவர் ஒருவர் தமிழகத்தில் நேர்மறை சோதனை செய்தார்.[6]
21 மார்ச் அன்று, மேலும் மூவருக்கு உறுதி செய்யப்பட்டன, இதில் ஒருவர் நியூசிலாந்திலிருந்து பயணம் செய்த சென்னையை சேர்ந்தவர் மற்ற இருவர்கள் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள். இந்த இருவரை ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள ஐ.ஆர்.டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.[7] இந்த மூன்று நோயாளிகளுடன் தொடர்பு கொண்ட 300க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
25 மார்ச் அன்று, தமிழகத்தின் முதலாக 54 வயது நபர் மதுரையில் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தார்.[8] மேலும் ஐந்துபேருக்கு தொற்று உறுதியானது - நான்கு இந்தோனேசியர்கள் மற்றும் சென்னையை சேர்ந்த அவர்களின் பயண வழிகாட்டி.[9]
28 மார்ச் அன்று, டப்ளின் மற்றும் அயர்லாந்து பயணத்திலிருந்து திரும்பி வந்த 21 வயது இளைஞர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.[10] கும்பகோணம் மற்றும் காட்பாடியில் தலா ஒருவருக்கு புதிதாக தொற்று உறுதிசெய்யப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்த எண்ணிக்கை 40தாக ஆனது.[11]
மார்ச் 29 அன்று, மேலும் எட்டு தொற்றுகளை (கோயம்புத்தூர் மற்றும் ஈரோடில் இருந்து தலா நான்கு) அரசு அறிவித்தது. இந்த எட்டு பேரில் 10 மாத குழந்தை இருந்தது. அப்போது உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 50-யை எட்டியது.[12][13]
மார்ச் 30 அன்று, 17 புதிய தொற்றுகள் பதிவானது, இது மாநிலத்தில் இன்றுவரை மிக உயர்ந்தது, ஈரோடில் இருந்து 10 ஆண் நோயாளிகள், அவர்கள் அனைவரும் தில்லிக்கு பயணம் செய்தவர்கள் மற்றும் தாய்லாந்து சுற்றுலாப் பயணிகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர். சென்னையில் 5, மதுரை மற்றும் கரூரில் தலா 1 ஆகும்.[14]
மார்ச் 31 அன்று, 57 புதிய தொற்றுகள் பதிவானது, இவர்கள் அனைவரும் முக்கியமாக, தில்லி தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள். அப்போது தொற்றுகளின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்தது.[15] இது இன்றுவரை அதிகபட்ச ஒற்றை நாள் உயர்வு ஆகும். இவர்களில் 50 தொற்றுகள் நாமக்கல் (18), திருநெல்வேலி (22), கன்னியாகுமரி (4), விழுப்புரம் (3), மதுரை (2) மற்றும் தூத்துக்குடி (1) ஆகிய ஊர்களை சேர்ந்த தில்லி தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆவர்.[16]
ஏப்ரல் 1 அன்று, 110 புதிய தொற்றுகள்கள் பதிவானது, இவர்கள் அனைவரும் தில்லி தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள். அப்போது மொத்தம் தொற்றுகள் 234 ஆனது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட 1500 பேரில் 1103 பேர் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இவர்களில் 658 நபர்களை சோதிக்கப்பட்டன, அவற்றில் 190 நபர்களுக்கு கொரோனா இருப்பதாக நேர்மறை முடிவுகள் வந்தன. பங்கேற்பாளர்களில் சிலர் அரசாங்கத்தின் வேண்டுகோளுக்குப் பிறகு அதிகாரிகளை அணுகினர். அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய தொடர்புடையவர்கள் என அனைவரையும் தனிமைப்படுத்தப்பட்டன.
ஏப்ரல் 2 அன்று, 75 புதிய தொற்றுகள் பதிவாகியது, அவற்றில் 74 பேர், தில்லி தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
ஏப்ரல் 3 அன்று, 102 புதிய தொற்றுகள் பதிவாகியது, அவற்றில் 100 பேர் தில்லி தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள். மேலும் இருவர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
ஏப்ரல் 4 அன்று, 74 புதிய தொற்றுகள் பதிவானது, அவற்றில் 69 பேர் தில்லி தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், 4 பேர் நிகழ்வில் பங்கேற்றவர்களின் தொடர்புடையவர்கள். ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர். மேலும் இரண்டு இறப்புகள் பதிவானது.
