2023 பாகிஸ்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு | ||
---|---|---|
| ||
பொதுத் தகவல் | ||
நாடு | பாக்கித்தான் | |
தலைப்புகள் | கணக்கெடுப்பு தலைப்புகள்
| |
ஆணையம் | பாகிஸ்தான் புள்ளியியல் அமைப்பு | |
வலைத்தளம் | pbs | |
முடிவுகள் | ||
மொத்த மக்கள் தொகை | 24,14,99,431 (![]() | |
அதிக மக்கள் தொகை கொண்ட | இஸ்லாமாபாத் சேர்த்த பஞ்சாப் (12,76,81,655) |
2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு (2023 Census of Pakistan), இது பாக்கித்தான் நாட்டின் 7வது கணக்கெடுப்பு ஆகும்.[1][2][3]இக்கணக்கெடுப்பு பாகிஸ்தானி புள்ளியியல் அமைப்பால் 1 மார்ச் 2023 முதல் 31 மே 2023 வரை மேற்கொள்ளப்பட்டது.[4]இக்கணக்கெடுப்பு பாகிஸ்தானில் முதன்முறையாக மின்னணுக் கருவிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டது.[5][6][7][8]
இக்கணக்கெடுப்பின் மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் பகுதிகளான கில்ஜிட்-பல்டிஸ்தான் மற்றும் ஆசாத் காஷ்மீர் தவிர்த்து பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகை 24,14,92,917 ஆக கணக்கிடப்பட்டுள்ளது.[9][10]
2017 மற்றும் 2023ம் ஆண்டுகளுக்கு இடையில் ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.92% உயர்ந்துள்ளது.1998 மற்றும் 2017 கணக்கெடுப்புகளில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.38% ஆக இருந்தது.
6 மே 2023 அன்று பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகை 24,18,31,019 ஆக உள்ளது. இது 2017ம் ஆண்டின் கணக்கெடுப்பை விட 28.6 மில்லியன் கூடுதல் ஆகும்.[11]
இஸ்லாமாபாத் உள்ளிட்ட, ஆனால் கில்ஜித் பல்டிஸ்தான் & ஆசாத் காஷ்மீர் பகுதிகள் சேர்க்கப்படாத பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகை 23,86,59,411 ஆகும். இதுவே 2017ம் ஆண்டின் கணக்கெடுப்பில் 213.2 மில்லியன் ஆக இருந்தது.[12]
23 மே 2023 அன்று பாகிஸ்தான் புள்ளியல் அமைப்பு வெளியிட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இஸ்லாமாபாத் சேர்த்து, ( கில்ஜித் பல்டிஸ்தான் & ஆசாத் காஷ்மீர் சேர்க்காமல்) பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகை 24,95,66,743 ஆக உள்ளது.
5 ஆகஸ்டு 2023 அன்று பாகிஸ்தான் புள்ளியியல் அமைப்பின் கணக்கெடுப்பு முடிவுகளுக்கு அங்கீகாரம் வழங்கியது.[9] கணக்கெடுப்பில் பாகிஸ்தான் மக்கள் தொகை 241.49 மில்லியன் ஆக உயர்ந்து, மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.55% ஆக உயர்ந்து காணப்பட்டது. பாகிஸ்தானின் ஊரகப் பகுதி மக்கள் தொகை 61.18% ஆகவும்; நகர்புற மக்கள் தொகை 38.82% ஆகவும் உள்ளது.[9]
2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு