இந்திய 20 ரூபாய் பணத்தாள் (Indian 20-rupee banknote (₹20) என்பது இந்திய ரூபாயின் ஒரு பொதுவான பணத்தாள் வரிசையில் ஒன்று ஆகும். ₹20 என்பது மகாத்மா காந்தி வரிசை பணத்தாள்களில் அடங்கும். இந்திய ரிசவ் வங்கி மகாத்மா காந்தி வரிசையில் ₹20 பணத்தாளை 2001 ஆகத்து மாதம் அறிமுகம் செய்தது. இந்தத் தொடரில் கடைசியாக வெளியிடப்பட்ட பணத்தாள்களில் இதுவும் ஒன்று ஆகும்; இதே காலகட்டத்தில் வெளியிடப்பட்ட வேறு பணத்தாள் 2001 நவம்பரில் வெளியிடப்பட்ட ₹5 ஆகும்.[1]
20 ருபாய் பணத்தாளை இந்திய ரிசர்வ் வங்கியானது 1972 இல் அறிமுகப் படுத்தியது. இந்த வரிசையானது தற்போதுவரை புழக்கத்தில் உள்ளது.[2] இந்த பணத்தாளின் அறிமுகத்துடன், ரிசர்வ் வங்கி சிங்க முத்திரை தொடர் பணத்தாள்களில் பெரிய மறுவடிவமைப்பைத் தொடங்கியது.
₹20 பணத்தாளில் மகாத்மா காந்தி வரிசையானநு 147 × 63 மிமீ அளவில் சிவப்பு-ஆரஞ்சு நிறத்தில், முன்பக்கம் மகாத்மா காந்தி படத்தைக் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பத்துடன் இருக்கிறது. இந்தப் பணத்தாள் மதிப்பை பார்வையற்றோர் அடையாளம் காண ஏதுவாக பிரெயில் அம்சம் உள்ளது. பணத்தாளின் பின்பக்கம் ஹாரிட் மலை மற்றும் போர்ட் பிளேர் கலங்கரை விளக்கம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
2011 இக்குப் பிறகு, வெளியிடப்பட்ட புதிய ₹20 தாள்களில் இந்திய ரூபாய்க் குறியீடு ₹ இடம்பெற்றது.[3][4] 2005 க்கு முன் அச்சிடப்பட்ட பணத்தாள்கள் 2014 மார்ச்சு 31 முதல் புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி 2014 சனவரியில் வெளியிட்டது. பின்னர் காலக்கெடுவை 2015 சனவரி 1 வரை நீட்டித்தது. இந்த காலக்கெடு மேலும் 2016 சூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது.[5]
மற்ற இந்திய ரூபாய் நோட்டுகள் போல, ₹20 பணத்தாள்களிலும் 17 இந்திய மொழிகளில் பணத்தின் மதிப்பு எழுதப்பட்டிருந்தது. இந்த நோட்டுகளின் முதல்பக்கத்தில் முதன்மையாக ஆங்கிலம், இந்தியில் பணத்தின் மதிப்பு எழுதப்பட்டுள்ளது. நோட்டின் பின்பக்கத்தில் இந்தியாவின் 22 அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகளில் 15 மொழிகளில் நோட்டின் மதிப்பு வரிசையாக எழுதப்பட்டுள்ளது. இந்த மொழி வரிசையானது அகரவரிசையில் இடம்பெற்றிருந்ததன. மொழிகளின் வரிசை பின்வருமாறு: அசாமி, வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, சமசுகிருதம், தமிழ், தெலுங்கு, உருது.
ஒன்றிய நிலை அலுவல் மொழிகள் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மொழி | ₹20 | ||||||||||
ஆங்கிலம் | Twenty rupees | ||||||||||
இந்தி | बीस रुपये | ||||||||||
மாநில நிலை அலுவல் மொழிகள் 15 | |||||||||||
அசாமி | বিছ টকা | ||||||||||
வங்காளி | কুড়ি টাকা | ||||||||||
குசராத்தி | વીસ રૂપિયા | ||||||||||
கன்னடம் | ಇಪ್ಪತ್ತು ರುಪಾಯಿಗಳು | ||||||||||
காஷ்மீரி | وُہ رۄپیہِ | ||||||||||
கொங்கணி | वीस रुपया | ||||||||||
மலையாளம் | ഇരുപത് രൂപ | ||||||||||
மராத்தி | वीस रुपये | ||||||||||
நேபாளி | बीस रुपियाँ | ||||||||||
ஒடியா | କୋଡିଏ ଟଙ୍କା | ||||||||||
பஞ்சாபி | ਵੀਹ ਰੁਪਏ | ||||||||||
சமசுகிருதம் | विंशती रूप्यकाणि | ||||||||||
தமிழ் | இருபது ரூபாய் | ||||||||||
தெலுங்கு | ఇరవై రూపాయలు | ||||||||||
உருது | بیس روپیے |