ஏப்ரல் 5 அன்று, 86 புதிய தொற்றுகள் பதிவானது, அவற்றில் 85 தொற்றுகள் . நிகழ்வுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடையவை. தில்லி தப்லீக் ஜமாஅத் நிகழ்வில் பங்கேற்றவர்களின் 1246 தொடர்புகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 6 அன்று, 50 புதிய தொற்றுகள் பதிவானது. அப்போது மொத்தம் தொற்றுகள் 621 ஆனது. அவர்களில் 48 பேர் தில்லி தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் இருந்து திரும்பியவர்கள். ஒரு கோவிட் -19 பாதிக்கப்பட்டவரின் அடக்கத்தில் கலந்து கொண்ட 101 பேர் இராமநாதபுரத்தில் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். அவரை அடக்கம் செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு சோதனை முடிவு நேர்மறையாக வந்ததால், அவரது நிலை குறித்து அவர்கள் அறிந்திருக்கவில்லை.
ஏப்ரல் 7 அன்று, 69 புதிய தொற்றுகள் பதிவானது, அவற்றில் 63 தொற்றுகள் தில்லி நிகழ்வு தொடர்பானவை.
ஏப்ரல் 8 அன்று, 48 புதிய தொற்றுகள் என மொத்தம் 738 ஆக பதிவானது. அவற்றில் 42 தொற்றுகள் தில்லி நிகழ்வு தொடர்பானவை. 42 பேரில் ஒருவர் மலேசிய நாட்டை சேர்ந்தவர். டெல்லி நிகழ்வில் கலந்து கொண்ட 1480 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை அரசாங்கம் வெளிப்படுத்தியது. அவர்களிடமிருந்து 1716 மாதிரிகள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரையும் சோதிக்கப்பட்டன, அவற்றில் 679 நேர்மறையான முடிவுகள் வந்தது.
ஏப்ரல் 9 அன்று, 96 புதிய தொற்றுகள் மாநிலத்தில் பதிவாகியது, அப்போது மொத்தத் தொற்றுகள் 834 ஆக பதிவானது.
ஏப்ரல் 10 அன்று, 77 புதிய தொற்றுகள் என மொத்தம் 911 ஆக பதிவானது. அவர்களில் 70 பேர் தில்லி தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள். 17 பேர் மருத்துவ ரீதியாக குணமடைந்தனர், மொத்தமாக 44 பேர் குணமடைந்ததாக பதிவானது.
ஏப்ரல் 11 அன்று, 58 புதிய தொற்றுகள் என மொத்தம் 969 ஆக பதிவானது. ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள ஐ.ஆர்.டி அரசு மருத்துவமனையில் மேலும் ஒருவர் இறந்தார், அப்போது இறப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
ஏப்ரல் 13 அன்று, 98 புதிய தொற்றுகள் என மொத்தம் 1173 ஆக பதிவானது.
ஏப்ரல் 14 அன்று, 31 புதிய தொற்றுகள் என மொத்தம் 1204 ஆக பதிவானது. இது மார்ச் 31க்குப் பிறகு, மிகக் குறைந்த தினசரி உயர்வு ஆகும். 96 வயதான ஒருவர் இறந்தார், இதனால் மாநிலத்தில் மொத்தம் 12 பேர் இறந்தனர்.
ஏப்ரல் 16 அன்று, 25 புதிய தொற்றுகள் என மொத்தம் 1267 ஆக பதிவானது. மேலும் ஒரு இறப்புகள் என மொத்தம் 15 இறப்புகள் அறிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 17 அன்று, 56 புதிய தொற்றுகள் என மொத்தம் 1323 ஆக பதிவானது.
ஏப்ரல் 18 அன்று, 49 புதிய தொற்றுகள் என மொத்தம் 1372 ஆக பதிவானது. 82 பேர் குணமடைந்தனர் என மொத்தமாக 365 பேர் குணமடைந்ததாக பதிவானது.
ஏப்ரல் 19 அன்று, 105 புதிய தொற்றுகள் பதிவானது, இது இன்றுவரை மூன்றாவது அதிகபட்ச தினசரி அதிகரிப்பு ஆகும். 46 பேர் குணமடைந்தனர் என மொத்தமாக 411 பேர் குணமடைந்ததாக பதிவானது.
ஏப்ரல் 20 அன்று, தமிழகத்தில் 43 புதிய தொற்றுகள் பதிவானது, இது தமிழகத்தில் மொத்த தொற்றுகள் 1,520 ஆகக் கொண்டு வந்துள்ளது. மாநிலத்தில் தொற்று விகிதம் 2020 ஏப்ரல் 1 அன்று 13% ஆக இருந்து 3.6% ஆகக் குறைந்தது.
ஏப்ரல் 22 அன்று, தமிழகத்தில் 33 புதிய தொற்றுகள் பதிவானது, மொத்தத் தொற்றுகள் 1,629 ஆக உயர்ந்தது. 27 பேர் குணமடைந்தனர் என மொத்தமாக 662 பேர் குணமடைந்ததாக பதிவானது. இன்றைய தினம் எந்த மரணமும் ஏற்படவில்லை.
ஏப்ரல் 23 அன்று, தர்மபுரி மாவட்டம் தனது முதல் கோவிட்-19 தொற்றை பதிவுசெய்தது, மாநிலத்தில் 54 புதிய தொற்றுகள் பதிவானது, மொத்தத் தொற்றுகள் 1,683 ஆக உயர்ந்தது. மேலும் 2 பேர் இறந்தனர். 90 பேர் குணமடைந்தனர் என மொத்தமாக 752 பேர் குணமடைந்ததாக பதிவானது.
ஏப்ரல் 24 அன்று, 72 புதிய தொற்றுகள் பதிவானது, அவற்றில் 52 தொற்றுகள் சென்னையிலிருந்து வந்தவை, மொத்தத் தொற்றுகள் 1755 ஆக உயர்ந்தது. மேலும் 2 பேர் இறந்தனர், அப்போது மொத்த இறப்புகள் 22 என பதிவானது. 114 பேர் குணமடைந்தனர் என மொத்தமாக 886 பேர் குணமடைந்ததாக பதிவானது.
ஏப்ரல் 28 அன்று, 121 புதிய தொற்றுகள் பதிவாகி நிலையில், மொத்த எண்ணிக்கை 2000-யை தாண்டி 2058 ஆக உயர்ந்தது. சென்னை 103 புதிய தொற்றுகளுடன் மோசமான பாதிப்புக்குள்ளான மாவட்டமாகத் தொடர்ந்தது. இதில் 673 தொற்றுகள் சென்னையை சேர்ந்தவை, இது தமிழ்நாட்டின் அனைத்து தொற்றுகளின் 33% ஆகும்.
தமிழ்நாட்டில் கோவிட்-19 தொற்றுநோயின் முக்கிய நிகழ்வுகள் (ஏப்ரல் 30 முதல்) | |
---|---|
மே முதல் வாரம் | கோயம்பேடு மொத்த சந்தைக்கு வந்தவர்களை அடையாளம் காணுதல் |
3 மே | உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை 3000-யைக் கடந்தது |
5 மே | உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை 4000-யைக் கடந்தது |
6 மே | 1500 உடல்நலம் தேறியவர்கள் என அறிவிக்கப்பட்டது |
8 மே | உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை 5000-யைக் கடந்தது |
11 மே | உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை 8000-யைக் கடந்தது |
15 மே | உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை 10,000-யைக் கடந்தது |
17 மே | மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது |
29 மே | உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை 20,000-யைக் கடந்தது |
31 மே | தமிழகத்தில் 5 ஆம் கட்டமாக ஊரடங்கு சில தளர்வுகளுடன் சூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது. |
மே மாதத்தில், சென்னை கோயம்பேடு மொத்த சந்தை வளாகம் நடைபெற்றது. இதனால் கோயம்பேடு சந்தை மூலம் தொற்றுகள் பரவத்தொடங்கியது. மே 3 ஆம் தேதி வரை, 113 நோய்த்தொற்றுகள் சந்தையின் மூலமாக கண்டறியப்பட்டன. இவற்றுள் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் செங்கல்பட்டு போன்ற வடமாவட்டங்களை சேர்ந்தவர்கள்.
மே 6 அன்று, 771 புதிய தொற்றுகள் பதிவானது, மொத்தத் தொற்றுகள் 4829 ஆக உயர்ந்தது. இது இன்றுவரை அதிகபட்ச ஒற்றை நாள் உயர்வு ஆகும்.
மே 8 அன்று 600 புதிய தொற்றுகள் பதிவானது. இதில் 1589 தொற்றுகள் கோயம்பேடு சந்தைக்கு தொடர்புடையது என அறிவிக்கப்பட்டது.
மே 11 அன்று, 798 புதிய தொற்றுகள் என, மொத்தம் 8000-யை தாண்டி மாநிலத்தில் 8002 தொற்றாக ஆக உயர்ந்தது. மோசமான பாதிப்புக்குள்ளான மாவட்டமாக சென்னை தொடர்ந்தது. இது 538 தொற்றுகளுடன் மிக உயர்ந்த ஒற்றை நாள் உயர்வைப் பதிவுசெய்தது, இது மொத்தம் 4371 ஆக இருந்தது. இராயபுரம், திரு. வி. க. நகர், கோடம்பாக்கம் மற்றும் தேனாம்பேட்டை ஆகிய நகரங்கள் சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நான்கு மண்டலங்கள் ஆகும்.
மே 14 அன்று, 447 புதிய தொற்றுகள் பதிவானது, அவற்றில் 24 தொற்றுகள் வெளியிலிருந்து மாநிலத்திற்கு திரும்பி வந்தவர்கள்.
மே 15 அன்று, 434 புதிய தொற்றுகள் பதிவானது, அவற்றில் 49 தொற்றுகள் வெளியிலிருந்து மாநிலத்திற்கு திரும்பி வந்தவர்கள்.
மே 16 அன்று, 477 புதிய தொற்றுகள் பதிவானது, அவற்றில் 93 தொற்றுகள் வெளியிலிருந்து மாநிலத்திற்கு திரும்பி வந்தவர்கள். மாநிலத்தில் 939 பேர் குணமடைந்ததாக பதிவானது, ஒரே நாளில் அதிகபட்சமாக குணமடைந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டது.
மே 17 அன்று, மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.[17][18][19]
மே 26 அன்று, மாநிலத்தின் அதிகபட்ச ஒற்றை நாள் உயர்வு 805 என அறிவித்தது, மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 17,082 ஆக உயர்ந்தது. இதில் 11,000-க்கும் மேற்பட்ட தொற்றுகள் சென்னையில் இருந்தது. சென்னையின் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், திரு. வி. க. நகர், அண்ணா நகர் மற்றும் தேனாம்பேட்டை ஆகியவை அடங்கும்.[20]
மே 30 அன்று, 938 புதிய தொற்றுகள் பதிவாகியது, அவற்றில் 616 சென்னையைச் சேர்ந்தவை. உடல்நலம் தேறியவர்களின் விகிதம் சுமார் 56% ஆக உயர்ந்தது, மாநிலத்தில் மொத்தமாக 12,000 பேர், உடல்நலம் தேறியதாக அறிவிக்கப்பட்டது. சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 9,021 ஆக இருந்தது.[21] புழல் சிறையில் உள்ள 31 கைதிகளுக்கு, பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு கொரோனவைரசு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.[22]
மே 31 அன்று, 5 ஆம் கட்டமாக ஊரடங்கு, மேலும் சில தளர்வுகளுடன் சூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது.[23]
தமிழ்நாட்டில் கோவிட்-19 தொற்றுநோயின் முக்கிய நிகழ்வுகள் (சூன் 01 முதல்) | |
---|---|
3 சூன் | இறப்புகளின் எண்ணிக்கை 200-யை கடந்தது |
6 சூன் | உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை 30,000-யைக் கடந்தது |
9 சூன் | 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது |
10 சூன் | திமுக சட்டமன்ற உறுப்பினர், ஜெ. அன்பழகன் கொரோனாவைரசால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். |
12 சூன் | உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை 40,000-யைக் கடந்தது |
14 சூன் | இறப்புகளின் எண்ணிக்கை 400-யை கடந்தது |
16 சூன் | இறப்புகளின் எண்ணிக்கை 500-யை கடந்தது |
17 சூன் | உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை 50,000-யைக் கடந்தது |
27 சூன் | இறப்புகளின் எண்ணிக்கை 1000-யை கடந்தது |
29 சூன் | தமிழகம் முழுவதும், சூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது |
3 சூலை | உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை 1,00,000-யைக் கடந்தது |
13 சூலை | இறப்புகளின் எண்ணிக்கை 2000-யை கடந்தது |
15 சூலை | உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை 1,50,000-யைக் கடந்தது |
25 சூலை | உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை 2,00,000-யைக் கடந்தது |
சூன் 6 அன்று, மாநிலத்தில் 1458 புதிய தொற்றுகள் பதிவாகின, மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்தது. இது கடந்த ஏழு நாட்களில் தொடர்ச்சியாக 1000-க்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவு செய்திருந்தது. மொத்தம் 20,993 தொற்றுகள் கொண்ட சென்னையில் 70% தொற்றுகள் உள்ளன. மாநிலம் முழுவதும் மொத்தம் 16,395 பேர் குணமடைந்தனர்.[24]
சூன் 09 அன்று, தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 11 ஆம் வகுப்புக்கு விடுபட்ட தேர்வும் ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் தேர்வின்றி, அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் முதல்வர் எடப்பாடி க. பழனிசாமி அறிவித்தார்.[25][26][27]
சூன் 10 அன்று, திமுக சட்டமன்ற உறுப்பினர், ஜெ. அன்பழகன் கொரோனாவைரசால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.[28] அப்போது மாநிலத்தில் 1,927 புதிய தொற்றுகள் பதிவாகின, மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்தது. மாநிலத்தில் 1008 பேர் குணமடைந்ததாக பதிவானது, ஒரே நாளில் அதிகபட்சமாக குணமடைந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டது.
சூன் 11 அன்று, மாநிலத்தில் 1,875 புதிய தொற்றுகள் பதிவாகின, மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 38,716 ஆக உயர்ந்தது. இது கடந்த பத்து நாட்களில் தொடர்ச்சியாக 1000-க்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவு செய்திருந்தது. மாநிலத்தில் 1,372 பேர் குணமடைந்ததாக பதிவானது, ஒரே நாளில் அதிகபட்சமாக குணமடைந்தவர்கள் என்றும், 23 பேர் இறந்துள்ளார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
சூன் 13 அன்று, மாநிலத்தில் 1,982 புதிய தொற்றுகள் பதிவாகின, அப்போது மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 40,698 ஆக உயர்ந்தது.
சூன் 15 அன்று மாநிலத்தில் 1,843 புதிய தொற்றுகள் பதிவாகின, அப்போது மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்தது. மாநிலத்தில் மொத்தம் 479 பேர் இறந்ததாக பதிவானது, ஒரே நாளில் அதிகபட்சமாக 44 பேர் இறந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 19 சூன், 2020 முதல் 30 சூன், 2020 வரை பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என முதல்வர் தெரிவித்தார்.[29]
சூன் 17 அன்று மாநிலத்தில் 2,174 புதிய தொற்றுகள் பதிவாகின, அப்போது மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்தது. ஒரு நாளைக்கு புதிய தொற்றுகள் 2000-யை கடந்தது, இதுவே முதல் முறையாகும். மாநிலத்தில் மொத்தம் 576 பேர் இறந்ததாக பதிவானது, கடந்த 5 நாட்களில், இறப்பவர்களின் எண்ணிக்கை 30-க்கும் மேற்பட்டதாகவே பதிவானது. முதலமைச்சர் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கோவிட் - 19 தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தார்.[30] கோவிட் -19 காரணமாக சென்னை காவல் ஆய்வாளர் பாலமுரளி என்பவர் இறந்தார், இது மாநிலத்தின் முதல் காவல் பணியாளர்கள் மரணம் ஆகும்.[31]
சூன் 21 அன்று மாநிலத்தில் 2,532 புதிய தொற்றுகள் பதிவாகின, அப்போது மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்தது. ஒரு நாளைக்கு புதிய தொற்றுகள் 2500-யை கடந்தது, இதுவே முதல் முறையாகும். சென்னையில் உள்ள பூவிருந்தவல்லியில் துணை வட்டாட்சியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, வட்டாட்சியர் அலுவலகம் மூடப்பட்டது.[32]
சூன் 24 அன்று மாநிலத்தில் 2,865 புதிய தொற்றுகள் பதிவாகின, அப்போது மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 67,468 ஆக உயர்ந்தது. தேனி மாவட்டம் மற்றும் மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை டவுன் பஞ்சாயத்து, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்குட்பட்ட அனைத்து கிராம பஞ்சாயத்து பகுதிகளிலும், நோய்த்தொற்று நிலையைக் கருத்தில் கொண்டு, அதிகாலை 12 மணி முதல் சூன் 30, 2020 அன்று நள்ளிரவு 12 மணி வரை 7 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.[33]
சூன் 25 அன்று மாநிலத்தில் 3,509 புதிய தொற்றுகள் பதிவாகின, அப்போது மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 70,977 ஆக உயர்ந்தது. ஒரு நாளைக்கு புதிய தொற்றுகள் 3000-யை கடந்தது, இதுவே முதல் முறையாகும்.
