நேரம் | 26 பிப்ரவரி 2022 - முதல் |
---|---|
அமைவிடம் | கிளாந்தான் மற்றும் திராங்கானு, மலேசியா |
காரணம் | தொடர் மழை |
விளைவு |
|
இடம்பெயர்ந்தது | 9 ஆயிரம் மக்களுக்கும் மேல்[1] |
2022 மலேசிய கிழக்கு கடற்கரை வெள்ளம் (ஆங்கிலம்: 2022 Malaysian East Coast Floods; மலாய்: Banjir Pantai Timur Malaysia 2022) என்பது 2022-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாத இறுதியில் தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கடற்கரையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு ஆகும்.
தீபகற்ப மலேசியாவில் குறிப்பாக கிளாந்தான் மற்றும் திராங்கானு மாநிலங்களில் பிப்ரவரி 25 முதல் பல நாட்கள் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் இவ்வெள்ளம் ஏற்பட்டது. இரு மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு வெள்ளம் சூழ்ந்தது.[2][3]மேலும் தாய்லாந்தின் அண்டைப் பகுதிகளையும் வெள்ளம் பாதித்தது.[4]
வெள்ளத்தைத் தொடர்ந்து பல ஆயிரம் மக்கள் இந்தப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். வழக்கமான வருடாந்திர வானிலை முறைகளுக்கு இணங்காத வெள்ள நேரம் காரணமாக இந்த வெள்ளம் எதிர்பாராததாகக் கருதப்படுகிறது.[5]