2021 காந்தகார் குண்டுவெடிப்பு | |
---|---|
2021 ஆப்கானித்தான் தாக்குதல்கல் மற்றும் இசுலாமிய அரசு- தாலிபான் மோதல் | |
இடம் | இமாம் பார்கா பள்ளிவாசல், காந்தாரம், ஆப்கானித்தான் |
தாக்குதலுக்கு உள்ளானோர் | சியா இசுலாம் வழிபடுபவர்கள் |
தாக்குதல் வகை | தற்கொலைத் தாக்குதல் |
இறப்பு(கள்) | 65 |
காயமடைந்தோர் | 70+ |
தாக்கியோர் | ஐ.எசு-கே.பி |
2021 காந்தகார் குண்டுவெடிப்பு (2021 Kandahar bombing) ஆப்கானித்தானில் உள்ள காந்தகார் நகரத்தில் இமாம் பார்கா பள்ளிவாசலில் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாளன்று ஒரு தற்கொலை குண்டு வெடிப்பு சம்பவமாக நிகழ்ந்தது.[1] சியா இசுலாம் வழிபாட்டாளர்களின் வெள்ளிக்கிழமை பிரார்த்தனையில் இத்தாக்குதல் நடந்தது. குறைந்தது 65 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 70 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பேர் படுகாயமடைந்தனர்.[2] இசுலாமிய அரசு - கோரசன் மாகாணம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது என்று குழுவின் ஊடக பிரிவான அமாக் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.[3] குண்டூசில் உள்ள சியா பள்ளிவாசலில் இசுலாமிய அரசு - கோரசன் மாகாணம் நடத்திய குண்டுவெடிப்பில் ஒரு வாரத்திற்குப் பிறகு குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்.[4][5] இந்த தாக்குதலைத் தொடர்ந்து, சியா பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக தலிபான்கள் உறுதியளித்துள்ளனர். [6]