சூன் 29 அன்று மாநிலத்தில் 3,949 புதிய தொற்றுகள் பதிவாகின, அப்போது மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்தது. மேலும் தமிழகம் முழுவதும் சூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.[34]
சூன் 6 அன்று, மாநிலத்தில் 4,343 புதிய தொற்றுகள் பதிவாகின, மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்தது. ஒரு நாளைக்கு புதிய தொற்றுகள் 4000-யை கடந்தது, இதுவே முதல் முறையாகும்.
ஆகத்து 2 அன்று மாநிலத்தில் 5,875 புதிய தொற்றுகள் பதிவாகின, அப்போது மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 2,57,613 ஆக உயர்ந்தது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.[35]
தில்லி தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாட்டினர், தங்களுடன் தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த இசுலாமிய மதகுருமார்களை பிரசாரத்திற்கு ஈரோடு, மதுரை, சேலம் போன்ற நகரங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரானா வைரஸ் தொற்று அறிகுறியுடன் 25 மார்ச் 2020-இல் அனுமதிக்கப்பட்ட 5 நபர்களில், 54 வயதுடைய ஆண் நபர் கொரானா வைரஸ் தொற்றால் இறந்தார் என உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் இவர்கள் அனைவரும் தில்லி தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் கலந்து கொண்ட தாய்லாந்து நாட்டவரின் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் தாய்லாந்து நாட்டவர்களுடன் தொடர்பு கொண்டு, ஈரோடு மற்றும் சேலம் திரும்பிய தப்லீக் ஜமாஅத் கூட்டத்தவர்களில் பலருக்கு வைரஸ் தொற்று இருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஈரோட்டில் மார்ச், 24 முதல் வைரஸ் தொற்று நிரம்பியவர்கள் கொண்ட 9 தெருக்கள் முடக்கப்பட்டன.[36]
இக்கூட்டத்தில் இருந்த 1,500 பேரில் 1,130 பேர் மாநிலத்திற்கு திரும்பியுள்ளனர். 1,130 பேரில் 515 பேரை அரசாங்கம் அடையாளம் கண்டு தனிமைப்படுத்தியது. மீதமுள்ளவர்களை அடையாளம் காண முயற்சிக்கும்போது, அது சிரமத்தை எதிர்கொண்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தானாகவே முன் வந்து சோதனைக்கு உட்படுமாறு தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து, தில்லி தப்லீக் ஜமாஅத் கூட்டமானது, இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்றுகள் வேகமாக பரவ ஒரு காரணமாக அமைந்தது.
மே மாதத்தில், சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை சந்தை வளாகம் நடைபெற்றது. இதனால் கோயம்பேடு சந்தை மூலம் தொற்றுகள் பரவத்தொடங்கியது. மே 3 ஆம் தேதி வரை, 113 நோய்த்தொற்றுகள் சந்தையின் மூலமாக கண்டறியப்பட்டன. இவற்றுள் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் செங்கல்பட்டு போன்ற வடமாவட்டங்களை சேர்ந்தவர்கள். இதனால் இந்த மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கையானது வேகமாக உயரத் தொடங்கியது.[37] இதனால் கோயம்பேடுவைச் சுற்றியுள்ள பகுதிகள் சீல் வைக்கப்பட்டன மற்றும் பாதிக்கப்பட்ட விற்பனையாளர்களின் தொடர்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. கோயம்பேடு சந்தைக்கு வருகை தந்த காய்கறி விற்பனையாளர் பலருக்கு பரிசோதித்ததையடுத்து, தென்சென்னையில் திருவான்மியூர் சந்தையும் மூடப்பட்டது.
