2022 சிகாகோ மாரத்தான்

2022 சிகாகோ மாரத்தான் (2022 Chicago Marathon) 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.அக்டோபர் 9, 2022.[1]:{{{3}}} இம்மாரத்தான் அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரத்தில் நடைபெறும் வருடாந்திர மாரத்தான் பந்தயத்தின் 44 ஆவது பதிப்பாகும். ஓர் உலக தடகள அடையாள சாலை பந்தயங்கள் நிகழ்வாக நடைபெறும் இப்பந்தயம் உலக அளவில் நடைபெறும் நான்கு பெரிய மாரத்தான் பந்தயங்களில் ஒன்றாகும்.[2]:{{{3}}}[3]:{{{3}}}[a]. இப்பந்தயம் ஆறு வாரங்களுக்கு நடைபெறும். நிகழ்வில் 40,000 பேருக்கும் மேற்பட்ட ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியாளர்கள்

[தொகு]

முந்தைய ஆண்டு பந்தயத்தில் வெற்றி பெற்ற எத்தியோப்பியாவைச் சேர்ந்த சீஃபு துரா தனது பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள மீண்டும் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[4]:{{{3}}} 2019 ஆம் ஆண்டு துபாயில் 2:03:40 மணி நேரத்தில் மராத்தான் ஓடிய இவரது சகநாட்டவரான எர்பாசா நெகாசாவௌம் பந்தயத்தில் இவருடன் சேருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.[5]:{{{3}}}[6]:{{{3}}} கென்ய நாட்டு ஓட்டப்பந்தய வீரர்களான பெர்னார்ட்டு கோச் மற்றும் எலிசா ரோட்டிச்சு ஆகியோரும் இப்போட்டிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[5]:{{{3}}}

கென்ய ஓட்டப்பந்தய வீராங்கனை உரூத் செபங்கெடிச்சு, நடப்பு சாம்பியனாக பெண்களுக்கான பந்தயத்தில் வெற்றி பெற விரும்புகிறார்.[7]:{{{3}}} எத்தியோப்பிய ஓட்டப்பந்தய வீரர்களான உருட்டி அகா மற்றும் ஏவன் அய்லு தெசே மற்றும் கென்ய ஓட்டப்பந்தய வீரர்களான செலசுடின் செப்சிர்சிர் மற்றும் விவியன் கிப்லாகாட்டு ஆகியோரும் இக்களத்தில் சேர திட்டமிடப்பட்டுள்ளனர்.[5]:{{{3}}}

அமெரிக்க சக்கர நாற்காலி தடகள வீராங்கனையான தாட்டியானா மெக்ஃபேடன், சிகாகோ மராத்தானை இதற்கு முன்பு ஒன்பது முறை வென்றுள்ளார். இவர் தனது பட்டத்தை காப்பாற்றிக் கொள்ள வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.[7]:{{{3}}}

குறிப்புகள்

[தொகு]
  1. In chronological order, the events are: the Berlin Marathon on செப்டம்பர் 25, 2022; the London Marathon on அக்டோபர் 2, 2022; the Chicago Marathon on அக்டோபர் 9, 2022; and the New York City Marathon on நவம்பர் 6, 2022

மேற்கோள்கள்

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]