கீழேயுள்ள தகவல்கள் தமிழக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் தினசரி அறிக்கைகளின் அடிப்படையில் அமைந்துள்ளன.
தமிழ்நாட்டில் மாவட்டம் வாரியாக கொரோனாவைரசுத் தொற்றுகளின் எண்ணிக்கை | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
மாவட்டம் | கண்டறியப்பட்ட மொத்தத் தொற்றுகள்[a] | குணமடைந்தோர் | சிகிச்சை பெறுவோர்[b] | இறப்புகள் | ||||
தமிழ்நாடு | 5,97,602 | 5,41,819 | 46,263 | 9,520 | ||||
அரியலூர் | 5,125 | 4,883 | 193 | 49 | ||||
செங்கல்பட்டு | 67,480 | 59,421 | 7,187 | 872 | ||||
சென்னை | 2,86,569 | 2,55,960 | 26,197 | 4,412 | ||||
கோயம்புத்தூர் | 68,137 | 62,726 | 4,703 | 708 | ||||
கடலூர் | 27,828 | 26,099 | 1,424 | 305 | ||||
தருமபுரி | 7,810 | 7,007 | 746 | 57 | ||||
திண்டுக்கல் | 13,408 | 12,260 | 944 | 204 | ||||
ஈரோடு | 17,163 | 15,785 | 1,226 | 152 | ||||
கள்ளக்குறிச்சி | 11,554 | 10,999 | 447 | 108 | ||||
காஞ்சிபுரம் | 33,800 | 31,279 | 2,038 | 483 | ||||
கன்னியாகுமரி | 19,078 | 17,872 | 932 | 274 | ||||
கரூர் | 6,327 | 5,774 | 501 | 52 | ||||
கிருஷ்ணகிரி | 10,537 | 8,917 | 1,500 | 120 | ||||
மதுரை | 24,891 | 22,179 | 2,233 | 479 | ||||
நாகப்பட்டினம்[c] | 11,281 | 9,869 | 1,254 | 158 | ||||
நாமக்கல் | 13,344 | 12,429 | 804 | 111 | ||||
நீலகிரி | 9,233 | 8,863 | 319 | 51 | ||||
பெரம்பலூர் | 2,409 | 2,335 | 52 | 22 | ||||
புதுக்கோட்டை | 12,618 | 11,936 | 522 | 160 | ||||
இராமநாதபுரம் | 7,084 | 6,587 | 359 | 138 | ||||
இராணிப்பேட்டை | 17,928 | 16,715 | 1,023 | 190 | ||||
சேலம் | 36,283 | 34,058 | 1,744 | 481 | ||||
சிவகங்கை | 7,719 | 7,145 | 445 | 129 | ||||
தென்காசி | 9,799 | 8,806 | 828 | 165 | ||||
தஞ்சாவூர் | 22,480 | 21,232 | 963 | 285 | ||||
தேனி | 18,033 | 17,323 | 502 | 208 | ||||
திருப்பத்தூர் | 8,563 | 7,897 | 537 | 129 | ||||
திருவள்ளூர் | 51,603 | 47,835 | 3,033 | 735 | ||||
திருவண்ணாமலை | 21,121 | 19,824 | 1,007 | 290 | ||||
திருவாரூர் | 13,692 | 12,705 | 870 | 117 | ||||
தூத்துக்குடி | 18,823 | 16,725 | 1,953 | 145 | ||||
திருநெல்வேலி | 18,650 | 16,550 | 1,876 | 224 | ||||
திருப்பூர் | 22,516 | 20,103 | 2,182 | 231 | ||||
திருச்சிராப்பள்ளி | 19,202 | 16,793 | 2,212 | 197 | ||||
வேலூர் | 23,356 | 21,941 | 1,054 | 361 | ||||
விழுப்புரம் | 16,591 | 15,821 | 656 | 114 | ||||
விருதுநகர் | 17,863 | 17,002 | 625 | 236 | ||||
19 ஏப்ரல் 2021 வரை[38] | ||||||||
குறிப்புகள் |
மாவட்டங்கள் | தொற்றுகளின் எண்ணிக்கை |
---|---|
சென்னை | 1,63,423
|
செங்கல்பட்டு | 34,578
|
திருவள்ளூர் | 31,652
|
காஞ்சிபுரம் | 21,593
|
மதுரை | 16,359
|
கடலூர் | 19,686
|
மற்ற மாவட்டங்கள் | 2,91,222
|
பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் 13-60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் மற்றும் பெரும்பாலும் ஆண்களே.
30 செப்டம்பர், 2020 வரை
|
See or edit raw graph data.
See or edit raw graph data.
(Log):
ஜனவரி 30 அன்று, சீனாவிலிருந்து வந்த 78 பேரை அரசு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியது.[51]
தமிழக அரசு கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திராவுடனான தனது எல்லைகளை மார்ச் 20 அன்று மார்ச் 31 வரை ஓரளவு மூடி, வைரஸ் வெடிப்பிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணிக்க ஒரு பணிக்குழுவை அமைத்தது.[51][52]
மார்ச் 21 அன்று, மாநில அரசு 10 ஆம் வகுப்பு எஸ்.எஸ்.எல்.சி வாரியத் தேர்வுகளை ஏப்ரல் 14 க்கு அப்பால் ஒத்திவைத்தது, அவை மார்ச் 27 முதல் தொடங்கவிருந்தன.[53]
மார்ச் 22 அன்று, மாநில அரசு திங்கள் காலை 5 மணி வரை 'ஜனதா ஊரடங்கு உத்தரவு' நீட்டித்தியது.[54]
மார்ச் 23 அன்று, மாநில அரசு மார்ச் 14, மாலை 6 முதல் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவை விதித்தது.[55]
மார்ச் 24 அன்று, சுகாதார அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அர்ப்பணிக்கப்பட்ட மருத்துவமனையை அறிவித்தார்.[56]
மார்ச் 25 அன்று, முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, பள்ளிகள் மூடப்படுவதைக் கருத்தில் கொண்டு மாநிலத்தில் 1-9 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவித்தார்.[57]
நாடு தழுவிய ஊரடங்குக்கு சில நாட்களுக்குப் பிறகு, ஸ்விக்கி மற்றும் சோமாடோ போன்ற சேவைகளிலிருந்து சமைத்த உணவை மார்ச் 26 அன்று சென்னை தடை செய்தது.[58]
See or edit raw graph data.
See or edit raw graph data.
(log): See or edit raw graph data.
See or edit raw graph data.
See or edit raw graph data.
(log):
See or edit raw graph data.
See or edit raw graph data.
See or edit raw graph data.
தினசரி உடல்நலம் தேறியவர்கள் 7 நாட்களுக்கு சராசரியாக,உடல்நலம் தேறியவர்கள்
See or edit raw graph data.
புதிதாக 'நபர்-நபர் பரவிய' தொற்றுகள்
புதிதாக 'நபர்-நபர் கொத்தாக பரவிய' தொற்றுகள்
புதிதாக 'பயணம் சார்த்த/நபர்-நபர் பரவிய' தொற்றுகள்
புதிதாக 'பயணத்தால் பரவிய' தொற்றுகள்
புதிதாக 'இரண்டாம் நபர்-நபர் பரவிய' தொற்றுகள்
மாநிலங்களுக்கு இடையேயான பயண தொற்றுகள்
See or edit raw graph data.
See or edit raw graph data.
[59] [60] [61] [62] [63] [64] [65] [66] [67] [68] [69] [70] [71] [72] [73] [74] [75] [76] [77] [78] [79] [80] [81] [82] [83] [84] [85]
{{cite web}}
: |last=
has numeric name (help)CS1 maint: unrecognized language (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: line feed character in |website=
at position 42 (help)
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: |archive-date=
/ |archive-url=
timestamp mismatch; 7 ஏப்ரல் 2020 suggested (help)
{{cite web}}
: |archive-date=
/ |archive-url=
timestamp mismatch; 24 ஏப்ரல் 2020 suggested (help)
{{cite web}}
: |archive-date=
/ |archive-url=
timestamp mismatch; 24 ஏப்ரல் 2020 suggested (help)
{{cite web}}
: |archive-date=
/ |archive-url=
timestamp mismatch; 24 ஏப்ரல் 2020 suggested (help)